அழகியசிங்கர்/எல்லோரும்

               

போன மாதம் நடந்த கவி அரங்கத்தில் வாசித்த பத்தாவது கவிதை
எல்லோரும் கூப்பிட்டுச் சொன்னார்கள்
சொன்னதைத் திருப்பிச் சொன்னார்கள்
மிகவும் ஜாக்கிரதை என்றார்கள்
ஆமாம். சொன்னபடி நடக்கட்டும் என்றார்கள்
பிறகு சந்தேகம் என்றார்கள்
பழையபடி ஆரம்பித்தார்கள்
சொன்னதைத் திருப்பிச் சொன்னார்கள்
திருப்பிச் சொன்னதைத் திருத்தினார்கள்
புரிந்ததா என்று கேட்டார்கள்
எங்கே ஒருமுறை சொல்லு என்று 
             வலியுறுத்தினார்கள்

அவர்கள் போனபின்
எனக்குள் திருப்பிச் சொன்னது எது?

அழகியசிங்கர்/ கிடைத்தவள் – விருட்சம் நாளிதழ்