மினிகதை 6

அவன் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். அவனால் சற்றும் நம்ப முடியவில்லை.
அந்த அறையிலிருந்து கிருத்திகா வரவில்லை. அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமே அவளுக்கு இல்லையா?
“ஏதோ கோபத்தில் அடித்து விட்டேன். அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்..இது மாதிரி நிகழ்ச்சி இனிமேல் நடக்காது.”
“கிருத்திகா உங்களை நம்பத் தயாராய் இல்லை.”
“எனக்கு மன்னிப்பே கிடையாதா?”
“கிடையாது,” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள் கிருத்திகா.
(இத்துடன் இந்த மினி கதை முடிகிறது)
அழகியசிங்கர்/எங்கே எங்கே… – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
