மாலதி சுவாமிநாதன்/சொல்லும் செய்திஎன்னவோ?

சொல்லும் செய்தி
என்னவோ?
மாலைப் பொழுதும்
வந்து விட்டதே.

பறவைகள்
கூட்டம் கூட்டமாக
இரைந்து கொண்டு
செல்கின்றனவே!

சொல்லும் செய்தி
என்னவோ?

இதைத் தென்றல்
சுமந்து
இலைகள் மீது
வைத்துச் செல்கின்றதே!

இலை உதிரும்
நேரம்
செய்தியை அறிவோம்!
பதில் கூறத்
தேவையோ?

கோலங்கள் தீட்டி
பதில் கூறுவோமா?

One Comment on “மாலதி சுவாமிநாதன்/சொல்லும் செய்திஎன்னவோ?”

  1. எளிமையாக இயல்பாக அருவி ஊற்றாக உள்ளது.

    சிறப்பு! இனிய வாழ்த்துகள்!

Comments are closed.