
- அர்த்தங்கள்
விடாது அழுது கொண்டிருந்த
கைக் குழந்தையிடம்
எதோ ஒரு மொழியில்
எதோ ஒரு வார்த்தையால்
சமாதானம் சொன்னாள் பாட்டி
சற்றைக்கெல்லாம் சிரிக்கத்
தொடங்கியது குழந்தை
தெய்வங்கள் பேசிக் கொள்ளும்
வார்த்தைகளுக்கு
மொழியும் அர்த்தமும் தேவையில்லை போலும்..
–
- பறத்தல்
வாங்கி தந்த
பலூனை காற்றில்
நழுவ விட்ட மகன்
பறக்கிறது பார்.. பறக்கிறது பார்
என்றான்
வாயு நிரப்பபட்ட பலூன்
எல்லையில்லா வெளியில்
உயர உயர பறந்தது
நீண்ட நாளுக்கு பின் வானம் பார்த்த
தந்தைக்கு புரிந்தது
பறக்கும் சுதந்திரமும்
பறக்க விட்ட சுதந்திரமும்
