
6.4.25
(7)
ஒருபோதும் முடிவதில்லை
எந்தப் பயணமும்…
உள்ளவரை
உள்ளத்தில் இருக்கிறது..
நினைத்தபோது
பயணிக்கவைத்துவிடுகிறது
எல்லாவற்றையும்
கடந்து..
(8)
எழுதுவதற்கு
வெள்ளைத்தாள்
எடுக்கையில்
முற்றுப்புள்ளியைவிடச்
சிறிதாய் அசைகிறது
பூச்சியொன்று
கடவுளைச் சுமந்தபடி…
(9)
பெயரன் கிறுக்கும்
வண்ணங்களில்
எதையும் கொண்டு வந்துவிடுகிறான்
எனக்குத்தான் வரவில்லை
சட்டென்று
ஒரு சிறு கவிதைகூட…
000

“வரவில்லை” என்று முடித்தாலும் கவின் மிகு கவிதை
தந்திருக்கிறீர்கள்