கம்பனைக்காண்போம்—10

வளவ. துரையன்

விலைமாதரும் மழைவெள்ளமும்
தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன்
நிலைநிலாது இறைநின்றது போலவே
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையின் மாதரை ஒத்தது அவ்வெள்ளமே [18]

[ஆகம்=உடம்பு; மண்டலால்=கவர்தலால்]

விலைமாதர்கள் தம்மிடம் வருவோரின் தலையையும், உடம்பையும், காலையும், தழுவி வெளியே தாங்கள் காட்டிய விருப்பமானது நிலைத்திருக்காமல், சிறிது நேரமே விருப்பம் கொண்டு அவர்களின் பொருள்களையெல்லாம் கவர்ந்துகொண்டு சென்றுவிடுவார்கள். அவர்களைப் போல இவ்வெள்ளமும் மலையின் உச்சியையும், அடிவாரத்தையும், தழுவி அங்கேயே நிலைத்திருக்காமல் சிறிது நேரமே நின்று, மலையில் உள்ள பொருள்களையெல்லாம் கவர்ந்து கொண்டு சென்றதாம். எனவே அவ்வெள்ளம் விலைமாதரை ஒத்திருந்ததாம்.

One Comment on “கம்பனைக்காண்போம்—10”

  1. கம்ப சித்திரங்களை இவ்வாறு சின்னச்சின்ன கட்டுரைகளாக வெளியிடுவது, மிகப் பெரிய தமிழ்த் தொண்டு.

    நமது கம்ப ஞாபகங்கள் தூண்டப்படுகின்றன.

    அதே சமயம் மற்றவர்களுக்கு கம்பனை அறிமுகப்படுத்தும் இது உதவுகிறது.

    வளவ. துரையனாரின் பணி தொடர வேண்டும்!

Comments are closed.