கம்பனைக் காண்போம்—22/வளவ துரையன்


எல்லாம் உறங்கும்
ஒரு நாட்டின் வளம் கூற வரும்போது உடன்பாடான நிகழ்வுகளையே காட்டுவது பாவலர்களின் மரபு. ஆனால் கம்பன் மரபை மீறி நாட்டு வளம் சொல்லப் போகும்போது எதிர்மறையாக எவை எவை தூங்குகின்றன என்று கூறுகிறான். தூக்கம் எனும் சொல்லே பிற்காலத்தில் வந்ததுதான். உறக்கம் என்ற சொல்லே அப்பொழுதெல்லாம் வழங்கப்பட்டது. ”
சங்குகள் நீரிலே உறங்கின்றன. ஏனெனில் அந்த நீர் நிலையில் கிடந்து கலக்கும் எருமை தன் வயிறு நிறையத் தின்றதால் நிழலிலே உறங்குகிறது. மக்களும் மன்னனும் அணியும் மாலைகளில் தேன் குடித்த வண்டுகள் உறங்கின்றன. வாடாத புத்தம் புதிய மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட மாலைகள் அவை. எல்லார் வீட்டிலும் செல்வம் நிரம்பிக் கிடப்பதால் திருமகளும் தாமரை மலரிலே தங்குகிறாள். ஆமைகள் எவ்வித இடையூறுமின்றிச் சேற்றிலே உறங்குகின்றன. முத்துச் சிப்பிகள் நீர்த்துறையிலே உறங்குகின்றன. எருமை நெல்லைத் தின்ன வராததால் அன்னப்பறவை நெற்போரிலே உறங்குகின்றது. மயில்கள் அழகோடு சோலையில் உறங்குகின்றன.
இதோ பாடல்:
நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை உறங்கும் அன்னம் துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை [38]
[மேதி=எருமை; செய்யாள்=திருமகள்; தூர்=சேறு; இப்பி=முத்துச் சிப்பி; போர்=நெற்போர்; பொழில்=சோலை; தோகை=மயில்]

One Comment on “கம்பனைக் காண்போம்—22/வளவ துரையன்”

  1. அருமை.எதிரமறையில் நாட்டின் செழிப்பு பொங்கி வழிகிறது. கம்பனின் கற்பனை வளம் மிகச் சிறப்பு. நன்றி ஐயா.

Comments are closed.