சொல்வதற்கு/கவிஞர் விக்கிரமாதித்யன்

சொல்வதற்கு
ஒன்றுமில்லை
கேட்பதற்கும்
ஒன்றுமில்லை
நம்புவதற்கும்
ஒன்றுமில்லை
கடைபிடிப்பதற்கும்
ஒன்றுமில்லை
வாழ்வதற்கு
ஒன்றுமில்லை
வருத்தப்படுவதற்கும்
ஒன்றுமில்லை
ஆவதற்கும்
ஒன்றுமில்லை
அழிவதற்கும்
ஒன்றுமில்லை
ஒன்றுமில்லாத உலகத்தில்
உண்டு பண்ண என்ன உண்டு