
என் கவிதையை..!
—–அன்புடன் ஆர்க்கே!
இன்னும் சுருக்கமாக
எழுதி இருக்கலாம்.
இன்னும் சூசகமாக
சொல்லி இருக்கலாம்.
இன்னும் புதியதாக
யோசித்திருக்கலாம்.
இன்னும் அலங்கார வார்த்தைகள்
சேர்க்காதிருந்திருக்கலாம்.
இன்னும் சிந்தனைத் தெளிவுடன்
இருந்திருக்கலாம்.
இன்னும் தாமதமாக
எழுதியிருக்கலாம்.
எத்தனையோ தோன்றியபடியேதான்
இருக்கிறது எனக்கு..
ஒரு கவிதையை எழுதுவதற்கு முன்.
இப்போது கூட
எழுதாமலேயே இருந்திருக்கலாம்
என் கவிதையை
என்றும் கூடத்தான்.
—-அன்புடன் ஆர்க்கே!

Super