19.09. 2025 அன்று விருட்சம் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை : 9
அவனுக்குப் பிடித்தவளாக ஒருத்தி
படித்திருந்தாள்
கிட்டத்தில் அலுவலகத்தில் பணியிலிருந்தாள்
நோக்கில் காருண்யம்
நடையில் லாவகம்
பேச்சில் தோரணை
முகத்தில் அசாதாரணம்
நோக்கி வீசிய வலையாய்த் தெரிய
சிக்கினாள்
முறைப்படி அவள் வீட்டில்
விருப்பத்தைத் தெரிவிக்க
படிப்பும் உத்தியோகமும்
செலவில்லாமல் கல்யாண முடிக்க
பாந்தமான பையனாகத் தென்பட்டான்
ஆனால் அவளிடமிருந்து காத்திருந்தது
ஏமாற்றம்
üகருப்பு ஒட்டும். வேண்டாம்ý என்றாள்
அவனுக்கு உடல் படப்படத்தது
பற்றிய அறிவு சிதற
வாழ்க்கை கசந்தது
மறுபரிசீலனை செய்யவேண்டுமென்று
நெருக்கினான்
மறுத்தாள். அவனைத் தற்செயலாய்ப்
பார்க்கும்போது மிரண்டாள்
ஆனாலும் முற்றிலும் அவனை இழக்காமல்
அவளைப்போல
வேறு ஒருவளைத் தேடினான்
அதே முக ஜாடை
கிடைத்தாள் ஒருத்தி
ஏமாற்றம் கல்வி அறிவில்
அலுவலகத்தில் பணி இல்லை
பார்த்த எதுவும் சொல்லும்படி இல்லை
அவன் மனைவியாக
ஒரு பெண்ணாகத் தென்பட்டாள்

One Comment on “அழகியசிங்கர்/ கிடைத்தவள்”
Comments are closed.