
முழுநிலவென ஒளிர்கிறது,வாழையிலையில்:
தும்பைப் பூ நிறம்,
பஞ்சுப் பொதியன்ன
ஒரு விள்ளல் கையில் எடுத்து
செவ்வண்ண
சாம்பாரிலும்,
வெண்ணிற சட்னியிலும்,
மாறி மாறி தோய்த்து தின்ன;
இடையே, சுள் என்ற மிளாகாய் பொடியில்
ஒரு விள்ளல், எடுத்துப் புசிக்க;
வயிறு மட்டுமல்ல,
மனமும் நிறைய;
மகிழ்வுக்கு வானம் எல்லை.

ஆமாம் மகிழ்வுக்கு வானம் எல்லை, இல்லையில்லை, மகிழ்ச்சிக்கு வானமும் எல்லையில்லை!
இராம மீனாட்சி சுந்தரம்
கோயம்புத்தூர்
17.08.2024