மீனாக்ஷி பால கணேஷ்/என் அம்மாவின் நினைவாக….

நான் இன்று மட்டுமே அம்மாவைநினைவு கூரவில்லை. நான் வாழும் ஒவ்வொரு நொடிக்கும்அவளே சாட்சியாக நிற்கிறாள். அம்மா!எங்கேனும் வலித்தால் அம்மா!எதனையாவது ரசித்தால் அம்மா!விளக்கேற்றினால் அம்மா!அடுப்படியில் சமையல் குறிப்பைநினைவுகூர்ந்தால் அம்மா! எங்கெங்கும் என்றென்றும்என் வாழ்வில் அம்மாவின்ஆதிக்கமே! மறந்தால்தானேநினைப்பதற்கு?என் தாயின் ஐம்பது சதம் நான்!அவளே தன் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/அன்னையர் தினம்

என் அம்மா அம்மா என்றால் அன்புஅவளைப் போல் பொறுமை காக்கஅவளால் மட்டுமேமுடியும். பாசம் அவள் மந்திரம்புன்னகை அவள் மொழி என்றும் என் அழகுதெய்வம் அவளே.அவள் இன்றி நான் ஏது? 12.05.2024

>>

பி. ஆர்.கிரிஜா/அன்பின் அடையாளம்

ஒரு மணி நேரமாக அந்த கிராமத்து மரத்தடியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார் ஆறுமுகம். பஸ் வந்தபாடில்லை. கால் துவண்டு போனது.ஒரு வழியாக பஸ் வருவதைப் பார்த்து ஒரு நிம்மதிப் பெரு மூச்சு விட்டார். அடுத்த கிராமத்தில் இருக்கும் அண்ணனுக்கு உடம்பு …

>>

அனைவருக்கும் நமஸ்தே !!!

தியாகராஜ சுவாமிகள் நாரதா பஞ்சரத்ன கிருத்திகளை இயற்றியுள்ளார். நாரதா முனிவரின் புகழும் வகையில், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் வேதங்கள் மற்றும் உபநிஷத்துக்கள் மீது புலமை பெற்றவர். நாரதா முனிவர் பற்றிய தொகுப்புகள் கர்னாடிக இசையில் மிகப் பெரியவை. தியாகராஜ சுவாமியால் நாரதா …

>>

கலாட்டா கல்யாணம் / ரேவதி ராமச்சந்திரன்

சுனிதாவின் கல்யாணத்தைப் பற்றித்தான் ஆபீஸில் ஒரே பேச்சு. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? தன் னுடன் வேலை பார்க்கும் ஒரு மராட்டி பையனைக் காதலிக்கிறாள். சுந்தரத்தின் காதலை பற்றிp வீட்டில் சொல்லும்போது மகன் மேல் உள்ள நம்பிக்கையினால் அவர்கள் உடனே சரி …

>>

சாய்ரேணு சங்கர்/பின்பக்கம்

=========== “என்னவோ இராமபத்ரன், உன் வீட்டுக்கு வந்தாலே ஒரு நிம்மதி, சந்தோஷம். சுத்தமா, கலைநயத்தோட இருக்கு” என்றான் அனில். அந்த வீட்டு மனிதர்கள் – கணவன், மனைவி இருவருமே – மட்டும் என்ன, விருந்தோம்பலில் சளைத்தவர்களா, இல்லை வேடிக்கையாகவும் ஒட்டுதலாகவும் பேசுவதில் …

>>

அன்பு என்னும் பெருமந்திரம்நாய்க்காரப் பெருமாட்டி/பென்னேசன்

உங்கள் குழந்தைகளும் கணவரும் என்ன செய்கிறார்கள் என்று கதைசொல்லி கேட்க, குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்து பின்னர் இந்த நிறுவனத்தின் வருமானத்தில் கால்நடை மருத்துவர்களாக ஆக்கி அவர்கள் இதே மையத்தில் சேவை செய்கிறார்கள் என்கிறாள். தன்னை விட்டுப் பிரிந்த கணவன்,

>>

கடற்கரய் மத்தவிலாச அங்கதம் பதிவு

என்னுடைய 14 வயதில் குடும்ப விளக்கு புத்தகத்தின் உள்தாளில் அச்சாகி இருந்த பாரதிதாசன் படத்தை தனியே கிழித்து அதற்கு சட்டகம் செய்து வீட்டில் கொண்டு போய் மாட்டினேன். என் அப்பா இவரை பாண்டிச்சேரியில் எங்கோ பார்த்திருக்கிறேன். ஆனால், பெயர் ஞாபகம் வரல …

>>

சசிகலா விஸ்வநாதன்/உலக புத்தக தினம்

அழகிய சிங்கரின் என்பாவாக என் பா என்பா சரமாக இன்றுபாடப் புத்தகம் இன்று உலக புத்தக தினம்! “அப்படியா” என்றது என் மனம்! பாடப் புத்தகங்களைப்படித்ததினால் மட்டுமே மனம் நிறை வாழ்வு. 🪷 நூலகத்தில் வேண்டிய புத்தகங்கள் இருந்தன. அறிவியல் சஞ்சிகைகள் …

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

19/4/24 அனுபவம் பச்சைக் கொத்துமல்லிரசம் வைக்கவேண்டுமென்றாள் மனைவிவுட்லேண்ட் ஹில்ஸில்அமேசான் கடைக்குப் போனேன்சிறு கத்தைடாலர் ஒன்றுக்கு வாங்கி வந்தேன்பார்த்த மருமகள்இது பார்ஸ்லே என்றாள்வாயில் போட்டுப் பார்த்தேன்சுவையில் ஏதோ ஓர் நெடிதிரும்பக் கொண்டு கொடுகடையில் என்றாள் மனைவிஉரிய பில்லோடுகடைக்குப் போனேன்அமேசானில் அதே உபசரிப்புஅதே மரியாதைகொத்துமல்லிக் …

>>

ந.பானுமதி கவிதைகள்

இணைப்பு ஐந்து புள்ளி ஐந்து வரிசை கோலம்முதல் வரிசை சீராகஇரண்டாம் வரிசையில் புள்ளிகள் விலகிமூன்றாம் வரிசையில் புள்ளிகள் நெருங்கிநாலாம் வரிசையில் இரண்டிரண்டாய் ஒன்றை மட்டும் விடுத்துஐந்தாம் வரிசையில் மீண்டும் சீராகஅழிக்க மனமில்லைவளைவுகளாலும் கோடுகளாலும் பிணைத்ததில் என் அன்னை பூமி மகிழ்ந்து எழுந்தாள்.கோணி …

>>

“”கைராட்டை கோபம் “/ராஜாமணி

(வணக்கம் 12.4.24 வெள்ளிக்கிழமை அன்று அழகிய சிங்கரின்- விருட்சம் அமைப்பு நடத்தும் 80 ஆவது கதைஞர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில்)எழுத்தாளர் தஞ்சாவூர் கவிராயரின்என்ற கதையை பற்றிய எனது உரை .கைராட்டை கோபம் இந்தக் கதையில் தனது அப்பாவை பற்றி அவரது மகன் சொல்லுவதாக …

>>

ஆர்க்கே/குரோதி புத்தாண்டு!

எல்லைகள் விரியஎண்ணங்கள் சிறக்க பெருமைகள் பெருகசிறுமைகள் குறைய நன்மைகள் திகழதீமைகள் அகல வளமது கொழிக்கவன்மம் தொலைக்க எழுத்துக்கள் மந்திரமாகசெயல்கள் சரித்திரமாக சிரிப்பே அமிர்தமென்றாகசிந்தனை தீர்க்கமென்றாக ஒற்றுமை உலகாளவேற்றுமைகள் நிலம்வீழ காற்றில் கீதம் தவழபாட்டினில் செறிவுதெறிக்க யாவையும் நலமாய் விளையஞாலமே அன்பால் இணைய …

>>

பானுமதி/மாலை நேரத்து விடியல்

வெள்ளை நிற மேகத் துகள்கள் மாலை நேரத்து செவ்வானத்தில் கலை ந்து போவதை, வானம், காயம் பட்ட இதயம் போல் சிவப்பாக மாறியதை, கொஞ்சம் கொஞ்சமாக இருள் கவிழ்ந்து வருவதை அருந்ததி வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தா

>>

வைதேகி/வாழத்தெரிகிறது

30 வது இணையகாலக் கவியரங்கம். தேர்வு நடைபெறுகிறது.பிள்ளைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.பள்ளி வளாகம் மௌனத்தைஇழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது.பாதாம் மரநிழலில்எதையோ கொறித்தபடி இருக்கிறதுஓர் அணில்.வெயில் தகிப்பை அதிகரித்தபடிமெல்ல மெல்ல நீள்கிறது.கருணையாய் வீசும் காற்றில்சருகுகள் இடம் பெயர்கின்றன.தன்னிருப்பை உணர்த்தஎங்கிருந்தோ கரைகிறது காகம்.வேடிக்கை பார்த்தபடியிருக்கும் எனக்கும்நிகழ்காலத்தில் வாழத்தெரிகிறதுநெடுநாட்களுக்குப் பிறகு….. …

>>

வைதேகி/ஒப்பந்தம்

26வது இணையகாலக் கவியரங்கம் வெயிலின் தாக்கத்தால் வெளியேதலைகாட்டாது வீட்டில் அடைந்து கிடக்கும்மனிதர்தம் புலம்பல் நீங்கவெம்மையைத் தணிக்க வேண்டிவிதம் விதமாய் கிளைகளையும்இலைகளையும் அசைத்துகாற்றுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நன்முறையில் கையெழுத்தானதாய் கட்டியம்கூறுகிறது மரம். .

>>

சசிகலா விஸ்வநாதன்/முகமூடி

இனிய மாலை வணக்கம்இணைய கால கவியரங்கம்சனிக்கிழமைகவிதையின் தலைப்பு நாளும் ஒரு முகமூடிநான் அணிகிறேன்; உண்மை! மெய்யாகத்தான் இதை சொல்கிறேன்; முகமூடி எதுவும் இல்லாமல்… நான்;நானாக நானிலத்தில் இருக்கலாகுமோ? ஓரு ஆங்கில பழமொழி போல்ஆளுக்கு ஒரு நீதி; அதுமட்டும் போதாது;நேரத்திற்கு நேரம் அதுவும் …

>>

உஷா தீபன் அவர்களின் எதிர்பார்ப்புகள்/ நாகேந்திர பாரதி

நன்றி அழகிய சங்கர். ‘எதிர்பார்ப்புகள் ‘உஷா தீபன் அவர்களின் ‘எதிர்பார்ப்புகள்’ சிறுகதை. இந்த எதிர்பார்ப்புகள் சிறுகதையை நான் எப்படி சொல்லப் போகிறேன் என்ற எதிர்பார்ப்பும் அழகியசிங்கருக்கும் , இந்தக் கதையைப் படித்தவர்கட்கும் இருக்கலாம். கொஞ்சம் தடுமாறினாலும் வார்த்தைகள் வசம் இழந்து போகக்கூடிய …

>>

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து/

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்? அதற்கு அந்த பிச்சைகாரன்: “சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. …

>>

தெலுங்கில் :பி. சத்யவதி/சூப்பர் மாம் சிண்ட்ரோம்

மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்(மார்ச், மங்கையர் மலர்,2011) “புராணத்தில் சுமதி சூரியனை தடுத்து நிறுத்தி விட்டாற் போல் அனுராதா காலச்சக்கிரத்தை நிறுத்திவிட்டாளா என்ன?” நினைத்துக் கொண்டார் சுவாமிநாதன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டே.“காலச்சக்கிரம் நின்றுவிடவில்லை. அனுராதாதான் நின்று போய்விட்டாள்” என்பது போல் …

>>

அழகியசிங்கர்/தண்ணீர்

பல ஆண்டுகளுக்குமுன்னால்பக்கெட்டில்தண்ணீர் பிடித்துவரநானும் தம்பியும்பக்கத்துத்தெருவிற்கு ஓடியிருககிறோம்!அப்போதுவாடகை ₹ 65 கொடுத்துவாடகை வீட்டிலிருந்தோம் திரும்பவும்தண்ணீர் கஷ்டத்தைஉணர்ந்ததுசொந்த அடுக்ககத்திற்குவந்தபோது..அப்போது காய்ந்துபோனகிணற்றைப் பார்த்துகண் கலங்கினேன்கொஞ்சம் தூற்றல் போட்டால் போதும்துளிர்த்திடும் கிணறு இன்றுஉலகம் முழுவதும்இதுஒரு பிரச்சினை! இதெற்கெல்லாம்ஒரேதீர்வுகடவுள் மழையைப்தேவையானபோதுதந்தருள வேண்டும்

>>

கல்யாண்ஜி கவிதை

இன்று ஒரே ஒருசிட்டுக் குருவியையாவதுபார்த்து விட வேண்டும்.ஒரு கூட்டையாவதுஒரு வைக்கோல் துரும்பையாவதுஒரு புழுவையாவதுஒரு தானியத்தையாவது.எதுவும் வசப்படவில்லையெனில்எப்போதும் போலவானத்தையாவது. 2021

>>

கசடதபற இதழ்

மூன்று கவிதைகள் நகுலன் 1. நாலும் நடந்தபின்நானாவிதமாக என் மனம்போன பின்நானொரு மரமானேன் 2.நின்றநிலை தவறாமல்சென்றவிடம் சிதறாமல் ஈன்ற தாயினும்இறந்து மறைந்ததந்தையினும்சாலச் சிறந்ததுஒன்றுன்றுன்றுன்றுஇன்று வரை காலஞ் செல்லச் செல்லச் செல்லக்கோலங்கள் கலையும்கைவல்ய ஞானம் கிட்டும்இன்று வரை ஏதோ தாள் கண்ணில் பட்டது. …

>>

விமர்சனம்/வைதேகி

உயிருடன் இருக்கப்போகிற வரை பிரதமர் வரும் வரை வெண்டிலேஷனில் வைத்தாவது காப்பாற்ற வேண்டும்  என மருத்துவர்கள் பேசிக் கொள்வது

>>

அழகியசிங்கர்/அப்பா

அப்பா படுத்தப் படுக்கையாக இருந்தார்எல்லாம் படுக்கையில்நகர முடியாமல்அவர் பார்க்குமிடத்தில்கடிகாரம் .இப்போதுகடிகாரம் நின்று விட்டது

>>

அனங்கன்/போதையை நாம் நெருங்கக் கூடாது…..

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்போதையை நாம் நெருங்கக் கூடாது…அதுபுகழ் போதையானாலும்காதல் போதையானாலும்… காதலற்ற மானிடத்தில் வாழ்வது எங்ஙனம்…மற்ற உயிர்களுக்கு இல்லாத உலைச்சல் இந்த மனிதர்களுக்கு… எதோ ஒரு போதைதானே வாழ்வதற்கு உந்துதலை கொடுக்கிறது…எழுதுகின்ற போதைக்கு என்னைக் கொடுத்தபிறகு…போதையை நாம் நெருங்கக்கூடாது….அது நெருங்கினால் பரவாயில்லையா…! நல்லகதை.♦.

>>

ஆர். வத்ஸலா/இரு கவிதைகள்

:சுயம்–இது நானா?எனக்குள்ளேயா இச்சக்தி?என் மூச்சா இச்சூறாவளி!என் மனதிலா இவ்வானந்தம்!என்னுள்ளா இப்பயமின்மை?என் கால்களா ஊன்றிக் கொண்டன?எனக்கா இச்சிறகுகள்? எங்கே என் கேள்விகள்?தயங்கித் தயங்கி உயிர் வாழ்ந்த நான்எப்பொழுது என்னை உயிர்ப்பித்துக் கொண்டேன்? ஓ! எனக்குத் தெரிந்து விட்டதுஎன் வாழ்வு இவ்வுலகம் எனக்கு இட்ட …

>>

பி. ஆர். கிரிஜா

தெருவில் பேருந்துஓடிக் கொண்டிருக்கிறது (அழகியசிங்கரின் என்பா வகைமை) பத்து வரி கவிதை தெருவில் பேருந்து ஓடிக் கொண்டிருக்கிறதுசிலர் ஏறுவர், சிலர் இறங்குவர்பலரின் வாழ்வும் ஓடுவது பேருந்துவின்விடாத ஓட்டத்தால்காளையர் கன்னியர்காதல் வாகனம் பேருந்துபார்வை அற்ற பிச்சைக்காரனையும்வாழ வைப்பது பேருந்துபேருந்து அனைவரின்அத்தியாவசியம் ! 26/02/2024

>>

அழகியசிங்கர்/

மறந்து போன பக்கங்கள்…. தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள ஆறாவது கவிதை பழம்பெருமை. நெளிந்தது புழு என்று ஏன சொல்கிறார்? குலப்பெருமை பேசி என்ன பயன் என்கிறாரா? ஒரு புதுக்கவிதையைப் படிக்க படிக்க பலவிதமாக யோசனை செய்துகொண்டே …

>>

ரவி ஆதிரன்/பார்பி பொம்மை

“அப்பா , நல்ல வேலை. கொஞ்சம் நேரம் பிரீயா உக்கார முடியுது” “சரியா சொன்ன. கடைசி ஒரு வாரமா அந்த ஹேமா பெண் நம்மளை மாத்தி மாத்தி விளையாடிட்டு இருக்கா. தூங்கும்போது கூட, அவளோட பெட்ல தான் இருக்கோம்.” “கடையில் இருந்த …

>>

டோஜன் கவிதை

மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன் பூவின்இதழ்கள் உதிர்கின்றன;நாம் அவற்றைவிரும்பியபோதிலும்.புல்லின்இலைகள் வளர்கின்றன;நாம் அவற்றைவிரும்பாதபோதிலும்.

>>

ஜெ.பாஸ்கரன்/ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம்

(நூல் அறிமுகம் – திரு வி எஸ் வி ரமணன்) மூதறிஞர் ராஜாஜி அவர்களைப் பற்றி வந்துள்ள நூல்களில் சிலவற்றை நான் வாசித்திருக்கிறேன். அவரது கட்டுரைகள், ஜெயில் அனுபவங்கள், மோனிகா ஃபெல்டன் நேர்முகம் கண்டு எழுதிய ‘RAJAJI’ , சாகித்திய அகாதமியின் …

>>

சசிகலா விஸ்வநாதன்/எதிர் சேவை

🌺 🌺 வளமோடு வாழவிரிந்த வீடும்;காப்புடன் இருத்தலுக்கான பெருங்கதவும்,உதவுமா?அந்தகன் ஓலைவந்தாங்கே; கையாலாதே!அழுது தவித்து நிற்பீரே!வளமோடு வாழுங்கால்,களிப்பாகக் களத்தில் இறங்கி எளியோரை உயர்த்திட்டால்;பெறற்கரிய பெருவீட்டின் பெருவாசல் தானேவிரிந்து திறக்க; பரமன் வந்து சேவித்து இருப்பானே! 6-2-2024மாலை மணி 5.30

>>

சிறகு இரவி/புகைப்பெண்

#கனவில் புகை மூட்டமாக தெரிந்த அந்த பெண்ணை எங்கோ பார்த்து இருக்கிறேன். எங்கு? அலுவலக முகங்கள், பேருந்து வடிவங்கள், வழியில் பார்த்தது? எங்கு?அந்த புகை ஒரு குறியீடா?யெஸ்! மயில் பீலியால் சாம்பிராணி போடும் பாய் உடன் வரும் அவர் மகள் பாத்திமா! …

>>

அழகியசிங்கர்/கவிதை எழுதுபவர்கள்

கவிதை எழுதுபவர்கள்கடவுளுக்கு சமம்ஆனால்கவிதை எழுதுபவருக்குத்தெரியாது அவர்கள் தங்கள்கவிதைகளைப் யாரும் படிக்கவில்லைஎன்று மற்றவர்களுடன்சண்டைப் போடுகிறார்கள் அவர்களுக்குப்புரியாத புதிர்அவர் கவிதைகளைஎழுதியவுடன்ஒருவர் படித்து விடுகிறாரென்று

>>

சசிகலா விஸ்வநாதன்/நன்றியுடன அவர்…நிம்மதியில் நான்…

மத்தளம் கொட்டவரிசங்கம் நின்றூதமுத்துடைத்தாமம் நிரை சார்ந்த பந்தற்கீழ்மைத்துனன் நம்பிமதுசூதன் வந்தென்னைகைத்தலம் பற்றக்…கனா கதவு தட்டும் ஓசையில்பாதியில் தடை பட்ட கனா! அம்மாவும் அப்பாவும்;கண்ணில் ஆற்றாமைஆதங்கம்…மணமகன்,தயக்கம், பயம்அருளற்ற மருளும் விழி;இன்னும் பின்னே இருவர்,வெருவலுடன் கூடிய வெற்றுப் பார்வை ; எவரும் எதுவும் இயம்பிடும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/ஆறு மனமே ஆறு

இனிய மாலை வணக்கம்சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்புதன் கிழமைமாலை மணி 5-15கவிதையின் தலைப்பு பணி முதிர்வாகிபல்லாண்டாகியது.நீஒரு முற்றுப்புள்ளி.தரை இறங்கிய கனி.கரை ஏறிய கட்டுமரம்கீழெறக்கிய பட்டம்பொழிந்த வெறு மேகம் …நிகர்மனது ஏங்கும்மத்தியில் நிற்க;விரல் நீட்டி ஆணையிட;குரல் உயர்த்திப் பேச;அது உன் இடம்இல்லை …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/சொடுக்குக் கதைகள்

1.இல்லாத ஒன்றை இருக்கு என்று சொல்வது நல்லது இல்லை.இல்லை என்று சொல்வதும் நல்லா இல்லை. 2.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் .முதியவர்களும் ஒரு வித குழந்தைகள் தானே!

>>

கலைச் செல்வி

அப்படியொன்றுமில்லைஆனால் நல்லது இந்த முறை வந்த கனவு கொஞ்சம் புதியதாக இருந்தது. கனவில் நிறைய இடங்களில்ஒன்றுமே பேசாமல்நான் நின்று கொண்டிருக்கிறேன் இல்லாது போக நடந்து கொண்டிருக்கிறேன்அவ்வளவுதான். ஏன் பேசவில்லை.? என்கிறார்கள்பேசினால் தான் என்ன.?என்கிறார்கள்பேசிவிடு என்கிற குரல் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது …

>>

ஜெ.பாஸ்கரன்/காலங்களில் அவன் வசந்தம்!

நிகழ்ச்சிகளைத்தான் பார்த்திருக்கிறேன். கடைசியாகப் பார்த்தது, பாலமுருகன் அவர்களின் மகன் பங்கேற்ற நிகழ்ச்சி – சிவாஜி படங்கள், பாலமுருகன் வசனங்கள் இவற்றுடன், கண்ணதாசன் பாடல்களைப் பற்றியும் பேசினார்கள்

>>

சுரேஷ் ராஜகோபால்/”கனவிலே கரும்புத் தோட்டம்”

கனவிலே கரும்புத் தோட்டம்போட்டு ரசித்தேன்இனிமையாக இருந்ததுகனவிலும் கரும்பு இனிக்கும் தானே . 1 எல்லோருக்கும் கரும்பு பிடிக்கும்அதனை வெட்டி எடுத்துதுண்டுகளைக் கடித்து சாற்றினை ருசித்துபின்பு கடித்தது துப்பவேண்டும். 2 கரும்பை நினைத்தாலே வாயூரும்கடித்துச் சுவைத்தால் சொல்லி மாளாதுகடித்தால் பல்லுருதி பெரும்பொங்கலுக்குப் பொங்கல் …

>>

சுரேஷ் ராஜகோபால்/எண்கள் வரிசை

ஒன்றுஇரண்டுமூன்று என்று நூறுக்கு மேல்ஏறுவரிசையில் சொல்லிக்கொண்டே போகலாம். 1 எண்களும் சிரித்துக்கொண்டேநம்மோடு பயணிக்கும்எண்களுக்கு ஏற்றமும் இல்லைஇறக்கமும் இல்லையார் சொன்னாலும், 2 அது அப்படியேவரிசையில் வரும்யாராவது தவறாகச் சொன்னாலும்மாற்றி மாற்றி எழுதினாலும்எண்கள் வரிசை என்றும் மாறாதே. 3 சிட்லபாக்கம்.09 01 2024 மாலை …

>>

புவனா சந்திரசேகரன்/தேஜாஸ் வண்டியில் பயணம்

ஓடும் புகை வண்டியில் விடாமல் பதிவு செய்திருக்கிறேன்பின்னணி இசையுடன் எனது கவிதை. 🥰🥰🥰. சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்க்க மதுரையில் இருந்து தேஜாஸ் வண்டியில் பயணம். 83 ஆவது இணைய காலக் கவியரங்கம் நான் அவனில்லை அந்நியன் ஒருவன்எனக்குள் ஒளிந்திருக்கிறான்!அவ்வப்போது தலையை …

>>

நாகேந்திர பாரதி/நிழல்கள்

அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 82 நானும் அவளும்பேசிக் கொண்டு சென்றோம்உரசிக் கொள்ள வில்லை எங்கள் நிழல்கள்உரசிக் கொண்டு சென்றனபேசிக் கொள்ள வில்லை நாங்கள் பிரிந்தபோதுஎன்னுடைய நிழலாக அவளும்அவளுடைய நிழலாக நானும்

>>

அழகியசிங்கர்/மஞ்சள் நிறச் சட்டை..

பரமசிவன் தன் இருப்பிடத்தின் பக்கத்துல இருக்கிற மூதாட்டியை தினமும் கவனித்துக் கொண்டு வருகிறான். அவள் கழுத்துல இருக்கிற தங்கச் செயின்தான் அவன் குறி. மூதாட்டிக்கு வயது 85இருக்கலாம். அன்று அவள் வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற கடைக்குச் சென்று வீட்டிற்கு வேண்டிய மளிகை …

>>

பாட்டுக்கொருதலைவன்/நாகேந்திர பாரதி

அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 81 பாடுபடும் மக்களுக்கேபாட்டுச் சேர வேண்டும் அவர்ஓடாகி உழைக்கையிலேஉற்சாகம் வர வேண்டும் அவர்களைப்போடு படுக்கையிலேகளிப்புத் தர வேண்டும் இதைத்தந்தவன் ஒரு கவிஞன்தரணி புகழ் புலவன் அவன்வாழ்க்கையும் திறப்புவசனமும் சிறப்பு அவன்கவிஞரின் அரசன்எங்களின் நேசன் அவன்கண்ணனின் …

>>

கலைச்செல்வி/சொல்வதெல்லாம்

.. இருந்திருந்து கட்டங்கடைசியாய்போயும் போயும்அந்தப் பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டிருக்கக் கூடாது தான்என் அரதப் பழசானகாதல் கவிதைகளை. தூசு தட்டி தூக்கி தூரப் போடாமல்படித்துவிட்டு பத்திரமாய் வைத்திருக்கிறார்போலும் எப்போது கடைதாண்டிப்போனாலும்முதலில் கடைக்காரர் பின்இந்த இங்கிதம் தெரியாத கவிதைகள்இரண்டும்சிரித்துத் தொலைக்கின்றன 6.1.20024தாராபுரம்

>>

டார்க் லேடி ( இருள் பெண் )/மூலம் – ஷேக்ஸ்பியர்

மொழிபெயர்ப்பு – தங்கேஸ் மொழி பெயர்ப்பு கவிதை SONNET 138 ஷேக்ஸ்பியர் என்ற ஒப்பற்ற கவியின் மேதமைக்கு இதுவும் ஒரு சான்று ஷேக்ஸ்பியரின் 26 சானட்களில் தொடர்ந்து கதாநாயகியாக வரும் பெண் முகம்காட்ட மறுப்பவள் கவிஞரின் காதலியாக இருக்கலாம் ஆனாலும்கவிஞருக்கு மட்டுமே …

>>

சுரேஷ் ராஜகோபால்/பருவகாலம்

சொல் புதிது, இணைய கால, கவி அரங்கம், தேதி 02.01 2024 கிழமை செவ்வாய் , நேரம் மாலை 05.10,” பருவகாலம் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். அதிகாலை முதல் நள்ளிரவு தாண்டியும்குளிர் நடுங்க …

>>

எஸ் . சண்முகம் கவிதை..

கூடாரத்திற்குள் எல்லோருடனும் அமர்ந்துள்ளேன்ஒருபக்கம் சர்க்கஸ் கோமாளிஅடுத்த இருக்கை நெடுநேரமாகஅமர்வாரின்றி இருக்க மிருகங்கள் மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாகபாய்ந்தோடுவதைக் கண்டுகைதட்டலும் கரகோஷமும் எழும்போதுஇடையில் சிலர் மட்டும்எதிர்வினை செய்யாதிருப்பது போலுள்ளனர் உயரத்திலிருந்து தொங்கும் கயிறுகளின் நடுவிலுள்ள கட்டைகளைப் பிடித்துக் கொண்டுஎதிரெதிர் திசையில் பறந்து திரும்புகின்றனர்ஓரிருவர் கீழே …

>>

அழகியசிங்கர்/புத்தாண்டு வாழ்த்துகள்

நேற்று முழுவதும்கொட்டம் அடித்தார்கள்எங்கள் தெருவில்எனக்குத் தூக்கம் வரவில்லைஒரு பொடியன்டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான்புத்தாண்டு பிறந்தது.. நான்புத்தகம் எதையாவதுபடிக்க வேண்டுமென்றுநினைத்தேன்

>>

பாலசாண்டில்யன்/ஈக்களும் தேனீக்களும் ஒன்றல்ல

மினிகட்டுரை தேனீக்கள் பொதுவாக கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஈக்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். தேனிக்கள் மனிதர்களை தேள் போல கொட்டும். அந்த வலி பொறுத்துக்கொள்ள முடியாது. தேனீக்களுக்கு புரோபோஸ்கிஸ் என்ற நாக்கு உண்டு. அவை பூக்களில் இருந்து தேனை …

>>

சுரேஷ் ராஜகோபால்/தாமு மாமா

சொல் புதிது, இணைய கால, 69வது கவி அரங்கம், தேதி 27.12 2023 கிழமை புதன் , நேரம் மாலை 05.10,”தாமு மாமா ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். “ செய்யாத குற்றத்துக்குஅவன் மீதுஅப்பாவிடம் …

>>

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவை ஒட்டி../சோ.தர்மன்

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவை ஒட்டி அவருடனான நினைவுகளைப் பகிர்ந்தவர்கள் அனைவருமே சொன்ன ஒருமித்த கருத்து அவருடைய விருந்தோம்பல் பற்றி சிலாகித்தது.அனைவருக்கும் பாகுபாடின்றி சமமாக உணவளித்தது.தமிழ்கலாச்சாரத்தில் உணவின் இடமும் விருந்தோம்பலின் இடமும் மிகவும் முக்கியம்.“நோக்கக் குழையும் விருந்து”என்கிறான் அய்யன் வள்ளுவன்.ஒரு பெரிய …

>>

யோகி ராம்சுரத் குமார் என் தந்தையின் நாமமாகும்…/அவினாஷ் ஸ்ரீகாந்த்

என் தந்தை, எல்லா காரியங்களையும் அவர் போக்கிலேயே செய்வார். அவருடைய வழிகள், அறிவதற்கு கடினமானவை. அவர் ஏன் ஒரு காரியத்திற்கு, ஒரு குறிப்பிட்ட நபரைத் தேர்ந்தெடுக்கிறார், மற்றவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியாது. அதனால், அவர் மேல் நம்பிக்கை …

>>

சுனாமி நினைவலைகள்/நாகேந்திர பாரதி

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 69 ——————————போதுமடி கடல்தாயே நிப்பாட்டுபோனமுறைக் காயமின்னும் ஆறவில்லைமோதிவந்து கோபத்தில் முட்டாதேமுன்னிருந்த பாசமெல்லாம் என்னாச்சு பூமிக்குப் பிறந்தவளே பொறுமை காட்டுபுறப்பட்டுக் கரை தாண்டி வாராதேமீனுக்குப் பசியென்றால் பாசி கொடுமீனவரை உணவாக்க எண்ணாதே பிள்ளைகுட்டி குடும்பத்தை அள்ளிப் …

>>

சசிகலா விஸ்வநாதன்/அன்பன்

இனிய மாலை வணக்கம்சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்திங்கட்கிழமைமாலை மணி 5-15கவிதையின் தலைப்புஅன்பன்அழகியசிங்கரின் என்பாவாகவம்பன் என நினைத்தேன்; அவன் என் மனதுக்கு இனிய அன்பனாக: அன்பன் என்று நினைத்த இவன் வம்பன் ஆகி விட்டான். சசிகலா விஸ்வநாதன்25-12-2023

>>

புவனா சந்திரசேகரன்/நிறைவைத் தேடும் உயிர்

66 ஆவது இணைய காலக் கவியரங்கம் கலைந்து போன கனவுகள்!கசக்கிப் போட்ட காகிதங்கள்!முடிக்காத சித்திரங்கள்! நடப்பதைப் பாதியில் நிறுத்தித்திரும்பிய பயணங்கள்!ஆரம்பித்துப் பாதியில்கைவிட்ட செயல்கள்!நிறைவேற்ற முடியாமல்கைவிட்ட ஆசைகள்! எல்லாவற்றிலும்நிஜமான என்னைக்கொஞ்சம் கொஞ்சமாகத்தொலைத்துவிட்டுப்குறைந்து மறைந்த நான்பிறைநிலவாக இன்றுபயணத்தைத் தொடர்கிறேன்! எனது கடமைகளில்உங்கள் விருப்பங்களில்உங்கள் வாசிப்பில்உங்கள் …

>>

சுரேஷ் ராஜகோபால்/எந்தையே என் தந்தையே

எந்தையே என் தந்தையே(24/12/2023)எந்தையே என் தந்தையேபடைத்தாய் பண்புடனே வளர்த்தாய்மேன்மை மிகுவாழ்வு வாழகற்றுத் தந்தாய், எவ்வளவு துயரத்திலும்துன்பத்திலும் துவளாததிருக்கப்பாடம் சொல்லித் தந்தாய்இன்முகம் காட்டிசிரிக்க வைத்தாய். எந்நேரமும் இயங்க வைத்தாய்எதனோடும் இணங்க வைத்தாய்கண்ணுக்குக் கண்ணாக நானிருக்கக்கண்ணையே தந்தாய் நீபுவிதனில் பொறுப்பும் தந்தாய் வாழும் வாழ்வுபோதுமென்று …

>>

ஆர். வத்ஸலா/சுயம்

23.12.23 அன்று 65 ஆவது இணைய கால கவியர்ங்கத்தில் நான் வாசித்த கவிதை. இது நானா?எனக்குள்ளேயா இச்சக்தி?என் மூச்சா இச்சூறாவளி!என் மனதிலா இவ்வானந்தம்!என்னுள்ளா இப்பயமின்மை?என் கால்களா ஊன்றிக் கொண்டன?எனக்கா இச்சிறகுகள்? எங்கே என் கேள்விகள்?தயங்கித் தயங்கி உயிர் வாழ்ந்த நான்எப்பொழுது என்னை …

>>

சுரேஷ் ராஜகோபால்/கடன் கேட்டால்!

சொல் புதிது, இணைய கால, 62வது கவி அரங்கம், தேதி 20.12 2023 கிழமை புதன், நேரம் மாலை 05.10,”கடன் கேட்டால்!” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். கடன் கேட்டால்யார் தருவார்? அடகாகப் பொன் தந்தால்கடன் …

>>

எஸ்ஸார்சி/ராசி

இணையக் கால கவியரங்கம். 62 20/12/23 சென்னையில் மீண்டும்வெள்ளம் என் வீட்டிலும் தான்ஆராயிரம் ரூபாய்அரசு தருதிறதாம்வந்திருக்கிற லிஸ்டில்என் பெயரில்லைஏன் இல்லை அதுதான்யாருக்கும் தெரியாதுவிண்ணப்பம் எழுதிக்கொடுங்கள்என்றனர்அது எங்கே கிடைக்கும் என்றேன்சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் விலாசம்தந்தார்கள்அவ்விலாசம்சென்றேன் தேடினேன்கொடுப்பவர்கள் வரவில்லை என்றனர்விண்ணப்பம் பெறுபவர்கள் மட்டுமே வந்திருந்தனர்நாளை …

>>

அழகியசிங்கர்/அப்பாவின் த்வசம்

த்வசம் நடக்கும்சமயத்தில்இயல்பாக இருக்காதுஎன் வீடுபாட்டி காலத்திலிருந்துஇப்படித்தான்இப்போது மனைவிதொணதொணவென்றுஎதாவதுசொல்லிக்கொண்டிருக்கிறாள்அவள் இயல்புசமையல் செய்யமடிப்பாக்கத்திலிருந்துசமையல் செய்பவர் வந்திருக்கிறார்வாத்தியார் வருகையைஎதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்சமையல் அறையைக்கடந்து செல்லும்போதுரசம் நல்லா வாசனையைஇருக்கிறதென்றேன்இதில் என்னதப்பு இருக்கிறதுமுறைத்துப் பார்க்கிறாள்மனைவி

>>

ஆர்க்கே/துயர் கடத்தல்

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் -61 எனக்குப் பிடித்த கவிதைகள் வரிசையில் இன்று நமது நண்பர் ஆர்கே அவர்கள் எழுதி பூபாளம் இலக்கிய இதழ் கீதம் 25 , ஜூன் 2023 இல் வெளிவந்த இந்தக் கவிதை. மென்மையாக மனம் வருடி …

>>

ரேவதி பாலு/உயிர்ப்போடு இருத்தல்

நவம்பர் மாதம் வந்தாலே மனசு பரபரக்க ஆரம்பித்து விடும். லைப் சர்டிபிகேட் கொடுக்க நாங்கள் வேலை பார்த்த மத்திய அரசு அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமே. ஓய்வு பெற்ற தோழிகள் ஒருவரை ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு என்று செல்லலாம் என்று …

>>

யுவன் சந்திரசேகர் பதிவு

நான் பிராமண எழுத்தாளன் என்பதால் புறக்கணிக்கப்படுகிறேன் என ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதை மேற்கோள் காட்டி சுகுமாரன் ஒரு மேடையில் பேசினார். நான் அப்படி நினைக்கவில்லை. தமிழ் வாசக சமூகம் அப்படிச் செய்யும் என நான் கொஞ்சம்கூட நம்ப …

>>

பெரு . விஷ்ணுகுமார்/நூதனக் கிறுக்கன்

(தமிழவன் தொகுத்த இளையவர்களின் புதுக்கவிதைகள் என்ற தொகுப்பிலிருந்து ) ஓ அவரைப் பற்றிய கேட்கிறீர் உண்மையாகவே அவரைப் பற்றிய கேட்கிறீர்.அவர் நூதனமான கிறுக்கனாயிற்றே தன் கண் காது தும்ம லிடும் துளைகளை யெல்லாம்அடிக்கடி இடம் மாற்றிக் கொள்வார் டம்பளருக்குள் இறங்கி குளித்துக் …

>>

லக்ஷ்மிரமணன்/என்னதான் பிரச்சினை?

ரத்தப்பரிசோதனை ரிப்போர்ட்டைபரிசீலனைசெய்த டாக்டர் ரகுவரன் ,”எல்லாமே சரியாக இருக்கு. ரத்த அழுத்தம், சர்க்கரை, எல்லாமேநார்மல்.உனக்கு என்ன பிராப்ளம் அரவிந்த்?” அவர்கேட்டதும் அவன் உடனே பதிலளித்தான். “அதுதான் எனக்கும் புரியல்லே டாக்டர்.” காலையில் எழுந்திருக்கும்போது உற்சாகமாய் இருக்கேன் ஆனால் கொஞ்சநேரத்திலேயே மனசு தளர்ந்துபோய் …

>>

கல்யாண்ஜி கவிதை

நடமாட்டமில்லாத கோவில் கல் மண்டபங்களில்பச்சைப் பாசியாக அப்பியிருப்பார்.புது உடுப்புகளை மழைக் காலத்தில்அடுத்தடுத்து அணிந்து நனைந்தும் நனையாமல்மழைக்கோட்டுடன் வருகிற ஒரு சகா ,முந்திய ஊர் அலுவலகத்தில் இருந்தார்.அகாலத்தில் வாட்சாப் அனுப்பியிருக்கும் சிநேகிதிக்குஅவருடைய அம்மாவுக்குப் பிடித்தகனகாம்பரமும் கருகமணியும்நினைவுக்கு வந்துவிட்டது.வெட்டிய சிகரெட் அட்டைகளில் குப்பு ஆச்சி …

>>

இந்திரநீலன் சுரேஷ் /நிஜங்களின் தரிசனம்

தூக்கம் தொலைத்த, செயற்கை சாயத்தைப் புன்னகையாய் பூசிய இளம் பெண்ணிடமிருந்து போர்டிங் பாஸ் பெற்று, இமிக்ரேஷனை கடந்து, செக்யூரிட்டி’யில் கலந்து, கன்வேயர் பெல்ட் ட்ரேயில் லேப்டாப்பை படுக்க வைத்தபோது, மொபைல் போன் அடித்தது. பிரசன்னா அதை அமைதிப்படுத்தி மற்ற வஸ்துக்களுடன் வைக்க, …

>>

ஜெயதேவன் கவிதை

வாழ்க்கை அழகாய்த் தெரிகிறதுமரணம் மணி அடிக்கும்போது அன்றாடம் சலிப்பை விநியோகித்துகிடந்த உடம்புஒரு தேவதையின் சிறகைப்போல்லேசாக இருக்கிறது வாழ்க்கைமுற்றும் தருவாயில் சிலந்தி வலைக்குள் சிக்கியிருந்த உயிர்ப்பூச்சிதளையறுபடும் தருணத்தில்தன் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு ஓடத் தயாராகிறது. தீக்குச்சிக்குள் இருந்த தீ தெரியாமல்தீப்பெட்டியை சுமந்துகொண்டேஅலைந்துகொண்டிருக்கிறோம் மரணக்குஞ்சு வெளிவரும்வரைநாம் …

>>

ரவிக்குமார்/அண்ணல் அம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?

ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் மாலை மரியாதை

>>

ரவிக்குமார்/அண்ணல் அம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?

ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் மாலை மரியாதை

>>

எஸ்.ராமகிருஷ்ணன்/புத்தகங்களை இழந்தோம்..

from S.Ramakrishnan website.. நேற்று ஏற்பட்ட கடும் புயல்மழையால் எங்கள் பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறுஇடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. தண்ணீர் சரசரவென உயர்ந்து …

>>

இந்தியாவில் ஞானமடைந்த மனிதர்களில் மிக முக்கியமானவர்/ஓஷோ

இந்தியாவில் ஞானமடைந்த மனிதர்களில் மிக முக்கியமானவர் ரமண மகரிஷி. இவர் சொல்ல வருவது ஒரே ஒரு செய்தியை தான். இவர் ஒரு சாதாரண மனிதர். இவர் மிகப்பெரிய அறிஞரல்ல . இவர் வீட்டை விட்டு வெளியேறும்போது இவருக்கு வயது பதினேழு தான். …

>>

அழகியசிங்கர்/இன்னும் ஒரு முறை..

இன்னும் ஒரு முறைஅது மாதிரி ஒரு வெள்ளம்வேண்டாம் 2015 இல் உள்ளே புகுந்த வெள்ளம். சேமித்து வைத்த புத்தகங்களை அழித்துச் சென்றுவிட்டது. இன்று காலையில் ஏனோ அதே ஞாபகம் கீழே உள்ள அறையில்அதேமாதிரிபுத்தகங்களைத்தேடித்தேடிசேகரித்துவைத்திருக்கிறேன் வெள்ளம்நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறது..

>>

மனுஷ்ய புத்திரன் கவிதை

மூடிய கதவைபின்னால் இருந்துயாரோ பிடித்துத் தள்ளுகிறார்கள்கண்ணாடி ஜன்னல்களையாரோ அறைகிறார்கள் அது காற்றின் நூறு கரங்கள்‘ நான்தான் வந்திருக்கிறேன்கதவைத் திற’ என உறுமுறுகிறது புயல்இவ்வளவு அதிகாரமாகயாரும் கேட்டதில்லை மரங்கள் தலைவிரித்தாடுகின்றனமண்ணைத் தொடகிளைகள் தாழ்கின்றனமுறிந்தும் வீழ்கின்றன தகரங்களிலானவைகாற்றின் தாண்டவத்தில்காகிதம்போல கிழிபடுகின்றன காற்று மழைநீரைதிறந்த சாளரங்களுக்குள்வாரி …

>>

அனங்கன்/ஒரு ஆன்மா தெருவில் கிடக்கிறது

வாழ்ந்தமனிதரை நினைவுகூற ஒன்றுமில்லை…அவர்சேர்த்துவைத்த நூல்களைத் தவிர. சொத்தினைச் சமமாய்ப்பிரித்துக்கொண்டவர்கள்…சொல்லிவைத்தார்போல் தட்டிக்கழித்தது நூல்களைத்தான். கோணிப்பையில் குப்பையாய்த் திணித்து எடைக்குப்போட்டுவந்த வேலைக்காரனுக்குத் தெரியும்… இறந்துபோனவர் அவைகளை எங்ஙனம்பாதுகாத்தாரென்று… அப்பாவிற்குப் பிடித்ததைப் படையல்போட்டவர்கள்…ஒருநூலையும் வாங்கிவைத்திருக்கலாம். புத்தகம் இருந்தஅலமாரிகள் நல்ல கருந்தேக்கென்று சண்டைநடக்கிறது இப்போது… புத்தகத்தோடு தெருவில் …

>>