
காலையில்
பெங்களூர் குளிர்
ரம்மியமாக இருந்தது
உயர உயரக் கட்டிடங்கள்
கம்பீரமாக வீற்றிருக்க
உலகமே பெட்டிகளின்
இருப்பிடமாக
மாறி விட்டது
12வது மாடியில்
ஒரு பெட்டியில்
எல்லோரும் கூடியிருக்க
பேசிக் கொண்டிருந்தோம்
பேசிக்
கொண்டிருந்தோம்
இன்று
என்ன செய்யப் போகிறாய் என்ற
கேள்வி என் முன்
சுழன்றவண்ணம்…
