கம்பனைக் காண்போம் —60/வளவ. துரையன்

குழிகளை மறைக்கும் வாசனைப் பொடிகள்
கண்ணிடைக் கனல்சொரி களிறு கால்கொடு
மண்ணிடை வெட்டுவ வேட்கு மைந்தர்கள்
பண்ணைகள் பயில்இடம் குழி படைப்பன
சுண்ணம் அக்குழிகளைத் தொடர்ந்து தூர்ப்பன [137]

[களிறு=ஆண்யானை; வேட்கும்=விரும்பப் படுகிற; பண்ணைகள்= விளையாட்டுகள்; சுண்ணம்=வாசனைப்பொடிகள்.

அயோத்தியில் சிறுவர்களை அனைவரும் விரும்புவார்களாம்; அப்படிப்பட்ட சிறுவர்கள் விளையாடும் இடங்களில் ஆண்யானைகள், அதுவும் கண்களிலே நெருப்பைச் சிந்துகின்ற யானைகள் அவற்றின் கால்களினால் தரைகளில் குழிகளை உண்டாக்கின. அந்தப் பள்ளங்களை அந்தப் பிள்ளைகள் அவரகளின் உடம்பில் அணிந்துள்ள வாசனைப் பொடிகள் தூர்த்து விடுமாம்.