வே.கல்யாண்குமார்/கண்ணாடி

.!
முன்னாடி நின்று பார்!
முகத்தைக் காட்டும்!
கண்ணாடி.. கதைகேளு
கண்கள் திறக்கும்!

என்னாடி சொல்வது?
எல்லோரும் பார்க்கும்
கண்ணாடி பேசினால்
கணத்திலே வியர்க்கும்!

சூடிக் கொடுத்தவள்
மாலையை அணிந்தே..
பாடிக் களிப்புற்ற
பழமைமிகு கண்ணாடி!

ஆடிக் களித்தவர்..
ஆண்களும் பெண்களும்
அன்றாடம் பார்க்கின்ற
ஆடியே.. கண்ணாடி!

ரசம்போனக் கண்ணாடி
வீசுவார் குப்பையில்..
நிசம் காட்டி உடைந்தாலும்
நினைக்கவும் மறுப்பாரே.!

கண்ணாடி மனத்தில்
கடவுள் வைத்திருந்தால்
முன்னாடி பின்னாடி
முக்காலம் பார்க்கலாம்!

கண்ணாடி கண்ணானால்..
கவலையே இல்லையே..
எவனெவன் எப்படி?
எதிரி யார்? நண்பன் யார்?

அத்தனையும் பார்க்கலாம்..
ஆபத்தைத் தவிர்கலாம்
சொன்னனாலும் புரிகிறதா?
கண்ணாடி வழியாக
மனிதனை அளக்கலாம்!

*வே.கல்யாண்குமார்.*

!

*