பிணைக்கு நிழல் கொடுக்கும் கலை/கோவை எழிலன்

இலக்கிய இன்பம் 22

பிணைக்கு நிழல் கொடுக்கும் கலை

ஒரு பாலைவனத்தில் தலைவன் கண்ட மூன்றாவது காதற்காட்சியை தலைவி தோழிக்குக் கூறுகிறாள்.

அக்கொடிய பாலையில் இரு மான்கள் வழி தப்பி வந்து விடுகின்றன. ஒதுங்க இடமின்றி வெயிலில் அவை வாடுகின்றன. அதில் தன் துணையான பெண்மானின் வாட்டத்தைப் போக்கும் எண்ணம் கொண்ட ஆண் மான் தன் நிழலில் இளைப்பாறுமாறு பெண்மானைக் கெஞ்சுகிறது.

யானையின் காட்சியில் ஆண் யானை நேரம் கழித்தாவது நீர் அருந்தியது. புறவின் காட்சியில் தன் சிறகால் விசிறிய ஆண் புறாவிற்கும் சிறிது காற்று கிடைத்திருக்கும். இங்கு ஆண் மானிற்கு எதுவும் கிடைக்க வில்லை. இவ்வாறு ஒன்றை ஒன்று காதலில் விஞ்சுகின்றன.

அதே கலித்தொகையின் பாடலடிகள் இங்கே

“கல்மிசை வேய்வாடக்
கனைகதிர் தெறுதலால்
துன்னரூஉம் தகையவே
காடுஎன்றார்; அக்காட்டுள்
இன்னிழல் இன்மையான்
வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்தளிக்கும்
கலைஎனவும் உரைத்தனரே.”