கம்பன் கவியமுதம்—-74/வளவ. துரையன்

அவர்களுக்கெல்லாம் அவர்கள் பல பொருள்களைத் தானமாகக் கொடுத்தார்கள். கம்பன் தானாக ஒரு கூற்றை இங்கு வைக்கிறான். அவர்கள் ஏன் இந்த மகிழ்ச்சியை அடைந்தார்கள் எனும் கேள்வியை எழுப்பி ஒருவேளை இராமனாகப்

>>

கம்பனைக் காண்போம்—71/வளவ. துரையன்

காகளம் என்னும் இசைக் கருவியுடன் இன்னும் பல்வகைக் கருவிகளும் ஒலிக்கின்றன. அவற்றின் ஒலியானது கடல் ஓசையைவிட அதிகமாய் இருக்கிறது. மாகதர்கள் என்போர்

>>

கம்பனைக் காண்போம்—70/வளவ. துரையன்

பிள்ளைப் பேறு அடையவேண்டி தயரதனை யாகம் செய்யுமாறு வசிட்டன் கூற அதற்காக கலைக்கோட்டு முனிவனை அழைத்து வருகின்றனர். அம்முனிவன் எந்த நாட்டில் நுழைகிறானோ அங்கு மழைபொழியுமாம். அவன் உரோமபாதன் எனும் மன்னனின் நகரினுள் நுழைகிறான். அப்போது

>>

கம்பனைக் காண்போம் –69 /வளவ. துரையன்

பெரியவர்களிடம் ஒரு வேண்டுதலுக்காக நாம் செல்கிறோம். முதற்கண் அவர் அவரின் வீட்டில் இருக்க வேண்டும்; நாம் கேட்பதை அவர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கவலைப் படுகிறோம், இச்சூழலில்

>>

கம்பனைக் காண்போம் -68/
வளவ. துரையன்

இப்பாடலில் இல்பொருள் உவமை கூறப்பட்டுள்ளது. அதாவது உலகில் இல்லாத பொருளை உவமையாகக் கூறுவது. நீலமேகத்தில் தாமரை மலர்கள் மிகுதியாகப் பூத்திருந்தது என்று

>>

கம்பனைக் காண்போம்—67/வளவ.துரையன்

தயரதன் தம் நாட்டை எப்படி ஆட்சி செய்தான் என்று கம்பன் இப்பாடலில் கூறுகிறான். அவனுக்குப் பகைவர் என யாரும் இல்லை. அவ்வாறு இருந்தால் அவர்கள் “எம் மீது உன் படைக் கருவிகளைச் செலுத்து” என்று வருவர்.

>>

கம்பனைக் காண்போம் -66/வளவ. துரையன்

தாய்ஒக்கும் அன்பின் தவமொக்கும் நலம்ப யப்பின்
சேய்ஒக்கும் முன்நின்[று] ஒருசெல்கதி உய்க்கும் நீரால்
நோய்ஒக்கும் என்னின் மருந்துஒக்கு

>>

கம்பனைக் காண்போம் 65/வளவ.துரையன்

அயோத்தி நகரமே இப்பாடலில் ஒரு அழகிய மரத்திற்கு உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அந்நகரத்தில் கல்வி, கேள்வி, அன்பு, தவம், தருமம் எல்லாம் மேலோங்கி இருந்தன. முதலில் கல்வி எனும் விதை முளைத்தது. அது மரமானது. அம்மரத்தில் கேள்வி என்னும்

>>

கம்பன் கவிநயம்—63/ வளவ. துரையன்

அயோத்தி நகரில் எழுந்த ஓசைகள் எல்லாம் கடல் ஒலியை விட மேம்பட்டு ஒலித்ததாம்; என்னென்ன ஒலிகள் எனக் கம்பன் பட்டியலிடுகின்றான். பல்வேறு

>>

கம்பனைக் காண்போம்—62/வளவ. துரையன்

கம்பன் இப்பாடலில் முதலில் யானைகளுக்கு ஓர் உவமை சொல்கிறான்.களிறு என்பது ஆண்யானை. பெண்யானைக்குப் பிடி என்பது பெயராகும். அந்த ஆண் யானைகள் மலைபோன்று இருக்கின்றன.

>>

கம்பனைக் காண்போம் —60/வளவ. துரையன்

அயோத்தியில் சிறுவர்களை அனைவரும் விரும்புவார்களாம்; அப்படிப்பட்ட சிறுவர்கள் விளையாடும் இடங்களில் ஆண்யானைகள், அதுவும் கண்களிலே நெருப்பைச் சிந்துகின்ற யானைகள் அவற்றின் கால்களினால் தரைகளில் குழிகளை உண்டாக்கின.

>>

கம்பன் கவியமுதம்—59/வளவ. துரையன்

இப்பாடலில் ’கோண்நிமிர்’ என்பதைக் ‘கோள்நிமிர்’ என்றும், ’வாணனி’ என்பதை ‘வாள்நனி என்றும் பிரித்துப் பொருள் கொள்ளல் வேண்டும். அயோத்தி நகர

>>

கம்பனைக்காண்போம் 56 /வளவ. துரையன்

அயோத்தி நகரின் கோபுரங்களின் நுழைவாயில்களைப் பற்றிக் கம்பன் கூற முற்படுகிறான். அந்நகரத்தின் கோபுர வாயில்கள் நான்கு இருக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று நேராக நிற்பதால்

>>

கம்பன் கவியமுதம்–—54/வளவ. துரையன்

கம்பன் அயோத்தி நகரைச் சூழ்ந்துள்ள அகழியை வர்ணிக்கிறான். மேகமானது மழை பெய்ய எண்ணுகிறது. அதற்காக அது கடல் நீரை மொள்ள வேண்டும் அல்லவா? ஆண்டாளும், ‘ஆழிஉள் புக்கு முகுந்து” என்று

>>

கம்பன் கவியமுதம்—3/வளவ.துரையன்

கம்பன் கோசல நகரத்து மதிலுக்குப் பல்வேறு உவமைகளை அடுக்குகிறான். முதலில் அம்மதில் வேதத்தைப் போன்றதாம்; ஏனெனில் வேதமானது நம்முடைய அறிவினால் முடிவு காண முடியாது. அதேபோல அம்மதிலின்

>>

கம்பன் கவியமுதம் 50/வளவ.துரையன்

அதை விட உயர்ந்ததைத்தான் சொல்லவேண்டும் எனும் இலக்கணத்தைக் கடைப்பிடிக்கிறான் கம்பன். தவிர சிறந்த நகரங்களைப் படைத்துப் பயிற்சி பெற்றால்தானே

>>

கம்பனைக் காண்போம்—49/வளவ. துரையன்

சந்திரனும் சூரியனும் ஆகாயத்தில் திரிவதை நாம் பார்க்கிறோம். அப்படி அவர்கள் திரிவதற்குக் கம்பன் தற்குறிப்பேற்ற அணியின் முலமாக ஒரு காரணம் கூறுகிறான். இந்த அயோத்தி நகரத்தைப் போல வேறு நகரம் எந்த இடத்திலேனும் காணக் கிடைக்குமோ என்றுதான் அவர்கள் திரிந்து கொண்டிருக்கிறார்களாம். அப்படிப்பட்ட சிறப்புடையதாம் அயோத்தி.

>>

கம்பனைக் காண்போம் 48 /வளவ. துரையன்

அழகுகளும் சிறந்திருந்தனவாம். நல்ல குணங்கள் அவர்களிடம் இருந்ததால் புற அழகும் நிரம்பி இருந்தது. அவர்களுடைய பொய்யில்லாத தன்மையால் நீதிகள் எல்லாம் நிரம்பி இருந்தன. அவர்களின் அன்பினால் அறங்கள் நாட்டில் நிரம்பி இருந்தன. அந்நாட்டு மகளிரின் கற்புத்

>>

கம்பனைக் காண்போம் 46 /வளவ. துரையன்

ஒரு நாட்டில் வறுமை என்பது இருந்தால்தான் அங்கு வறியவர் இருப்பார்கள். அவ்வறியவர்கள் பிறரிடம் சென்று யாசிப்பார்கள். கொடைத்தன்மை

>>

கம்பன் கவியமுதம்—45/வளவ. துரையன்

அணிந்து கொண்டிருந்தார்களாம். மரக்கலங்கள் வணிகம் மூலம் பருத்த இரத்தினங்களையும், பொன்னையும் சொரிந்தனவாம். பாதைகள் என்பதற்குச் செல்லும் வழி என்று கொண்டு அவ்வழிகளில் எடுப்பார் யாரும்

>>

கம்பன் கவியமுதம்—43/வளவ. துரையன்

விதியினை நகுவன அயில்விழி பிடியின்
கதியினைநகுவன அவர்நடை கமலப்
பொதியினை நகுவன புணர்முலை கலைவாழ்
மதியினை நகுவன வனிதையர் வதனம் [76]

>>

கம்பன் கவியமுதம்—42/வளவ. துரையன்

அந்நாட்டு மகளிரின் சாயலுக்குத் தோற்று ஓடுவன மயில்களாகும். அம்மகளிரின் முலைகளிலே விளங்கும் இரத்தினங்கள் பதிந்த அணிகலன்களுக்குத் தோற்று ஓடுவன

>>

கம்பன் கவியமுதம்—41/வளவ. துரையன்

கோசல நாட்டு மக்கள் பின்பற்றிய வாழ்வு முறை இப்பாடலில் கூறப்படுகிறது.
அந்த நாட்டில் மக்கள் தாம் வாழவேண்டிய நல்ல வழியை விட்டு செல்ல மாட்டார்கள். மழைபெய்து வருகின்ற வெள்ளமே தன் வழியை விட்டுச் செல்லுமாம். அந்நாட்டின் பொருள்கள் யாவும் தம் அடையாளங்களை

>>

கம்பன் கவியமுதம்/வளவ.துரையன்

ஈகையும் விருந்தும்
பெரும்த டங்கண் பிறைநுத லார்க்குஎலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே [68]

>>

கம்பன் கவியமுதம்/வளவ.துரையன்

இரத்தினங்கள் கிடைக்கின்றன. அவற்றை அவர்கள் எறிய அவை தொங்குகின்ற மாம்பழங்களின் மீது விழுகின்றன. அதனால் அவை தேன் துளிகளைச் சிந்துகின்றன. புள்ளிகளின்

>>

கம்பன் கவியமுதம்-37/வளவ. துரையன்

துருவை மென்பிணை ஈன்ற துளக்குஇலா
வரிமருப்பு இணைவன் தலை ஏற்றை வான்
உருமிடித்தெனத் தாக்குறும் ஒல்ஒலி
வெருவிமால்வரைச் சூழ்மழை மின்னுமே [63]

>>

கம்பன் கவியமுதம்—36/வளவ. துரையன்

அவர்கள் நெய்தல் நிலத்தில் வாழும் மிகச் சிறுமியர்; அவர்கள் களவு நெறி அறியாத காமப்பார்வை கொள்ளாத நுளைச்சியர் ஆவர். அவர்கள் பறிக்கப்பட்ட பாக்கை முறம் நிறைய வாரி வந்து கொழிக்கிறார்கள்.

>>

கம்பன் கவியமுதம்—35/வளவ. துரையன்

ஒரு நாட்டின் செல்வ வளம் கூற வரும்போது புலவர்கள் சற்று மிகையாகக் கூறுவதே மரபு. நெல்லை வீட்டு முற்றத்தில் காயவைத்துக் காவல் காக்கும்போது அந்நெல்லைக்

>>

கம்பன் கவியமுதம்–34/வளவ. துரையன்

இப்பாடலைச் சுவைக்கும்போது “சோறு ஆக்கிய பெருங்கஞ்சி ஆறு போலப் பெருந்தொழுகி” என்னும் பழம் இலக்கியப் பாடல் நினைவுக்கு வருகிறது. அந்த நாட்டில் அன்னதானக் கூடங்களில் சோறு வடிக்கிறார்கள். அப்போது

>>

கம்பன் கவியமுதம்-26/வளவ. துரையன்

[சாலி=ஒருவகை நெல்; திருமங்கையாழ்வார் திருக்கோவலூர் திவ்ய தேசத்தைப் பாடும்போது ‘செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே”’ என்பார்; வேலி=வயல்; வைப்பு=மருத நிலம்; மதுகரம் மொய்க்கும்=-வண்டுகள் மொய்க்கும்]

>>

கம்பனைக்காண்போம்-20/வளவ. துரையன்

கோசல நாட்டில் பாயும் சரயு ஆற்றைப் பற்றி விரிவாக வருணித்துப் பாடிய கம்பன் அடுத்து கோசல நாடு எப்படி இருந்தது என்று கூற வருகிறான்.

>>

கம்பனைக் காண்போம்—19/வளவ. துரையன்

உடம்பையும் உயிரையும் உவமைகளாகக் கூறுவது கம்பனுக்கு எப்பொழுதும் வழக்கம். பின்னால் தசரதனை உடம்பாகவும் அவன் நாட்டின் மக்களை உயிராகவும் கூறுவான்

>>

கம்பனைக் காண்போம்—18/வளவ. துரையன்

கம்பன் இந்தப் பாடலில் வெள்ளத்தைப் பரம்பொருளுக்கே உவமையாகச் சொல்கிறான். அவன் கவிநயம் பொங்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. சரயு ஆற்றின் வெள்ளமானது இமயமலையில் தோன்றிக் கடலில் சென்று கலக்கிறது. இடையில் ஏரி

>>

கம்பனைக்காண்போம்—17

வெள்ளமானது ஓடி வருகிறது; அது தன் நீரால் முல்லை நிலத்தைக் குறிஞ்சி ஆக்குகிறது. மருத நிலத்தை முல்லை நிலம் ஆக்குகிறது. அற்பப் பயன் தரும் நெய்தல் நிலத்தை நிகரற்ற பயன் தரும் நன்கு விளையும் மருதமாக்குகிறது. இவ்வாறு அந்தந்த

>>

கம்பனைக் காண்போம்—16 /வளவ. துரையன்

அந்த வெள்ளம் என்ன செய்ததாம்? உறைந்த நல்ல மணமுள்ள தயிர், பால், வெண்ணெய், ஆகிய இவற்றைக், கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள உரியுடன் வாரி

>>

கம்பனைக் காண்போம்—14/வளவ. துரையன்

கம்பன் இந்தப்பாடலில் ஒரு நதிக்கு இதுவரை யாரும் கூறாத ஓர் உவமையைப் பயன்படுத்துகிறான். சரயு நதியானது ஒரு தாயின் முலை போன்றதாம்;

>>

கம்பனைக் காண்போம்—12/வளவ. துரையன்

கள் குடிப்பவரை மக்கள் என்று கூறாமல் மாக்கள் அதாவது விலங்குகள் என்கிறான். வெள்ளத்தை ஈக்களும் வண்டுகளும் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. எல்லை கடந்து ஊக்கம் மிகுந்து ஆனால் உள்ளே தெளிவில்லாமல் ஓடி வருகிறது. அந்த இனிய வெள்ளம் தேக்கு மரங்களை வீசி வருகிறது. கள் குடித்தவரும் ஈக்கள் வண்டுகள் மொய்க்கக் கிடக்கிறார்கள். அவர்கள் தம் குலம், குணம், பதவி முதலிய எல்லைகளைக் கடந்து, உற்சாகம் பெற்று ஆனால் மனத்தில் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் ஆதலால் வெள்ளம் கள்குடித்தவரை ஒத்திருந்ததாம்.

>>

கம்பனைக் காண்போம்—11/வளவ. துரையன்

வெள்ளம் எங்காவது அணைகட்டப்போகுமா? கம்பன் போகிறது என்கிறான். இராமகாதையின் கதையையே கம்பன் இன்னும் தொடங்கவில்லை. பின்னால் இலங்கை மீது படையெடுத்துச் செல்லும்போது கடலைக் கடக்க இராமன் அணை கட்ட விரும்புகிறான். பின்னால் நிகழப்போவதை முன்னரே சொல்வது காப்பியத்தில் ஓர் உத்தியாகும். கம்பன் அந்த வெள்ளத்தை இராமன் அணைகட்ட விரும்பிய நிலைக்கு உவமையாகச் சொல்கிறான்.

>>

கம்பனைக்காண்போம்—10

வளவ. துரையன் விலைமாதரும் மழைவெள்ளமும்தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன்நிலைநிலாது இறைநின்றது போலவேமலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்விலையின் மாதரை ஒத்தது அவ்வெள்ளமே [18] [ஆகம்=உடம்பு; மண்டலால்=கவர்தலால்] விலைமாதர்கள் தம்மிடம் வருவோரின் தலையையும், உடம்பையும், காலையும், தழுவி வெளியே தாங்கள் காட்டிய …

>>

கம்பனைக் காண்போம்—8

மேகங்கள் மழைபொழிவதற்காக இமயமலை மேல் போய்ப் படிந்தன. அம்மலையிலிருந்து தோன்றி வரும் கங்கையானது கடலில் போய்க் கலக்கிறது. இந்த இயற்கை நிகழ்வைக் கம்பன் மிக அழகாக நயம் தோன்றக் காட்டுகிறான். இமயமலையின் மகள்தான் கங்கையாறாம். அந்த மகள் கடலான ஆண்மகனைப் போய் மணந்து கொள்கிறாள். எனவே இமயமலை கடலுக்கு மாமன் முறை ஆகிறது. அந்த இமயமலையானது கதிரவனால் வெப்பம் அடைகிறது. தன் மாமனாகிய இமயமலை சூரியனால் வெப்பம் அடைந்தான். அவ்வெப்பத்தைத் தன் அன்பினால் மாற்றுவோம் என எண்ணிக் கடலானது மேகமாய் மாறி இமயமலையின் மேல் போய்ப் படிந்ததாம். அழகான பாட்டு இது.

>>

கம்பனைக் காண்போம்—7

இந்தப் பாடலில் சைவ வைணவ ஒற்றுமையைக் காட்ட சிவன், திருமால் என்னும் இரண்டு கடவுளரையும் கம்பன் உவமைக்குப் பயன்படுத்துகிறான். மழை வரப் போகிறது. சிவன் பூசிக்கொண்டிருக்கும் திருநீறு போல

வளவ. துரையன்

>>

யார் அந்த மூவர்?

கம்பன் எழுதிய இராமாயணம் ஒரு வழிநூலாகும். அதற்கு முதல் நூல்கள் உள்ளன. தேவ பாடை என்பது தேவ பாஷை எனும் வடமொழியைக் குறிக்கும். அம்மொழியில் இந்த இராமகாதையை மூன்று பேர் பாடியுள்ளார்கள்.

வளவ. துரையன்

>>

அசுணத்திற்குத் துன்பம்

கம்பன் அவையடக்கத்தில் தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்கிறான். அசுணம் எனும் பறவை முன்பு இருந்தது. கம்பன் அதை ’மா’ எனக்கூறி விலங்கென்கிறான். அது தன்

வளவ. துரையன்

>>

தந்திகளும் மந்திகளும்

வளவ. துரையன் இpப்பகுதியில் கம்பராமாயணத்தின் கதைப்போக்கு இருக்காது. ஆங்காங்கே காணப்படும் இலக்கிய நயங்கள், உவமைகள், சில நுணுக்கங்கள் ஆகியவற்றை மட்டும் நான் அறிந்தமட்டும் தொட்டுக் காட்ட எண்ணம் காட்டில் மாலைநேரம் நெருங்குகிறது. யானைகள் எல்லாம் நீர் அருந்தக் குளங்களை நாடிச் செல்கின்றன. …

>>