
அரிசியையும் உளுந்தையும்
சேர்த்து அரைத்து
ஆவியில் வேகவைத்தால்
இட்லி தயார்
எனக்கு இட்லி பிடிக்கும்
மினி இட்லியின்
ரசிகன் நான்
காஞ்சிபுரம் இட்லியென்றால்
நாவில் எச்சில் ஊறும்
மதுரை இட்லிக்கென்று
தனி மகத்துவமே உண்டு
அதனுடன்
சட்னியும், சாம்பாரும் சேர்ந்தால்
அன்று விருந்துதான்
என்னதான் பீட்ஸாவும்
பர்கரும் வந்தாலும்
இட்லி மீதுள்ள
மோகம் குறையவில்லை
இட்லிமாவு புளித்துவிட்டால்
தோசையாக மாறும் வித்தை
நம்மவர்கன் கண்டுபிடிப்புதான்
பல வீடுகளில்
ஞாயிற்றுக்கிழமை
காலை நேரம்
மல்லிகைப்பூ இட்லியுடன் தான்
விடியும்
சாப்பாட்டு ராமன்கள்
பெரும்பாலும் இட்லி பிரியராகவே
இருப்பார்கள்
விதவிதமான இட்லியை
ருசித்து சாப்பிடவாவது
இன்னொரு முறை
இந்தியாவில் பிறக்கவேண்டும்!

ஆமாம், இட்டிலி பிரியர்களுக்கு அளவில்லா இட்டிலி எண்ணிக்கை தேவை!
மற்றவர்களும் இட்டிலி சாப்பிட வேண்டும் என்றே நினையாது இட்டிலிகளை விழுங்கிக் கொண்டே இருப்பார்கள், அந்த மாதிரி இட்டிலி பிரியர்களில் நானும் ஒருவன்!
இராம மீனாட்சி சுந்தரம்
கோயம்புத்தூர்
17.08.2024