ஞானத்தின் வழிக்குறிப்பு


ஓயாமல் பேசிக் கொண்டிருந்த என் தோழி சில நாட்களாய் எதுவும் பேசுவதில்லை

பேசிக் கொண்டிருந்தவள் பேசாமல் இருந்துவிட்டால் கவலையாகத் தானே இருக்கும்
அதே கவலை தான் எனக்கும்

போய்ப் பார்த்தேன் ஒருநாள் முன்பை விட மகிழ்ச்சியாக இருந்தாள் எப்படி? என்றேன்
இந்தா பிடி என்று கொஞ்சம் மௌனத்தைக் கையில் கொடுத்தாள்.

நான் இப்போது எதற்கும் அதிகமாக சொற்களை தேடவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

வி.வி.கலைச்செல்வி
தாராபுரம்