
ஒரு ஊரில் இரண்டு செல்வந்தர்கள். ஒரு செல்வந்தர் பெயர் அ.
இரண்டாவது செல்வந்தர் பெயர் ஆ.
அ என்பவரின் செல்வம் பெருகிக் கொண்டே போகிறது காரணம் அவர் தர்ம சிந்தனை உள்ளவர். தினமும் 50 ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டு, பணமும் கொடுப்பார். சுற்று வட்டாரத்தில் அவர் புகழ் பரவி, குறைவில்லாத செல்வமும் பெருகிக் கொண்டே போகிறது. ஆ வோ கஞ்சன் என்று பெயர் எடுத்தவர். யாரும் அவரைப் பார்க்க வருவதே இல்லை. ஆ வின் செல்வம் குறைந்து கொண்டே போயிற்று. ஒரு முனிவரைப் பார்க்கிறார் ஆ. முனிவர் அவரையும் தருமம் செய்யும்படி பணிக்கிறார். ஆ அடுத்த நாளிலிருந்து பெரிய விளம்பரம் செய்து தர்மம் செய்ய முற்படுகிறார். ஆனால் யாரும் அவர் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அன்னதானம் ஏற்பாடு செய்தது எல்லாம் வீணாகி விட்டது. ஒரு நாள் இரண்டு நாட்கள் மட்டுமல்ல பல நாட்களும் அப்படித்தான்.
