கல்யாண்ஜி கவிதை

எல்லோரின் திசை முடிவில் இருக்கிறது
ஒரு கடல்,
ஒரு மகா நதி,
ஒரு உப்பாறு,
ஒரு ஓடை.
ஒரு கம்மாய்,
ஒரு துலாக் கிணறு,
ஒரு அடி குழாய் தவிர
தொண்டைக்குழியில் ஒரு எச்சில் சுனை.
%
2018