
தேவையான பொருட்கள்
இட்லி மாவு – 2 கப்
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவைக்கேற்ப
அரைக்க தேவையான பொருட்கள் :
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 3 பல்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
செய்முறை
- முதலில் இட்லிப் பாத்திரத்தில் இட்லி மாவை ஊற்றி வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு வேக வைத்துள்ள இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் மிக்ஸியில் அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களைப் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் உப்பை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- பிறகு அரைத்து வைத்திருக்கும் கலவை மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி, இட்லி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கவும்.இப்போது சுவையான தக்காளி இட்லி தயார்.

உங்கள் தக்காளி இட்டிலி வட்டமாக உள்ளது. குறிப்பில் நீங்கள் இட்டிலியை துண்டுகளாக்கவேண்டும் என்று கூற்யுள்ளீர்களே?