மோகன் ஜி/அனைவருக்கும் வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்

லக்ஷ்மி ராவே மா இண்டிகி
க்ஷீராப்தி புத்ரி- வர
லக்ஷ்மி ராவே மா இண்டிகி..

🌼☘️🌺🌸

செல்வத் திருமகளே! பூமகளே!
திருப்பாற்கடலில் உதித்தவளே!
வரங்கள் அள்ளித்தரும் திருவே!
எங்கள் இல்லத்துக்கு வருகை தாராய்…

எங்கள் ஊருக்கு
எங்கள் தேசத்துக்கு
வந்து வாசம் செய்வாய்!

எங்கும் சுபிட்சம்
எங்கும் மலர்ச்சி
எங்கும் அமைதி
நிலைக்க வரமருள்வாய்!

கேட்டதைக் கொடுப்பவளே!
கேளாமலே தா அன்னையே!
எங்கும் மங்கலம் நிறைப்பாய்!
வா அன்னையே! வா அன்னையே!