கம்பனைக் காண்போம்—18/வளவ. துரையன்

                        

                         வெள்ளமும் பரம்பொருளும்          

கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லைஇல் மறைகளாலும் இயம்ப அரும்பொருள் ஈடு என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பலபெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்தது அன்றே   [31]

கம்பன் இந்தப் பாடலில் வெள்ளத்தைப் பரம்பொருளுக்கே உவமையாகச் சொல்கிறான். அவன் கவிநயம் பொங்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. சரயு ஆற்றின் வெள்ளமானது இமயமலையில் தோன்றிக் கடலில் சென்று கலக்கிறது. இடையில் ஏரி, குளம், குட்டை போன்ற பல நீர்த்துறைகளிலும் பல வகையாகப் பரந்துள்ளது. முதலில் வெள்ளமானது எல்லையில்லாத வேதங்களினாலும் விளக்கிச் சொல்ல முடியாத பரம்பொருள் போலத் தனித்து ஒன்றாக விளங்கியது. பின்னால் அதுவே பரம்பொருளைப் பற்றிச் சொல்லும் பலவகைப் பொருள்கள் போலப் பல வகையான நீர்த்துறைகளாகப் பரவியிருந்தது. இந்த உவமை எந்தப் புலவரும் கூறாத அருமையான உவமையாகும்

One Comment on “கம்பனைக் காண்போம்—18/வளவ. துரையன்”

Comments are closed.