கம்பனைக் காண்போம்—11/வளவ. துரையன்

அணைகட்டப்போகும் வெள்ளம்    

வெள்ளம் எங்காவது அணைகட்டப்போகுமா? கம்பன் போகிறது என்கிறான். இராமகாதையின் கதையையே கம்பன் இன்னும் தொடங்கவில்லை. பின்னால் இலங்கை மீது படையெடுத்துச் செல்லும்போது கடலைக் கடக்க இராமன் அணை கட்ட விரும்புகிறான். பின்னால் நிகழப்போவதை முன்னரே சொல்வது காப்பியத்தில் ஓர் உத்தியாகும். கம்பன் அந்த வெள்ளத்தை இராமன் அணைகட்ட விரும்பிய நிலைக்கு உவமையாகச் சொல்கிறான்.

மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்
அலைகடல் தலை அன்று அணைவேண்டிய
நிலையுடைக் கவிஒத்தது அந்நீத்தமே                   [21]

மலைகளை எடுத்துக் கொண்டும், மரங்களைப் பறித்துக் கொண்டும், மலையில் இருக்கும் செல்வம் மற்றும் இலை முதலான பொருள்கள் எல்லாவற்றையும் ஏந்திக்கொண்டும் வருதலால், அலைகளை உடைய கடலானது, இராமன் அதைக் கடப்பதற்காக அணை கட்ட விரும்பியபோது பெற்ற நிலையை அவ்வெள்ளம் பெற்றது. அதாவது ஓர் அணையையே கடலில் கட்டக் கூடிய அளவுக்குப் பொருள்களையெல்லாம் அவ்வெள்ளம் சேர்த்து அடித்துக்கொண்டு வருகிறதாம்

One Comment on “கம்பனைக் காண்போம்—11/வளவ. துரையன்”

Comments are closed.