
(20/9/24 அன்று நடந்த 25 ஆவது கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதைகள்)
1, போதும்
நான் உன்னை மதித்தேன்
காதலித்தேன்
நீ என்னை
மதித்தாய்
காதலித்தாய்
நீ இல்லை
என் வாழ்க்கையில்
இப்போது
நான் மதித்த நீ
என்னை காதலித்தாய்
ஒரு குறுகிய காலத்திற்கு
காதலிக்கிறாய்
என்னை
என் கனவுகளில்
- வேண்டுகோள்
ஏன் விலகினாய்
நமது நட்பை எறிந்து விட்டு
என்று
இனியும் கேட்பது
முட்டாள்தனம்
இருக்கும் நிச்சயமாக
ஒரு நியாயமான காரணம் –
உன் விலகலுக்கும்,
அதன் காரணத்தை கூறாமல்
இருப்பதற்கும் –
என்று தெரியும்
உன் தன்மையை அறிந்த
எனக்கு
நட்பு முறிந்து விட்டது
என் பக்கமும்
சப்தமில்லாமல்
எனக்கே தெரியாத
ஏதோ ஒரு கணத்தில்
முன்னறிவிப்பின்றி
ஒரே ஒரு வேண்டுகோள்
எனக்கொரு மகன்
இருந்திருந்தால்
எப்படி இருந்திருக்கும்
என்று
ஒரு சில கணங்கள்
எனக்குணர்த்திய
உன் பால்
எனக்குள் பொங்கும்
அன்பை
பிறந்தநாள் வாழ்த்தாகவும்,
உன்னிடம் நான் கற்ற விஷயங்களுக்காக
எனது நன்றியை
ஆசிரியர் தின வாழ்த்தாகவும்,
குறுஞ்செய்தி அனுப்பினால்-
அது நமது நட்பை புதுப்பித்துக் கொள்ள
நான் செய்யும் சதி என்றெண்ணி
அஞ்சி விடாதே
தயவு செய்து
