நஜ்வா செபியன் /பிரித்தெடுத்தல்

(தமிழாக்கம் – லாவண்யா சத்யநாதன்)

உன் வானத்திலிருந்து
நீ என்னைக் களைந்தாய்
அதனால் நான் என் பிரபஞ்சத்திலிருந்து
உன்னை நீக்கினேன்
நான் சுதந்திரமானவளாய் உணர்கிறேன்.
நான் உன்னை நினைத்துப் பார்க்கவில்லை
நான் உன்னை நினைவுகூரவில்லை.
நான் நினைத்தது
உன்னை யாரென நினைத்தேனோ
அந்த நபரை.
நான் உன்னை காதலிக்கவில்லை
நான் காதலித்தது
நீ யாராக என்னை நம்பவைத்தாயோ
அந்த நபரை.
நான் என்னை தொலைத்துவிட்டதாக உணர்கையில்
நான் உணர்ந்த
ஒவ்வொரு உணர்வையும் சந்தேகிக்கிறேன்.

Nectar of pain என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து.
நஜ்வா செபியன் ஒரு பெண் கவிஞர். லெபனானிலிந்து கனடாவுக்கு குடியேறியவர்.ஆசிரியராகப் பணி புரிகிறார். 2016லிருந்து கவிதை மற்றும் உரைநடைநூல்கள் வெளி வந்திருக்கின்றன.