
(கதையின் தொடர்ச்சி)
மினி கதை 5
அவன் காஞ்சிபுரம் 12.30க்குச் சென்றான். வரதராஜபுரம் கோயில் தெருவில்தான் வனிதா வசித்து வருகிறாள்.
அவளும், அவள் பெண்ணும் இருந்தார்கள். கணவனை விட்டு வந்த பிறகு, பிறந்த வீட்டில் தஞ்சமடையாமல் தனியாக வாழ வேண்டுமென்ற வைராக்கியத்துடன் இருக்கிறாள்.
அங்கே ஒரு பள்ளிக்கூடத்தில் டீச்சராக பணி புரிகிறாள்.
இவன் வந்த சமயத்தில் மதிய உணவு இடைவேளிக்காக வீட்டிற்கு வந்திருந்தாள்.
அவள் இருந்தபோது அவன் வந்திருந்ததால் உள்ளே கூப்பிட தயக்கமாக இருந்தது. மேலும் அவள் தோழி என்ன சொல்வாள் என்றும் தோன்றியது.
“நான் கிருத்திகாவைப் பார்க்க வந்திருக்கேன் “
“தெரியும். நீங்கள் மாலை 5மணிக்குமேல் பார்க்க வாருங்கள்.”
“ஏன்?”
“நான் இப்போது இருக்க மாட்டேன். க்ளாஸ் இருக்கு. வர 5 மணி ஆகும். நீங்க அப்போது வாருங்கள். பேசலாம்.”
அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. ” 5 மணிக்கு வருகிறேன்,” என்று கூறிவிட்டுப் போய்விட்டான்
5 மணிவரை அவன் காஞாசிபுரத்தை சுற்றிக் கொண்டிருந்தான்
திரும்பவும் வனிதா வீட்டிற்கு வந்தான்.
“உங்களை கிருத்திகா பார்க்க விரும்பவில்லை.”
அவன் என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.
“நான் அவளிடம் மன்னிப்பு கேட்கத்தான் வந்திருக்கேன்,” என்றான் திடீரென்று.
“நீங்கள் அவளை கைநீட்டி அடித்திருக்கக் கூடாது, ” என்றாள் வனிதா.
(இன்னும் வரும்)

One Comment on “அழகியசிங்கர்/எங்கே எங்கே…”
Comments are closed.