அனங்கன்/மீதமிருக்கும் நாட்கள்

ஒரு சாதாரணமானவனின்
ஒருசாதாரண தினத்தில்…
பெரிதாய் என்ன
நடந்துவிடப்படுகிறது.

அன்றாடம் வரும் தவிட்டுக்குருவிகளின் கூட்டம் கூடஇன்று வரவில்லை…இறைத்த சோளமணிகள் அப்படியே கிடக்கிறது…

அதைஇரையாக்கத் துடிக்கும்
பூனையும் காத்துகிடக்கிறது
என்போல…

புத்தகச்சேமிப்புகளில் கரையானின் மண்கோடுகள்
செம்மண் நிறத்தில் வேர்ப்பிரிவுகள்போல கிளைபிரித்துக் கிடக்கிறது.

கலைத்துப்போட்டு அடுக்க ஆயாசமாய் இருக்கிறது…வாசிப்பென்பது
உள்ளடங்கிப்போன காலஅளவை நினைவில்வைத்து என்னஆகப்போகிறது.

இன்று என்பிறந்தநாளாம் என்போல சாவுக்கு காத்துகிடக்கும் நண்பனொருவன் வாழ்த்துச்சொல்கிறான்…

நினைவில்இல்லாத பிறந்தநாள்…பிறந்ததிற்கான
காரணத்தை நினைத்து பார்க்கிறது மூடமாய்.

வாழ்த்துச்சொன்ன நண்பனின் பிறந்தநாளை நினைவில் வைத்து வாழ்த்துச்சொல்லவேண்டும்..

அதுவரை இருவரும் இருந்தால் சரி.


♦.

One Comment on “அனங்கன்/மீதமிருக்கும் நாட்கள்”

  1. எவனுக்கு எந்த நாள்…. யாரறிவார்! இந்த நாளைக் கடந்தால் நன்று!
    இனிய இருக்கும் நாள் வாழ்த்துக்கள்!
    அகவை யாது?

Comments are closed.