நாகேந்திர பாரதி/கத்தாழை முள்


———-

காட்டுக் கத்தாழையைச்
சாட்சியாய் வைத்துக்

கீறிய பெயர் காட்டிக்
காதல் என்றேன் நான்

வடிந்த பால் காட்டிக்
கண்ணீர் என்றாய் நீ

செடிக்கும் வலிக்கும்
சேதியும் புரிந்தது

உனக்குள் இருக்கும்
மென்மையும் புரிந்தது

மனதிற்குள் கத்தாழை
முள்ளாய்க் குத்தியது

———

One Comment on “நாகேந்திர பாரதி/கத்தாழை முள்”

  1. அருமை! அழகு!

    செடிக்கும் வலிக்கும்!

    என்னே ஒரு புரிதல், இதுதான் பல்லுயிரும் வாழவேண்டி அனைத்து உயிர்களும் கலந்து வாழவேண்டும் எனும் பரந்த நோக்கு!

    ஆங்கிலத்தில் Co-existence & empathy!

    வாழ்க! வளம்பெறுக! பல்லுயிரும்
    இணைந்து வாழ்க!

    இராம மீனாட்சி சுந்தரம்
    கோயம்புத்தூர்

Comments are closed.