மினி கதை 4
தொடர்ச்சி

அவள் கோபித்துக் கொண்டு துணி மணிகளை எடுத்துக்கொண்டு வந்தாலும் எங்கே போவதென்று தெரியவில்லை. அம்மா வீட்டிற்கு போகக் கூடாதென்று முடிவு செய்தாள்.
அவன் கண்டு பிடித்து விடுவான். ‘இவளுக்கு வேற வழியே இல்லை அம்மா வீட்டிற்குத்தான் போவாள்’ என்று நினைத்து விடுவான்.
அம்மாவும் அவளைச் சமாதானம் செய்து திரும்பவும் கொண்டு விட்டுவிடுவாள்.
அதனால் காஞ்சிபுரத்தில் இருக்கும் அவள் கல்லூரி தோழி வனிதா. வனிதாவும் கணவனுடன் சேர்ந்து வாழவில்லை. அவள் குழந்தையுடன் தனியாக வசிக்கிறாள்.
வனிதாவுக்குப் போன் செய்தாள். அவள் அங்கு இருப்பதை உறுதி செய்துகொண்டு காஞ்சிபுரத்துக்குப் பஸ் ஏறினாள்.
இரவு 9 மணிஆகிவிட்டதும்
அவன் பரபரப்பு அதிகமாகிவிட்டது. அவள் அம்மாவிற்குப் போன் செய்தான். அவள் வரவில்லை என்ற பதிலால் அவன் குழப்பமடைந்து விட்டான்.
அவர்களும் கவலைப் பட ஆரம்பித்தார்கள்.
திரும்பவும் அவர்கள் அவனுக்குப் போன் செய்தார்கள்.
அவள் மனைவி கெட்டிக்காரி. அவனைப் பார்க்கக் கூடாதென்றுதான் திட்டம் போட்டு போயிருப்பாள். அவள் எங்கே போயிருப்பாள்?
அவளிடம் கை ஓங்கி இருக்கக் கூடாதென்று தன்னை நொந்து கொண்டான்.
தன்னுடைய முன் கோபத்தை நினைத்து வருந்தினான்.
எங்கே போயிருப்பாள் என்று யோசிக்கும்போது திடீரென்று அவனுக்குத் தோன்றியது. காஞ்சிபுரத்துக்குப் போயிருப்பாளென்று.
அவனுக்குத் தெரிந்து
வனிதாதான் அவளுக்கு நெருங்கிய தோழி. ஏற்கனவே அவளுடன் வனிதா வீட்டிற்குப் போயிருக்கிறான்.
காஞ்சிபுரத்துக்குப் போக முடிவெடுத்தான். வனிதாவுக்குப் போன் பண்ணாமலே போவதென்று தீர்மானித்தான்.
அலுவலகத்திற்கு லீவு சொல்லிவிட்டு காஞ்சிபுரம் கிளம்பினான்.
(இந்த மினிகதை தொடரும். அப்படியே விட்டுவிட்டால்கூட ஏதோ ஒரு விதத்தில் இந்தக் கதை முடிவடைந்து விட்டது)

One Comment on “அழகியசிங்கர்/எங்கே..எங்கே..”
Comments are closed.