கே ரியான்/அறைக்குள் யானை

தமிழில் : க.மோகனரங்கன்


ஏறக்குறைய
அறை முழுவதும்
யானையால் நிரம்பியுள்ளது.
அது இல்லாத இடம் என்று
கிட்டத்தட்ட எதுவும் கிடையாது.
மிகவும் பெரிய
திடகாத்திரமான யானை.
ஆகவே
அதைக் குறித்துப் பேச
அங்கே இடமில்லை.