
அபூர்வமாய் வாங்கிய
அரிசியை களைந்து
உலைவைக்க
குடிசைக்குள் நுழைந்த
அனாதைக் கிழவி
கருப்பா கருப்பா என
குரல் கொடுத்து
வெளியே வரச்சொல்ல
அந்த கருப்பு பூனையோ
அடுப்புக்குள் இல்லை.
எந்நேரமும் அடுப்புக்குள்
சுகமாய் உறங்கும்
பூனையை காணாது
திகைத்த கிழவி
அரிசி பானையை
அப்படியே புடையில்
வைத்துவிட்டு
கருப்பா கருப்பா என
குரல் கொடுத்தபடி
அதை தேடலானாள்
()
