நாகேந்திர பாரதி/பூக்களைப் பறியுங்கள்

பூக்களைப் பறிக்காதீர்கள்
என்று சொல்லாதீர்கள்

இவை பறிக்க வேண்டிய
பூக்கள்

பறித்துக் கசக்க வேண்டிய
பூக்கள்

கசக்கி முகர வேண்டிய
பூக்கள்

முகர்ந்து உணர வேண்டிய
பூக்கள்

உணர்ந்து பகிர வேண்டிய
பூக்கள்

ஆம் , இவை
புத்தகப் பூக்கள்

———-