கம்பனைக் காண்போம்—14/வளவ. துரையன்

                           

    தாய்முலையன்ன சரயு

   இரவிதண் குலத்து எண்இல் பல்வேந்தர்தம்
    புரவுநல் ஒழுக்கின்படி பூண்டது
    சரயு என்பது தாய்முலை அன்னது இல்
    உரவுநீள் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்.           [24]

கம்பன் இந்தப்பாடலில் ஒரு நதிக்கு இதுவரை யாரும் கூறாத ஓர் உவமையைப் பயன்படுத்துகிறான். சரயு நதியானது ஒரு தாயின் முலை போன்றதாம்; அதாவது தன் குழந்தைக்கு எப்பொழுது பசிக்கும் எனத் தெரிந்து தாயின் மார்பு பால் சுரந்து அப்பசியைத் தீர்க்கும். அதே போன்று அந்நதியும் அயோத்தி மக்களின் துயர் துடைக்குமாம்.


சூரிய குலத்தில் எண்ணற்ற அரசர் தோன்றி உள்ளார்கள். அவ்வரசர்களின் ஒழுக்கத்தைத் தன்னிடம் கொண்டிருக்கும் நதியே சரயு. வெள்ளப் பெருக்கை உடைய சரயு நதியானது கடல் சூழ்ந்த உலகத்தின் உயிர்களுக்கு எல்லாம் தாய்முலை போலப் பயன் கொடுக்கும்.