
இட்டலியே.. இட்டலியே
எங்கள் வீட்டு இட்டலியே
உளுந்தமாவும் அரிசிமாவும்..
சேர்ந்து வெந்த இட்டலியே!
இட்டலியே இட்டலியே
அன்னை வார்த்த இட்டலியே! அன்றாடம் எங்கள்பசி தீர்க்க வந்த இட்டலியே!
தொட்டுக்கொள்ள சுவையாக ஒட்டிப்பிறந்த சட்டினி! கட்டித்தங்கம் காரம் கம்மி வெங்காயம் சாம்பாரு! நல்லஎண்ணை மிளகாய்பொடி நாவுக்கேற்ற கூட்டணி! நடுநாயகமாகத் தட்டில் வீற்றிருக்கும் இட்டலி!
தமிழ் நாட்டு உணவு வகையில் ராஜாதானே இட்டலி! குடிசைமுதல் கோட்டைவரை கொடிப் பறக்கும் இட்டலி!
பாதையிலே அப்பத்தாவின் ஒத்தரூபா இட்டலி! கையேந்தி பவன் எங்கும் ஆவிபறக்கும் இட்டலி!
ரெயிலு வண்டி ஓடஓட
வாங்கி சுவைக்கும் இட்டலி! அயல்நாட்டார் விரும்பி உண்ணும் உலகம் புகழும் இட்டலி!
எத்தனைப்புது வரவினிலும் தாக்குப் பிடிக்கும் இட்டலி! இன்று நேற்று நாளை என்று என்றும் வாழ்க இட்டலி!

இட்டிலிக்கு இணை தேவார்மிதமும் அல்ல!
இட்டிலிக்கு இணை தக்காளிச் சட்டினியே!
இட்டிலிக்கு சரிநிகர் சமானம் வெங்காயக் காரச் சட்டினியே!
இது எப்படி!
அருமை இட்டலி மகாத்மியம்!
இராம மீனாட்சி சுந்தரம்
கோயம்புத்தூர்
17.08.2024