ருக்மணி வெங்கட்ராமன் /ஓவியம் சொல்லும் கதை

வகுப்பறையில் ஒரு ஓவியம் மாட்டப் பட்டிருந்தது. அந்த ஓவியத்தைப் பார்த்ததும் ஓவியக் கல்லூரி மாணவி காவ்யாவின் மனதில் ஏதோ வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது.பல வண்ணங்களில் அந்த ஓவியம் வரையப் பட்டிருந்தது. அந்தப் படத்தில், ஒரு ஆணின் முகமும், அருகில் ஒரு பெண்ணின் …

>>

பி. ஆர். கிரிஜா/மாற்றம்

ஐந்து வயது சிறுவன் நிகில் மும்முரமாக எதையோ செய்து கொண்டிருந்தான். அவன் அம்மாவிற்கு ஆச்சரியம். எப்போதும் பேட்டும் பாலும் எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விடுவான். ஒரு இடத்தில் உட்கார மாட்டான். பள்ளிக்கூடத்திலும் அவனைப் பற்றி புகார். அட்டேன்ஷன் ஸ்பான் ரொம்ப …

>>

பாலசாண்டில்யன்/கண்ணாடி மனம்

வீட்டின் அமைதி ஷியாமை நெரித்தது. ராதிகா காபியைக் கொண்டுவந்து வைத்தஓசை கூட இடிபோலக் கேட்டது.“என்னாச்சுங்க? ஆபீஸ்ல இருந்து வந்ததுல இருந்தே பிரமை பிடிச்ச மாதிரி இருக்கீங்க?”ஷியாமின் தலைக்குள் எண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதின. அவனது பார்வை எதிரேஅமர்ந்திருந்த ராதிகா மற்றும் …

>>

எம் ஷங்கர்/பொம்மலாட்டம்

“அழகா சாவி போட்டு வீட்டைத் திறந்து நகையெல்லாத்தையும் திருடிட்டு போய்ட்டான்” சீதாப்பாட்டி இன்ஸ்பெக்டரிடம் புலம்பிக் கொண்டிருந்த போது அப்புசாமி அவசரமாக பால்கனிக்குப் போனார். “பொம்மக்காரி வந்துட்டாளாக்கும் ஜொள்ளுவிட்டுட்டு பார்க்கப் போயிட்டாரு” சீதாப்பாட்டி கடுகடுத்தாள். இன்ஸ்பெக்டரும் எட்டிப் பார்த்தார் கூடையில் பொம்மைகளை வைத்துக்கொண்டு …

>>

நாகேந்திர பாரதி/பொம்மையோ பொம்மை

இடுப்பில் சூலக் கையோடு பாப்பா. தலையில், பொம்மைகள் நிறைந்த கூடை. மாட வீதியில் மனோன்மணி.இடப்புறமா சத்திரத்து ஏழைகளும் ,வலப்புற மாடிவீட்டுப் பணக்காரர்களும், வாங்க போவதில்லை.அடுத்தது கிழக்குத்தெரு. பண்டிகைகள் எல்லாம் பார்த்துப் பார்த்துக் கொண்டாடும் நடுத்தரவர்க்கம்.கிருஷ்ண ஜெயந்திக்கு வீட்டை அலங்கரித்தும், வெண்ணெய்யும், சீடையும் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/தலைக்கு மேல் தெய்வம்

கல்கத்தா நகரில் குமார்டுலியில் இருந்து பெரிய பஜார் வரைக்கும் லட்சுமி தினமும் நடக்க வேண்டும்.தலையில் பொம்மைக் கூடை, இடுப்பில் மகள் குட்டி மீனா.அன்று புரட்டாசி மழைக்குப் பிறகு தெருவெல்லாம் சேறு. கூடையில் ஆறு துர்கை சிலைகள்,நேற்று முழுக்க வண்ணம் பூசியவை. ஒவ்வொன்றும் …

>>

செல்லம் சேகர்/கிருஷ்ண உலகம்

கூடை நிறையப் பொம்மைகளை வைத்துக் கொண்டு தனக்குள் பேசியபடி மகன் மாதவனையும் கூட்டிக் கொண்டுமகளிர் குழு தலைவி வீட்டிற்கு நடந்தாள் ராசாத்தி.” இந்த முறை மகளிர் குழு தலைவி பொம்மை செய்யப் பெரிய ஆர்டர் தந்தால் பிரச்சனை தீரும். “குழந்தை மாதவனைப் …

>>

முனைவர் என். பத்ரி/ வேலவன் இருக்க கவலை ஏன்?

வனஜா ஒரு பொம்மை வியாபாரி. நவராத்திரி காலங்களில் மட்டும் பொம்மை விற்பவள்.விரைவில் தொடங்க இருக்கும் நவராத்திரிக்குப் பொம்மைகளைத் தூக்கிக்கொண்டு நகரத்துக்குச் சென்றுபொம்மைகளை விற்கக் கிளம்பி விட்ட வனஜாநகரத்து வீதிகளில் நடந்து செல்கிறாள் . இடுப்பில் இருக்கும் இரண்டு வயதுக் குழந்தை,’அம்மா பசிக்குது …

>>

சுஶ்ரீ/யாருக்காக?

ருக்மணி கூடைல வைக்கல் பரப்பி பொம்மைகளை அழகா அடுக்கினா,ஒவ்வொரு பொம்மைக்கும் நடுவே பேப்பர் கட்டிங்குகள்.ஒண்ணுக்கொண்ணு உரசி கலர் போகாம இருக்கணுமே. பானு தூங்கிட்டிருக்கா, முனியன் காலைலயே கட்டிட வேலைக்கு புறப்பட்டுபோயிட்டான். செலவு போக (வேற என்ன செலவு குடிதான்)கொண்டு வந்து கொடுக்கற …

>>

கரந்தை  இந்து /காஞ்சனாவின்  கனவு

அருகில் படுத்திருந்த காஞ்சனா எழுந்து அமர்ந்திருப்பதைத் தூக்கத்தில் புரளும்போது பார்த்த கணவர் சதாசிவம், “என்னாச்சும்மா, தூக்கம் வரலையா? மறுபடியும் அதே கனவா? என்று ஆதரவாகக் கேட்டார்.அழுதிருந்த கண்களைத் துடைத்தபடி, “ஏங்க நாளைக்கு நாம் கோயிலுக்குப் போகலாமா? யாரோ ஒரு புது சாமியார் …

>>

லீலா ராமசாமி/சிவன் சொத்து

“பிடி.. பிடி.. பிடிங்க அவனுகளை!” இடுப்பில் குழந்தையுடன் பொம்மைகள் கூடையைச் சுமந்துகொண்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கமலிக்குப் பின்னால் சத்தம் கேட்டது. அவளை இடித்துத் தள்ளிக்கொண்டு இரண்டு பேர் வேகமாக ஓடினார்கள். பின்னால் அவர்களைத் துரத்திக்கொண்டு இரண்டு காவலர்கள் ஓடினார்கள். தெருவே …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/நிழல் பெண்

ஒவ்வொரு நாளும் அந்தப் பெண் தலையில் சாமி சிலைகள் நிறைந்த கூடையுடன், குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு அதே தெருவில் நடந்து செல்வாள். ஒருநாள் அந்தத் தெருவில் நடந்த கொலை வழக்கை விசாரிக்க போலீஸ், அங்கிருந்த CCTV காட்சிகளைப் பார்க்கிறார்கள்.அதில் ஒரு விஷயம் …

>>

சசிகலா விஸ்வநாதன்/பொம்மை வியாபாரம் எளிது

இள மீனாள் சும்மாட்டின் மேல் பொம்மை கூடையை தூக்கி வைத்தாள். சுப்பையா, ” ஞாபகம் இருக்கில்லம்மா? பொம்மைகளுக்கு நான் சொன்ன விலைக்கு மேல் உன் சாமர்த்தியம் போல் வித்துக்க. அதுல நான் இடை பட மாட்டேன். ஒரு பொம்மைக்கு நான் இருபது …

>>

கே.சரண்யா/தாயைப் போல பிள்ளை

துர்க்கை,சிவன் பார்வதி, ராணி என பலவித பொம்மைகளை வரிசையாக எடுத்து கூடையில் அடுக்கினாள் வடிவு. நான் தான் கூடையை சுமப்பேன் என பிடிவாதம் செய்த குழந்தை கையில் பிளாஸ்டிக் சூலாயுதத்தை கொடுத்து சமாதானம் செய்தாள். “முந்தானை எடுத்து இடுப்பில் சொருகினாள் கூடவே …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன்/குழந்தையும்..தெய்வமும்

“ஏம்மா..இவ்வளவு பொம்மைகளையும் விற்றால்,உனக்கு எவ்வளவு கிடைக்கும்?” என்றார் அவர். “மொத்தமும் வித்துப் போச்சுன்னா..இதை விற்க கொடுத்த முதலாளி எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பார்” அதற்குள் அவள் இடுப்பில் இருந்த குழந்தை..”அம்மா..இன்னைக்காவது எனக்கு விளையாட நான் கேட்ட பொம்மை வாங்கித்த தர்றீயா?” என …

>>

வனஜா முத்துக்கிருஷ்ணன்/உயிருள்ள பொம்மை

“என்னோட பேரு வள்ளி. ரோட்டோரம் ஒரு கூடாரம் போட்டு நானும் என் புருஷனும் வாழ்ந்துகினு இருக்கோம். இந்தக் கூடைல இருக்கிற பொம்மைங்களை என் புருஷன் செஞ்சுத் தருவாரு. நான் போயி வித்துட்டு வருவேன். என்னோட புள்ளை மீனாட்சியும் கையில ஒரு சூலத்தை …

>>

கௌரி சங்கர்/தெய்வீக அருள்

கண்மணி பொம்மை விற்பவள். கணவன் நோய்வாய்ப்பட்டு இருக்கையில், அவளுக்கு தெரிந்த ஒரே குடும்ப தொழில் மண் பொம்மைகள் செய்வது விற்பது தான். அவளை நம்பி கைக்குழந்தை விசாலினி வளர்ந்து வருகிறாள். விடிகாலை ஆறு மணிக்கே கூடையில் விதவிதமான தெய்வ பொம்மைகளை சுமந்து …

>>

தி.வள்ளி/உணர்வுலே கலந்தது

தேன்மொழி பத்திரமாக பொம்மைகளை கூடையில் கிடத்தினாள். நாலைந்து பொம்மைகளை மட்டும் தலை வெளியே தெரியும் படி கூடையில் நிறுத்தினாள். அவள் பார்த்து பார்த்து செய்தவை. அவள் உணர்வுடன் கலந்தவை. அவள் அவற்றை பொம்மைகளாக பார்க்கவில்லை. “கிருஷ்ணா உன் ராதை வந்திருக்கேன் பாரு” …

>>

எஸ்.எல். நாணு/அவதாரம்

தலையில் கூடை நிறைய மண் பொம்மைகள். இடுப்பில் அவளுடையஉயிருள்ள பொம்மை, கையில் சூலத்துடன்.அவள் வருவதையே பைக்கில் அமர்ந்தபடி அவன் கவனித்துக் கொண்டிருந்தான்.ஏற்கனவே விலை கேட்பதுபோல் அவளுக்குத் தெரியாமல் கூடையில்பொம்மைகளுக்கு அடியில் வெடிகுண்டைத் திணித்திருந்தான்.அவன் கையில் ரிமோட். அதிலிருக்கும் சிவப்பு பட்டனைத் தட்டினால்அந்தப் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/வண்ண வண்ண பொம்மை!

“பொம்மை வாங்கலையா அம்மா,பொம்மை!”குரல் கேட்டு சட் என எழுந்து முன் கதவைத் திறந்து பார்த்தாள்.சின்ன வயது பெண் தலையில் மூங்கில் பின்னிய கூடை நிறைய வண்ண வண்ண பொம்மைகளோடு இடுப்பில் நாலு அல்லது ஐந்து வயதுக்குள் இருக்கும் ஒரு பெண் குழந்தை …

>>

 ஜெ.பாஸ்கரன்/கூடைக்குள் ஒரு கலகம்!

மண்டையைப் பிளக்கும் உச்சி வெயில்! சரளா தலையில் சுமக்கும் கூடையிலிருந்த பொம்மைகளின் மண்டைகளும் சுடுகின்றன. ஆனால் இது கோபத்தினால் வந்த சூடு. சரளாவிற்குக் காலையிலிருந்து ஒரு பொம்மையும் விற்கவில்லை. இடுப்பில் அமர்ந்திருந்த பிரியாவின் கையில் பொம்மை சூலம், வயிற்றிலோ தீயாய்ப் பசி. “பிரியா, அது என்னுடைய சூலம், கொடுத்துடம்மா” தடித்த குரல் கொஞ்சலாகக் கேட்டது.  கூடையிலிருந்து பார்வதியுடன் நிற்கும் சிவனின் கண்களில் கெஞ்சும் பார்வை. “ம் ஹூம், குடுக்க மாட்டேன். எனக்கு வயித்தப் பசிக்குது” “ஏய் பிரியா, அது என்னோட சூலம். குடுக்கப் போறயா இல்லையா?” மிரட்டியது எட்டுவித ஆயுதங்களுடன் எட்டு கைகளையும் விரித்து நிற்கும் காளி. “முடியாது. காலைலேர்ந்து நானும் அம்மாவும் ஒண்ணும் சாப்பிடல. பசிக்குது. குடுக்க மாட்டேன்” கையில் கெட்டியாக சூலத்தைப் பிடித்துக்கொண்டு, பிரியா யாருடன் பேசுகிறாள்? சரளாவுக்குப் புரியவில்லை. பசியினாலோ, வெயிலினாலோ இருக்கலாம் என்றெண்ணியவாறு, புடவைத் தலைப்பால் குழந்தையின் தலையைப் போர்த்தினாள். “சரி, சூலத்தைத் தர்றேன். ஆனா, யாரு மொதல்ல கூடையிலிருந்து விலைக்கு வெளியே போகிறீர்களோ, அவங்களுக்குத்தான் தருவேன்” கறாராகச் சொன்னாள் பிரியா. ஆயுதத்தின் மகிமையறிந்த குழந்தை போலும்! ‘சட்’டென்று ஒரு குலுக்கல். சரளா சுதாரிக்குமுன் கூடையிலிருந்த அத்தனை பொம்மைகளும் மறைந்துவிட்டன. பிரியாவின் கையிலிருந்த சூலத்தையும் காணவில்லை! சரளாவினால் நம்பவே முடியவில்லை. அவள் இடுப்பிலிருந்த சுருக்குப் பை நிறையப் பணம்! 140 words

>>

  நாபா.மீரா/காளி சொரூபம்

“அம்மா, வீட்டுல ஒரே போர் அடிக்குது. இன்னைக்கு நானும் உங்க கூட பொம்மை விற்க வர்றேன்.”சிறுமியின் ஆசையைக் கலைக்க மனமில்லாமல், “வா சியாமா, ஆனா ரொம்ப தூரம் நடக்கணுமே, முடியுமா உன்னால்,” என்று கேட்டபடியே கூடையைத் தூக்கிக் கொண்டாள் புவித்ரா.வாளிப்பும், வனப்பும் …

>>

கஸ்தூரிகுருசாமி /துர்க்கை

கீதாவின் கணவன் லட்சுமணன் குடியினால் தன்னையும் அழித்து, தன் குடும்பத்தையும் கஷ்டப்படுத்துவான். குழந்தை பசியினால் துடிப்பதைக் காணச் சகிக்காது   கீதா அந்தந்த மாதத்திற்கு ஏற்ப பூஜை சாமான், காய்கறி,கொலு பொம்மை, அகல் என விற்று அதில் வரும் பணத்தால் குழந்தையைப் பசியிலிருந்து காப்பாற்றுவாள். அவள் அழகிற்கு எந்த சேலை உடுத்தினாலும் பேரழகியாகத் தான் இருந்தாள். நவராத்திரி நேரம் பொம்மை  விற்க போகும்போது அவள் மகள்” அம்மா நானும் வாரேன் “என அடம் பிடித்தாள். அவளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு சென்றாள். எல்லா கடவுள் பொம்மைகளும் அவள் கூடையில் இருந்தன. வழியில் ஒரு பாட்டி சாமி பொம்மைகளை வாங்கும் போது “ஏண்டி பிள்ளை கையில் சூலாயுதம் கொடுத்திருக்கிறாய்”,எனக் கேட்க  ” பொம்பளைங்க அவர்களை எதிர்ப்பவர்களை அழிக்கும் துர்கையாக மாறுவார்கள் பாட்டி என் மகளும் ஒரு துர்க்கை தான்” என்றாள்.பேசிக் கொண்டிருக்கையில், “நேரம் ஆயிற்று வீட்டிற்குப் போய் இரவு சமையல் வேலை செய்ய வேண்டும்” என வேகமாக வீட்டை பார்த்து நடந்தாள்.மேகம் இருண்டது. இடி இடித்தது. திடீரென மின் வெட்டு. எங்கும் இருட்டு எதிரில் வருபவர்கள் நிழலாகத் தான் தெரிந்தார்கள். கூடையில் இருக்கும் கடவுள்களை வேண்டிக்கொண்டு வேகமாக நடந்து கொண்டிருக்கும்போது  இரு கைகள்  அவளை சுற்றி அணைப்பது போல் இறுகப்பற்றவே, “யாரது விடு. வீட்டிற்குப் போக வேண்டும்” எனக் கத்தினாள். ஏன்மா பொம்மையில் கிடைக்கின்ற லா பத்தை விட அதிகமாகவே கொடுக்கிறேன். என்றார். இனியும் கரண்ட் வரவில்லை. அவளால் நடக்கவும் முடியவில்லை. பிடி இறுக்கமாகவே, விடுய்யா  என கத்தினாள்.திடீரென “அய்யோ  என் கண் போச்சே” என அவன் கத்தவும் கரண்டு வரவும் சரியாக இருந்தது.இடுப்பில் இருந்த பொன்னி சூலாயுதத்தை அவன் மேல் குத்த, அது நேராக அவன் கண்களில் இறங்கிற்று. 185 words

>>

வி.பிரபாவதி/வள்ளியம்மை

கிட்டத்தட்ட பத்து வருடமாகக் கொலு பொம்மை விற்கிறாள்.  “இந்த ராமரு செட் வாங்கி வை.  அயோத்தியே ஓன் வீட்டுக்கு வந்துட்ட கணக்காயிடும்” “இந்தோ இந்த துர்கை,லெட்சுமி, பார்வதி செட் வாங்கு.  எம்புட்டு  சொகமா இருப்பன்னீட்டு” “அன்ன பூரணிய பாரு.  அம்புட்டு பேருக்கும் படியளக்கறா” ஒவ்வொரு பொம்மைக்கு ஒவ்வொரு கதை சொல்லுவாள். “எடும்மா, பாத்துப் போட்டுத் தறேன் என்று விலையை ஏற்றி, பின் இறக்கி நம்மை ஆட்கொண்டு விடுவாள். “மம்மா.. கொஞ்சம் வாங்கமா” மல்லி குரல் கொடுத்தாள். …

>>

ருக்மணி/சூலத்தை ஏந்தியவள்

“கமலா.! வாசலில் எதோ சத்தம் கேட்கிறது. என்ன என்று பாரு.” என்று மருமகளைக் கூறினார். மருமகள் “அத்தை.. பொம்மை விக்கற பொண்ணு.” “கூப்பிடு.” “பொம்மை” என்று அழைத்ததும் வந்தாள் ஒரு இளம் வயது அழகான பெண். இடுப்பில் ஒரு பெண் குழந்தை. தலையில் விதவிதமான மண் பொம்மைகள். கூடையை இறக்கி வைத்தாள். “குழந்தைக்கு எதற்கு சூலம்?” “பாட்டி. நான் பொம்மை விக்கறதே வயிற்றுப் பசியைப் போக்கத்தான். சில இடங்களில் தப்பான ஆட்களும் இருக்காங்க. அவங்களை சமாளிக்கத்  தான் சூலம்.  ஒரு முறை என்னைத் தற்காத்துக் கொள்ள சூலத்தைத் தான் எடுத்தேன். அன்றில் இருந்து சூலத்துடன் தான் வெளியே வருகிறேன். எம் பொண்ணுக்கு சூலத்தைக் கொடுத்து தைரியத்தை தந்திருக்கிறேன். அதனால யாரும் எங்கிட்ட வம்பு பண்ண வருவதில்லை.” “நீ நல்ல கெட்டிக்காரி. எல்லா பொம்மைகளும் அருமையாக இருக்கு. இந்தா பொம்மைகளுக்குக் காசு. சாமார்த்தியமா மானுஷங்களைச் சமாளிக்க தெரிஞ்சுகிட்ட.  தைரியமான ‌பொண்ணு. உன்னைப் போல எல்லா பெண்களும் இருக்கணும். உன்னைப் பற்றி நான் கதையா எழுதறேன்.”  “தாராளமா எழுதுங்க. சரி மா வர்றேன்.” ஒவ்வொரு பெண்ணும் காளியின் மறு உருவம். தற்காத்துக் கொள்ள சூலத்தை ஏந்த வேண்டும். 126

>>

அர்ஜுனன்/பாதுகாப்பு 

நவராத்திரி விழா வரும் சமயமென்பதால், கடவுள் உருவ பொம்மை விற்பனை செய்யக் கிளம்பினாள் பொம்மி. தலைச்சுமை போக, இடுப்புச் சுமையாகக் குழந்தையையும் தூக்கிக்கொண்டு கிளம்பினாள். “பொம்மையை விட நீ அழகா இருக்கே. தனியா ஊர் முழுசும் சுத்துற, காலம் கெட்டுக் கிடக்கு. கவனமா இரு.”  பக்கத்து வீட்டுக் கோமதி பாட்டி சொன்னதில் கரிசனமும், கவலையும் தெரிந்தன. “நான் எங்க தனியா இருக்கேன்? இடுப்புல இருக்கிற …

>>

 தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/சங்கு

     சரஸ்வதி பூஜை நெருங்குதேன்னு  பொம்மை வாங்க மயிலை மாடவீதியில் நடக்க ஆரம்பித்தேன். சிவப்பு வெளுப்பு சங்கு வளையல்கள் அணிந்த வங்க அழகி ஒருத்தி  கடவுளர்களை விற்றுக் கொண்டிருந்தாள். பக்கத்துக் கடைகளில் விற்பதைக் காட்டிலும் தரையில் விற்கும் அவளிடம் ஒவ்வொரு பொம்மையும் …

>>

கமலா முரளி  /தத்ரூபம்

சிவப்பு நிற க்ரேட்டா கார் அந்த பிரம்மாண்ட அரங்கத்தின் வாசலில் வந்து நின்றது. முக்கா பேண்ட், சிவப்பு மெகா ஸ்லீவ் டீ ஷர்ட் அணிந்திருந்த நவ்யா கீழே இறங்கினாள். கத்தரிக்கப்பட்ட முடியைத்  தூக்கிச் செருகி ஒரு க்ளிப் போட்டிருந்தாள். ‘க்ளக்,க்ளக்’ என …

>>

பி.ஆர். கிரிஜா/நம்பிக்கை

ஏ ஐ தொழில் நுட்பம் கொண்டு வரைந்த படத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரமேஷ். ரம்பை, ஊர்வசியை சினிமாவில் மட்டுமே பார்த்ததுண்டு. இப்போது விதம் விதமாக ரம்பைகளை உருவாக்கலாம். அந்தப் பெண்ணின் இடுப்பில் இருந்த மூன்று வயது பெண் குழந்தை தெய்வாம்சம் பொருந்தி இருந்தது. இத்தனை மண் பொம்மைகளையும், ஒரு பெண் குழந்தையும் எப்படி இவளால் சுமக்க முடியும்?           தேவலோகத்திலிருந்து பார்வதி தேவியே மண்ணுலகத்திற்கு இறங்கி  வந்து விட்டாளோ! சினிமா டைரக்டரான ரமேஷிற்கு ஒரு ஐடியா தோன்றியது. இதே மாதிரி பல  படங்களை ஏ ஐ தொழில் நுட்பம் கொண்டு உருவாக்கி ஒரு அனிமேஷன் படம் தயாரித்தால் சூப்பர் டூப்பர் சக்சஸ் ஆக வாய்ப்பு அதிகம். அவன் அப்பாவே சினிமா டைரக்டர் ஆனதால் பணப்  புழக்கம் அதிகம். உடனே தன்னுடைய கோ டைரக்டரை அழைத்து பேச முடிவு செய்தான்.    “சிவா, நான்தான் ரமேஷ் பேசறேன். வாட்ஸ்அப்ல உனக்கு ஒரு படம் அனுப்பறேன். இதைப் பற்றி உன்னோடு டிஸ்கஸ் பண்ணனும். இன்னிக்கு  மாலை ஐந்து மணிக்கு என் வீட்டுக்கு வா” என்றான். ” ஷூவர் டா, ஐ வில் கம்” என்றான் சிவா. இந்தப் படம் எடுத்து மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று, தானும் தன் அப்பா மாதிரி ஒரு பெரிய  கோடீஸ்வரன் ஆகும் கற்பனையில் தன் காதலி மாலினியைப் பார்க்க ராயல் என்ஃபீல்ட்  புல் லட்டில் பறந்தான் ரமேஷ். 152

>>

  பார்வதி /வெட்டிப் பசங்க

கஸ்தூரிக்கு மேலெல்லாம் வலித்தது. இந்த வலியோடு பாரம் சுமக்கணும் என்ற நினைப்பே கசப்பாக இருந்தது. வலியைப் பார்த்தால்  குழந்தையின் வயிற்றை நிரப்பமுடியாது என்று நினைத்தவள்,  வலியைப் பொறுத்துக் கொண்டு,  பொம்மைக் கூடையைத் தலைக்கேற்றினாள். “பொம்மை வாங்கலியோ பொம்மை”   கூவிக்கொண்டே வந்தாள். தலையில் …

>>

அழகியசிங்கர்/நடிப்பு

“மேடம், கொஞ்சம் நடங்க மேடம்,” “முடியாதுப்பா..இந்தப் படமே வேண்டாம். நான் நடிக்கவே இல்லை..” அவள் தூக்கிக் கொண்டிருந்த குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தையின் உண்மையான அம்மா குழந்தையை நடிகையிடமிருந்து வாங்கிக் கொண்டாள்.  நடிகை பெருமூச்சு விட்டாள். பொம்மையை விற்க எப்படி இந்தப் பெண்கள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது நடிகைக்கு. எப்படியோ சமாளித்து விட்டாள் நடிகை. படம் ரிலீசு ஆகிப் பல நாட்கள் நல்ல வசூல். பத்திரிகைக்காரர்கள்  கொலு பொம்மைகளுடன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு போகிற காட்சி பிரமாதம் என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். அந்தப் படத்தை டைரக்ட் செய்தவருக்கு அந்தக் காட்சியை எடுத்தபோது நடிகையின் வசவுகளை எவ்வளவு தாங்கிக் கொண்டார் என்பது யாருக்குத் தெரியும்? 77 

>>

இந்திரநீலன் சுரேஷ் /பொம்மைச்சாமி

“உஸ்.. அப்பாடா என்னமா இருக்கு, சென்னை வெயில்?” “ஏன், என் சக்களத்தி கங்காதேவி கூட வரலையோ? ஐயாவை எப்பவும்  குளு குளு..ன்னு வச்சுப்பாளே?” “அவள வம்புக்கு இழுக்கலைனா, உனக்குப் பொழுதே போகாதே. அந்த கொழந்தையக் கவனி. பசியோடு வருது. என்னை மாதிரி கையில, ஒரு சூலத்தை வேற கொடுத்து, சுமக்க வச்சிட்டாங்க, பாவம்” “அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். அடுத்த தெருவுல ஒரு பாட்டி திண்ணைல வச்சு சோறு கொடுக்கும். அப்படியே நீங்களும் கொஞ்சம் வெயில் தாழ உக்காரலாம். குளிர் பிரதேசத்துக்காரர் ஆச்சே. என் புருஷன் கருத்துப் போயிடக்கூடாது இல்லியா?” “அக்கறை..னா அன்னபூரணிதான்! என் பெண்டாட்டியாச்சே” “கன்னத்தைக் கிள்ளாதீங்க. நல்லவேளை நம்ம பசங்களும் கூ(டை)ல வரல” என்றாள் பார்வதிதேவி வெட்கத்துடன். 80 WORDS

>>

எம்.எல்.பிரபா/”கிருஷ்ணன் வருவான்”

தெருவில் பொம்மை விற்கும் சத்தம் கேட்டு, வாசலில் எட்டிப் பார்த்தாள் மங்களம். இடுப்பில் குழந்தையுடன், தலைமேல் பொம்மை கூடையுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் கலா. காலையிலிருந்து பொம்மை விற்பதால் மிகவும் சோர்ந்து போனாள். குழந்தையை மங்களம் வீட்டுத் திண்ணையில் உட்கார வைத்துவிட்டு, பொம்மை கூடையையும் இறக்கி வைத்தாள். அம்மா “குடிக்கக் கொஞ்சம்  தண்ணி குடுங்க , ரொம்ப தாகமா இருக்கு” என்றாள். மங்களம் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். என்ன பொம்மை இருக்கு ?என்று கேட்டுக்கொண்டே கூடையைப் பார்த்தாள். அவளுடைய கண்கள் அந்த குட்டி தவழ்ந்த கிருஷ்ணன் பொம்மை மீது பட்டது. “அந்த பொம்மை வேணும் மாம்மா,50 ரூபா தான் எடுத்துக்கோங்க” என்றாள் கலா. உனக்கு எத்தனை குழந்தைமா? மூணு குழந்தைங்க மா .ரெண்டு ஸ்கூலுக்கு போயிருக்கு இது சின்னது இதையும் தூக்கிக்கிட்டு தெருத்தெருவா சுத்த வேண்டியிருக்கு. என்ன செய்யறது? “சரி சரி இந்த கிருஷ்ணர் பொம்மையை உன் கையால கொடு. உன்னோட கைராசி அடுத்த வருஷம் எங்கள் வீட்டிலேயும் குட்டி கிருஷ்ணன் தவழட்டும்.”என்றாள் மங்களம். கலா, கிருஷ்ணர் பொம்மையை எடுத்துக் கொடுத்தாள். பொம்மையை வாங்கிய மங்களம் கண்ணை மூடி பிரார்த்தனை செய்தாள். அவள் கண்ணைத் திறந்து பார்த்தபோது கையில் சூலத்துடன் அம்மனாக தெரிந்தது, திண்ணையில் உட்கார்ந்திருந்த கலாவின் சின்ன குழந்தை. 141 WORDS

>>

மாதங்கி வி/தெய்வங்களைக் காக்கும் தெய்வம்

செல்வன் ஒரு YouTube சேனலில் வேலை செய்து வருகிறான், அவனுடன் உரையாடும் அவன் நண்பன், “இன்றைக்கு என்னடா புதுசாசொல்லபோற?” என்று கேட்டான்.“இன்னைக்கு வரும் வழியில ஒரு புகைப்படம் ஒன்னு பார்த்தேன். அது என் கண்களிலே நிற்கிறது. அதைப் பற்றி நான் சொல்ல …

>>

தாணப்பன் கதிர்/பதுமை

      யாரு என்ன சொன்னா என்ன?  நான் அவரோடு சேர்ந்து போயிட முடியாதில்ல. குடி.. குடி.. குடிச்சி குடிச்சே போய்ச் சேர்ந்திட்டார்.     நமக்கு இது வேண்டாம் மாமா. நமக்குன்னு ஒண்ணு அழகா பொறந்திருக்கு. குடிக்காதே மாமான்னு எத்தனை வாட்டி தலைப்பாடா அடிச்சிருப்பேன். கேட்டிருக்கலாம்ல்லா.     என்னைக் கூட்டிட்டு போய் வைச்சிக்கிடுவதற்கு அம்புட்டு யோசனையா? மூழியை வீட்டுக்குள்ளே வைச்சிக்கிட முடியுமான்னு சாம்பல் கரைச்சிட்டு வந்ததுமே பேச ஆரம்பிச்சிட்டாங்களே.    உனக்கு கைப் பொம்மைல்லாம் செய்ய வருமே, அதை ஏன் செய்ய மாட்டேங்கே? என்று நீ அடிக்கடி கேப்பியே மாமா. இதுக்குன்னு தெரியாமப் போச்சே மாமா.    கைக்குழந்தை வாசவிக்கு அழகழகாய் குட்டிக் குட்டிப் பொம்மைகள் இருக்கு. ஆனா பாரு அம்மன் கைல இருக்கச் சூலாயுதந்தான் வேணும்ன்னு ஒரே அடம்.         குழந்தை வேலப்பருக்கு ஆத்தா கொடுத்ததைப் போல நானும் கொடுத்தேன். இப்போ என் இடுப்புல இருக்கிற அவ தனக்கென்று ஒண்ணு வந்தா கொற்றவையா மாறிடமாட்டாளா என்ன?    ‘பொம்மை.. பொம்மை, கைப்பொம்மை’ என்று கூவிக்கொண்டே போகிறாள் வசந்தி.    தலைச்சுமை மண் பொம்மைகள் அங்குமிங்குமாய் ஆடாமலிருக்க வைச்சிருக்கிற தாளின் சலசலப்பை மீறித் திமிறி நின்று உலகைப் பார்த்து ஏளனம் செய்தன.  121 words

>>

ஷைலஜா/கலைகளிலே அவள் ஓவியம்

. “இந்த ஓவியம் மிகவும் அர்த்தமுள்ளது ராகவ்.” “. ஓவியம் சொல்லும் செய்தி?” “ஒரு சாதாரண ஏழைத் தாய். தலையில் கடவுள் சிலைகள் நிறைந்த கூடை. இடுப்பில் தன் குழந்தை.ஆனால் அந்த குழந்தையின் கையில் சூலம்.” “இதன் அர்த்தம் என்ன ? …

>>

பாலசாண்டில்யன்/சுமக்கும் தெய்வம்

​உச்சி வெயிலில் சுட்டெரிக்கும் தார்ச்சாலையில், பகல் முழுவதும் அவள் கால்கள் ஓயாமல் நடக்கின்றன. ​நவராத்திரி முடிந்தால் துடைப்பமும் பாயும் விற்றுதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். குடிநோயால் மூலையில் உருளும் கணவனின் போதைக்கும், இடுப்புக் குழந்தையின் பசிக்கும் அவளது உழைப்பே ஆதாரம். தனக்கென …

>>

அரியூர் ரேணுகா நாராயணன்/உழைப்பே உயர்வு

சிறு கிராமத்து வீடுகள் நிறைந்த வீதியில் மெல்லிய சூரிய வெளிச்சம் பரவியது. தலையில் வண்ணம் தீட்டப்பட்ட துர்கா விக்கிரகங்கள் நிரம்பிய மூங்கில் கூடையை நேர்த்தியாகச் சுமந்துகொண்டு விரைவாக நடந்தாள் கௌரி. அவளது இடுப்பில் அமர்ந்திருந்த ஐந்து வயது மகள் அனன்யா, கையில் …

>>

லால்குடி வெ நாராயணன்/பொம்மை வாங்கலியோ பொம்மை

ஒரு கிராமத்தின் பழமையான குறுகிய சந்துகளில் காலைப் பனி மெல்ல விலகிக் கொண்டிருந்தது. தலையில் வண்ணம் தீட்டப்பட்ட துர்க்கை மற்றும் பரிவாரச் சிலைகள் நிறைந்த கனமான மூங்கில் கூடையைச் சுமந்துகொண்டு வேகமாய் நடந்தாள் சுமித்ரா. இடுப்பில் அவளது நான்கு வயது மகள் …

>>

விஜி சம்பத்/கண்ணா வருவாயா?

“பொம்மை வாங்கலையோ பொம்மை..!”கோகிலாவின் இனிய குரல் அந்தத் தெரு முழுக்க ஒலித்தது. நவராத்திரி வந்து விட்டால் தெய்வச் சிலைகளைக் கூடையில் வைத்து உயிருள்ள சிற்பம் போல நடந்து வரும் கோகிலாவிடம் எல்லோருமே பொம்மை வாங்கப் போட்டி போடுவார்கள். அந்தளவுக்கு உயிரோட்டமான பொம்மைகள் …

>>

ரிஷபன்/பொம்மை வாங்கலியோ

பொன்னியின் கையில் திரிசூலத்தைக் கொடுத்ததும் குஷியாகி விட்டாள். தலையில் பொம்மைக் கூடை, இடுப்பில் பொன்னி என்று நகர்வலம் கிளம்பி விட்டாள் வள்ளி. “பொம்மை வாங்கலியோ பொம்மை” வீடுகளுக்குள் மனிதர்கள் தொலைக்காட்சி, கைபேசி பொம்மைகளுக்குள் அடிமைப்பட்டிருந்தார்கள். எட்டிப் பார்த்த ஓரிருவரும் இல்லாத பொம்மையைக் …

>>

பி.ஆர். கிரிஜா/முருகனின் ஆசை

சிறுகதை: முருகனின் ஆசை அப்பாவோடு வண்டியில் போகும்போது, வழியில் ஒரு கடையில் இந்த பிள்ளையார் படம் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான் முருகன். ” அப்பா, அப்பா, வண்டிய அந்தக் கடைக்கு விடுப்பா, எனக்கு அந்த பிள்ளையார் படம் உடனே வேணும்” என்றான் …

>>

மாதங்கி வி/இந்தப் படம்

இந்த படம் ஒரு மிகப்பெரிய கலைக்கூடத்தில் விற்பனைக்கு இருந்தது. அங்கும் இங்குமாக பார்வையாளர்கள் மற்ற படங்களை பார்த்து ரசித்து வாங்கினர். ஆனால் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் இந்த படத்தின் முன் நின்றபடி ரசித்துக்கொண்டிருந்தான். ஒரு முதியவர் அவனிடம் “என்ன? இதை …

>>

ஜெ.பாஸ்கரன்/திடீர்ப் பிள்ளையார்!

ரஹீம் பாயின் கறி கடைக்கும், கணேசய்யரின் டிபன் கடைக்கும் இடைப்பட்ட இடம், மாணிக்கத்தின் பூர்வீக சொத்து. கால் கிரவுண்டுக்கும் கொஞ்சம் குறைவு. வீடு கட்டவும் போதாது, வேறு கடை கட்டி, தொழில் செய்யவும் தெரியாது மாணிக்கத்துக்கு! விற்று விடலாம் என்றாலோ, ரஹீம் …

>>

அழகியசிங்கர்/ஏமாற்றம்

தெரு முனையில் பிள்ளையார் கோயில். பிள்ளையாரைச் சுற்றி ஆலமரம். சக்தி அங்கே நின்று கொண்டு வேண்டிக் கொள்வான். மனம் உருகி. அவன் பிரார்த்தனை எல்லாவற்றையும் விநாயகர் செவிசாய்த்து நிறை வேற்றுவதாக அவனுக்கு நினைப்பு. அது ஓரளவு உண்மையும் கூட. ஒரு முறை ஸ்மார்ட் வாட்ச்சை எங்கோ வைத்துவிட்டான். பிள்ளையாரை வேண்டினான். உடனே கிடைத்து விட்டது.  இன்னொரு நாள் முகத்தில் போட்டுக்கொள்ளும் கண்ணாடி. ஒரு கல்யாணத்திற்குப் போகும்போதுதான் தேடினான். கிடைக்கவில்லை. அன்று கண்ணாடி இல்லாமல்  கல்யாணத்திற்குப் போனான். ஆனால் அடுத்தநாள் கிடைத்து விட்டது. இப்படி சின்ன சின்ன விஷயங்களைப் பிள்ளையாரிடம் வேண்டிக்கிறான். நடந்து விடுகிறது. இப்போது மேஜரா ஒன்றை வேண்டி கொண் டிருக்கான்.   பக்கத்து வீட்டிலிருக்கும் மாலினியைக் காதலிக்கிறான். காலையில் எழுந்தவுடன் தெருவில் அவ முக தரிசனம் கிடைக்கிறதா என்று பார்ப்பான். சில சமயம் கிடைக்கும்போது அவளைப் பார்த்துச் சிரிப்பான். அவளும் சிரிப்பாள். அவன் சிரிப்பை அவ தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை.  அவளைத் திருமணம் செய்துகொள்ள நினைத்துக் கொண்டிருக்கிறான். அவளிடம் எப்போது சொல்ல வேண்டுமென்று யோசித்துக் கொண்டிருக்கிறான். பிள்ளையார் அனுமதி தர வேண்டும். ஒருநாள் அவன் பிள்ளையாரிடம் வந்து வேண்டிக் கொண்டிருக்கும் போது, மாலினியும் அங்கு வந்து வேண்டிக் கொண்டாள். அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான். அவளும்தான். அவள்தான் முதலில் பேசினாள் :  “ இந்தப் பிள்ளையார் சக்தி வாய்ந்த பிள்ளையார்.” ‘ஆமாம்’ என்று தலை ஆட்டினான். “நான் வேண்டியதை நிறைவேற்றி விட்டார்.” “என்ன வேண்டினிங்க.” “எங்க அலுவலகத்தில் பீட்டர் என்பவரைக் காதலிக்கிறேன். அவரிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். இதோ எல்லோருடைய சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடக்கப் போகிறது.” பிள்ளையார் அவனை ஏமாற்றி விட்டார்.

>>

சசிகலா விஸ்வநாதன்/நல்ல காலம் பிறந்தது

மீனாட்சி அம்மன் கோயில் மேல கோபுர வாசல் தாண்டியதும், ஆடி வீதியில், மதில் ஓரத்தில்  அருள் புரிபவர்தான் பரீட்சை பிள்ளையார்.  இவர் தான் ஏழை மாணவர்களுக்குக் கண்கண்ட தெய்வம். பரீட்சை நேரத்தில் இவர் சந்தி முதல் அந்தி வரை வாய் மூடா விரதம் தான். மீதி நாட்களில் முப்போதும் பட்டினி தான். அவரும் தன் அன்னை மீனாட்சியிடம் வேண்டித்தான் இருந்தார். அன்று சோமு  தனது மனப்பாட பகுதியான விநாயகர் அகவலை அவர் முன் உட்கார்ந்து  மனனம் செய்ய முற்பட, சிறிதாகக் கூட்டம் கூடியது. ஒரு முதியவர், ” அப்பனே! அருமையாகச் சொல்கிறாய்!  கருத்துரையும் சொல்! கேட்போம்! என்றதும்” சோமுவும் தனக்குத் தெரிந்த அளவில் விநாயகர் அகவல் பற்றி விரிவுரை ஆற்ற,  கேட்டவர்கள், கைதட்டிப் பாராட்டினார்கள். “தம்பி நன்றாகச் சொல்கிறாய்!    . தினமும் ஏதேனும் சொற்பொழிவு செய். உனக்கு அது நல்ல பலன் தரும் என்று சொல்ல; சோமு தினமும் ஏதேனும் ஒரு பொருள் பற்றி அங்குச் சொற்பொழிவு  செய்யத் துவங்க. தினமும் சிறு பூஜையுடன்  “சொல்லின் செல்வன் ‘ திருவாளர் சோமநாதன் அவர்களின் சொற் பொழிவை இன்பமுடன் செவிகொள்கிறார்; பரீட்சை பிள்ளையார். 125

>>

நாகேந்திர பாரதி /திறந்த கதவுகள் -துரிதக் கதை

பாழடைந்த அந்தக் கோயிலின் மரக்கதவுகள் கிரீச் சப்தத்துடன்   திறக்கப் படுவதை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல் தனது தீர்க்கமான கண்களால் உற்றுப் பார்த்தார் விநாயகர். வருவது அவன்தான். நடுங்கும் உடலோடு  உள்ளே நுழைந்த அவனால் அவரின் பார்வையைத்  தாங்க முடியவில்லை. அவர் நெற்றியில் …

>>

எம். ஷங்கர்/ மரத்தை மறைத்தது…

முகம் கழுவி பொட்டு இட வழக்கம்போல் ரகுவோட சிவப்பு மர பீரோ கதவிலிருக்கும் கண்ணாடியை பார்த்த உமா,  அங்கே கண்ணாடிக்கு பதில் பிள்ளையார் படத்தை பார்த்து வியந்தாள். “ டேய் ரகு..கண்ணாடி மேலே படத்த எதுக்கு ஒட்டியிருக்கே?” “ அம்மா ஏதோ …

>>

சந்தியா ஷங்கர் /“சிந்தூர கணபதி”

குப்பன் ஒரு தீவிர பக்தர், கடவுளை நினைத்துத் தவம் இருந்தார். பல நாள் கழித்துக் கடவுள் அவர்முன்னே தோன்றினார். ‘பக்தா,உன் தவத்தை மெச்சினோம், என்ன வரம் வேண்டும், கேள்!’ குப்பனுக்கு உடம்பெல்லாம் பரவசம். கடவுளுக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, ‘நிறைய …

>>

அர்ஜுனன்/குங்கும கறை

அந்த தெருக்கோடி பிள்ளையார் கோவிலுக்கு அன்றைக்குக் காலையில் பூசாரி வந்தபோது, சுவர் முழுவதும் குங்கும தீற்றல். வழக்கமாக அங்குப் படுத்திருக்கும் அந்த ஊமை பிச்சைக்காரி, அன்று அரைகுறை உடையோடு இருக்க, அவள் கைகள் முழுவதும் குங்குமக் கறையோடு மயங்கிக் கிடந்தாள். பூசாரி சொன்னதன் பேரில் அந்தத் தெரு பெண்கள் வந்து அவளுக்கு மாற்றுடை அளித்து, சைகை மொழியில் விசாரித்தனர். நடு இரவில் ஒரு காமுகனால் அவள் சீரழிக்கப்பட்டதாகத் தெரிவித்தாள். காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்ட, காவலரும் வந்து சுற்றிலும் பார்த்துவிட்டு, “இங்கேயும் கணபதியா?” என்றார். “ஏன்?” ஒருத்தி கேட்க, காவலர் பதில் சொன்னார். “வரும் வழியில் மெயின் ரோட்டில ஒரு ரவுடி ரத்த வெள்ளத்தில் கிடந்தான். நான் கூட மூதல்ல ரவுடிகளுக்குள்ள வெட்டு, குத்தா இருக்குமென்று நினைச்சேன்” “பிறகு?” “அவனை யாரோ ஒரு லாரிக்காரன் அடிச்சிட்டு போயிட்டானாம். லாரி நம்பர் யாரும் கவனிக்கலையாம். ஆனா லாரி மேல கணபதினு பேரு மட்டும் தெரிஞ்சதாம்.” (104 வார்த்தைகள்)

>>

கஸ்துரி குருசாமி/குழந்தையும் தெய்வமும்

குழந்தை வேலனுக்கு ஐந்து வயது. அன்று விநாயகர் சதுர்த்தி. வேலனின் அம்மா கொழுக்கட்டை, பொரி உருண்டை எல்லாம் செய்து சாமி முன்பு வைத்து விட்டு சாம்பிராணி போட தணல்எடுக்கப் போனாள்.வேலன் பூஜைஅறையில் இருந்தான்.வீட்டில் எப்பொழுதும் பழம் வைத்தால் கூட எலி தின்றுவிடும். …

>>

 எஸ்.எல். நாணு/ஸ்தம்ப விநாயகர்

சியாட்டிலிலிருந்து இந்த குக்கிராமத்துக் கோவிலுக்கு நான் வந்ததற்குக் காரணம் அப்பா. “சின்ன வயசுல பண்ணின தப்பு மனசை அரிச்சிக்கிட்டே இருக்கு. கிராமத்துச் சிவன் கோவில்ல ஸ்தம்ப விநாயகருக்கு நீ போய் அபிஷேகம் பண்ணி, வஸ்திரம் சாத்தி, அஞ்சு பௌன்ல தங்க சங்கிலி போட்டு விசேஷ பூஜைக்குக் கண்டிப்பா ஏற்பாடு பண்ணுவேனென்று சத்தியம் பண்ணு” சத்தியம் பண்ணினேன். ”ரொம்ப சக்திவாய்ந்த …

>>

விஜி சம்பத்/கனவில் வந்த கணபதி

ஆற்றங்கரை பிள்ளையார் முன்.. “கஜானனம் பூத கணாதி சேவிதம்..” தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்ட பரத் தலையில் மழைச்சாரல். திடுக்கென்று எழுந்தவன்  எதிரில் செம்பில் தண்ணீருடன் நின்றிருந்தாள் வித்யா. “என்ன வித்யா நீ? நம்ம ஊர் ஆத்தங்கரை பிள்ளையார் கனவுல வந்தார்.  விபூதி வாங்கறதுக்குள்ள நீ எழுப்பி விட்டுட்டே” என்றவன் சட்டென்று யோசனையில் ஆழ்ந்தான். “என்ன பரத் யோசனை” “இல்ல.. பிள்ளையார் நெத்தியில  விபூதி பூசி வட்டமா சந்தனம் குங்குமம் வைக்கறதுதானே வழக்கம். ஆனா இன்னிக்கு குங்குமம்  கரைஞ்சு வழிஞ்ச மாதிரி.. வித்தியாசமா இருந்தது. இந்த மாதிரி யார் நெத்தியிலயோ பாத்திருக்கேன்.  ம்.. ம். ஆங்..! அப்பா இறந்தப்ப ஒரு வயசான பாட்டி இப்படித்தான் நெத்தியிருந்து குங்குமம் வழிய, முக்காடு போட்டுகிட்டு ஓரமா நின்னு அழுதுட்டு இருந்தாங்க. நம்ம சொந்தக்காரங்களான்னு கேக்கணும்னு நினைச்சு வேலை மும்முரத்தில் மறந்துட்டேன். இன்னைக்கு அதை ஞாபகப்படுத்தற மாதிரி வந்த கனவுல பிள்ளையார் என்ன சொல்ல நினைச்சிருப்பாரு..!”. கனவு தொடர்ந்திருந்தால்..! “அந்த வயசான பாட்டிதான் உங்கப்பாவைப் பெத்தவங்க. அவங்க மனநிலை சரியில்லாததால உன்னோட தாத்தா, குழந்தையையும் பிடுங்கிட்டு அவங்களை காப்பகத்துக்கு அனுப்பிட்டாருனு பிள்ளையார் சொல்லியிருப்பார்.” 127 வார்த்தைகள்

>>

கரந்தை  இந்து /கணேச லீலை

      ”  என்னாச்சுங்க,   அப்போதில்  இருந்து நம்  வீட்டு  வாசல்  பிள்ளையாரையே வைச்ச கண்டெடுக்காமல் பார்க்கறீங்க”  என்று கேட்டாள் சிவகாமி  தன் கணவன்  சங்கரனிடம்.       ” உனக்கு  நினைவிருக்கா?  அம்மா  எப்போதும்  சொல்வாங்க,  விநாயகர்  தான்  இருப்பதிலேயே எளிமையான  கடவுள். …

>>

ஷைலஜா /விடாது நெருப்பு

டில்லி அருகே அது ஒரு சின்ன ஊர். ஆனால் அந்த ஊர் கோயிலின் பிள்ளையார் மிக சக்தி வாய்ந்தவர். அதுமட்டுமா? “. டேய். கதிரேசா.இது அபூர்வ உலோகத்தில் ஆன பிள்ளையார் .6 கோடிக்கு விலை பேசியாச்சி ..இப்ப ராத்திரி11மணி.விடியறதுக்குள்ள ஆஸ்திரேலியாக்குநாம அனுப்பியாகணும் …

>>

வனஜா முத்துக்கிருஷ்ணன் /பசி தீர்த்த விநாயகர்

“ஏம்பா.. விநாயகா!திடீரென ஒரு நாளு என் கனவுல வந்தே.”  “செல்லம்மா..நீ பாதி நாளு பசியோட இருக்கே! அப்படின்னு சொன்னே.” “நம்ம உடம்புல உசுரு இருக்கற வரை உழைச்சு தான் சாப்பிடனும்னு இருக்கேன்னு சொன்னேன்.” “அப்போ என் கோவிலுக்கு தினமும் வந்து தண்ணீர் …

>>

பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்/முச்சந்தி பிள்ளையார்!

          பிள்ளையார் அரசமரத்தடியில் இருப்பார். பிளாட்களில் வாசலில் ஒரு பிள்ளையார் கோயில் மாதிரி அமைத்திருப்பார்கள். அம்மாதிரி ஒரு பிள்ளையார் இந்த முச்சந்தியில் இருந்தார். போவோர் வருவோர் பார்த்து கும்பிட்டு போவார்கள்.  யாரும் கவனிக்கவில்லை என்ற எண்ணம் பிள்ளையாருக்கு இல்லை. அந்த வழியாக …

>>

கௌரி சங்கர்/முச்சந்தி விநாயகர்

குற்றாலம் சென்று, சிற்றருவி தாண்டி தேனருவி மற்றும் பாலருவி தாண்டி, குடுமி மலை சித்தரை பார்த்தார் கணபதி. “சாமி, வியாபாரம் இருபது வருடங்களாக நன்றாக சென்று கொண்டிருந்தது. தற்போது மோசமாகிக்கொண்டு வருகிறது. உபாயம் சொல்லுங்கள்.” “உன்னுடைய கடையின் பின்பக்கம் உள்ள சரக்கு …

>>

கிரிஜா ராகவன்/கடன்

காஞ்சனாவை அப்படி சட்டென்று பார்த்தது ராகினிக்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு புறம் திக் என்று இருந்தது. பெங்களூர் இந்திரா நகர் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த ராகினி வேகமாகத் திரும்பிய போது எதிரில் கையில் குழந்தையுடன் வந்த …

>>

கணேஷ்ராம்/செஞ்சுரி

பிள்ளையாரைப் பார்த்து விட்டு அம்மாதான் அலறினாள் “பிள்ளையாருக்கு என்னமோ ஆயிடுத்து “. ஏதோ தெய்வ குற்றம் ஆகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கன்னங்கரேல் என்று காலையில் நைவேத்யம் செய்யும் போது கூட இருந்தவர் அதற்குள் எப்படி இப்படி வெள்ளை வெளேர் என்று …

>>

தி.வள்ளி/ராசி நல்ல ராசி

அம்மா போய்ச் சேர்ந்து காரியமும் முடிஞ்சாச்சு. இருப்பதை செட்டில் பண்ணிட்டு அண்ணனும், தம்பியும் கிளம்ப வேண்டியது தான். கணேஷும், சுப்பிரமணியமும் ஒற்றுமையானவர்கள் தான். மூத்த மருமகள் சுஜாதா சொத்துக்கு ஆசைப்படுபவள். “ஏங்க அத்தையோட வெள்ளி பாத்திரத்தையும் கையோடு பிரிச்சிட வேண்டியதுதானே” சுப்பிரமணியமும் …

>>

செல்லம் சேகர்/கல்வி வரம் தந்த பொம்மை பிள்ளையார்

கணேசன் பிறந்து இன்றோடு நாலரை வயது ஆகிவிட்டது . அவனுக்கு பள்ளிக்கூட அட்மிஷன்க்கு சரோஜா இன்று ஸ்கூல் போய் இருக்கா.பள்ளிக்கு சென்று வந்த சுப்பிணி மகன் கணேசன் “ஒரு பள்ளியிலும் என்னை சேர்த்து கொள்ளவில்லை, அப்பா , நிறைய பணம் வேண்டுமாம் …

>>

எம்.எல்.பிரபா/விநாயகர் தந்த பரிசு

அன்று விநாயகர் சதுர்த்தி .ஊர் தலைவர் மாணிக்கம் வருடா வருடம் இந்த விழாவை சிறப்பாக நடத்துவது வழக்கம்.10 கிலோ மாவை தூக்க முடியாமல் கோவிலுக்குள் எடுத்து வந்தார். மாவை குருக்களிடம் வைத்துவிட்டு, கை வலித்ததால் கையை வேகமாக உதறினார். விரலில் இருந்த …

>>

ஜி ஏ பிரபா/நைவேத்தியம்

கையில் நூறு ரூபாய்தான் இருந்தது. இதற்குள் 108 கோதுமை கொழுக்கட்டை செய்ய முடியுமா? சாமான்கள் எல்லாமே வாங்க வேண்டும்.சோமு யோசித்தான்.ஜோசியர் உறுதியாகச் சொன்னார், “உன் கிரகங்கள் எல்லாம் மோசமான கட்டத்தில் நிற்கின்றன. பிள்ளையாருக்கு 108 கோதுமை கொழுக்கட்டை செய்து பிரார்த்தனை செய், …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/வரவேற்போம் பிள்ளையாரை!

“அம்மா.!” அழைத்தான் ராமு. “என்னடா.! கண்ணா?” ” நாளைக்கு பிள்ளையார் சதுர்த்தியாம். அதனால் லீவ்.” “ஆமாண்டா. வேலை செய்யற வீட்டில் அந்த அம்மா சொன்னாங்க. நாளைக்கு சீக்கிரம் வரச் சொல்லி இருக்காங்க.” “நம்ம வீட்டிலேயும் பிள்ளையாரை வச்சு கும்பிட லாமா?” “பிள்ளையார், …

>>

பத்மா ராகவன்/கண்ணீரைத் துடைத்தான் கணேசன்

அமெரிக்கா வாழ் ரம்யா, உடன் அழைத்துச்சென்றால் அவமானம் நிச்சயம் என்று, ஆட்டிசம் மகனை எங்குமே கூட்டிச் செல்ல மாட்டாள். விநாயக சதுர்த்தி சமயம், குழந்தைகளுக்கு அவரவர் கையாலேயே விநாயகர் சிலை செய்யக் கற்றுத்தரும் வீணா, ரம்யாவின் மகன் கணேசனை இம்முறை அழைத்துவரவைத்து …

>>

சுஶ்ரீ/விபூதிப் பிள்ளையார்

எங்க வித்யா, மெடிகல் என்ட்ரன்சுக்கு நீட் பரிட்சை எழுதி இருக்கா.நன்னாதான் எழுதி இருக்கா,ஆனாலும் பயம் நல்ல ரேங்க் வந்தாதான் சயான் மெடிகல்ல இடம் கிடைக்கும்.மாதுங்கால இருக்கற எங்க ஃபிளாட்டுக்கு பக்கத்துல. வித்யாவோட சீனியர் ஸ்வேதா , ‘விபூதி பிள்ளையாரை’ வேண்டிக்கோ நிச்சயம் …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/முதல் சொத்துச் சண்டை

மூத்தவனுக்கும் இளையவனுக்கும் தொடர் வாக்குவாதம். நஞ்சை மூத்தவனுக்குப் போனதில் இளையவனுக்கு வருத்தம். நேராக தெரு முனையில் ‘தேமே’ன்னு வீற்றிருக்கும் பிள்ளையாரிடம் சரணடைந்தான். அவரோ சிரித்தார். அப்போது அங்கு வந்த ஊர்த் தலைவர் இளையவனைப் பார்த்து ” தம்பி, உலகத்தில முதல் சொத்துச் …

>>

அரியூர் ரேணுகா நாராயணன்/கல்லில் மலர்ந்த அருள்

​பழமையான அமைதியான ஒரு கிராமத்தில் ஒரு முதிய சிற்பி வாழ்ந்து வந்தார். தன் வாழ்நாளின் சிறந்த படைப்பாக, முழு முதற் கடவுளான விநாயகருக்கு ஒரு தெய்வீகச் சிலையை வடிக்க எண்ணினார். கரடுமுரடான கருங்கல்லைத் தேர்ந்தெடுத்து, இரவும் பகலும் உளிகொண்டு செதுக்கத் தொடங்கினார்.​ஒவ்வொரு …

>>

நாணா/கலையின் ஆன்மீகப் பயணம்

​ஒரு காலத்தில், கோபால் என்ற திறமையான கலைஞர் இருந்தார். அவர் நீண்ட காலம் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள், அவருக்குள் ஒரு ஆழ்ந்த தியான அனுபவம் கிடைத்தது. அதில், அவர் விநாயகரின் திருவுருவத்தை ஒரு தூய வெள்ளை ஒளியின் மத்தியில் கண்டார்.​அந்த …

>>

பாலசாண்டில்யன்/முற்றும் உணர்ந்த முனி

நடை சாத்தும் வேளையில் கோவில் சன்னதியில் நின்ற இளைஞன் பெருமூச்சுடன் விநாயகரிடம் கேட்டான், “விநாயகரே, நீங்களோ பிரம்மச்சாரி… காதல், கல்யாணம் எல்லாம் பந்தம், சுமை என்று ஒதுங்கிவிட்டீர்களா? நான் நேசிக்கும் பெண்ணை மணந்து கொள்ள பயமாக இருக்கிறது.” ​கற்சிலையிலிருந்து இதமான பளிச் …

>>

ரிஷபன்/இரண்டாவது இன்னிங்ஸ்

சட்டென்று தான் அந்த நாலு கால் மண்டபம் பிரபலம் ஆனது. வயதானவர் ஒருவர் ஆற்றில் குளித்து விட்டு கரையேறி அந்த நாலு கால் மண்டபத்திற்கு வந்து உட்கார்ந்தார். அசதியில் தூணில் சாய்ந்தபோது ஒரு பிஞ்சுக் குரல் கேட்டது. “தாத்தா என் மேல் …

>>

பார்வதி-பிள்ளையாருக்கும் நேரம் சரியில்லையோ?

இன்னிக்கு சங்கடஹர சதுர்த்தி. பழைய ஃபிளாட்டுக்குப் போய் சதுர்த்தி அபிஷேக ஆராதனை பார்த்து வரலாம் என்று கிளம்பினாள் ராகவி. அங்கே அவள் சென்று கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும். திடீரென்று அந்தப் பிள்ளையார் நியாபகம் வர அங்கே சென்றாள். சதுர்த்தி நடப்பதற்குண்டான …

>>

ஸ்ரீராம்/விலங்கு விநாயகர்

“அது என்ன பெயர் விலங்கு விநாயகர் ?”. அர்ச்சகரிடம் கேட்டான் பூபதி. “தம்பி! அது விலங்கு விநாயகர் இல்லை. விளங்கு விநாயகர். கை கால் செயலிழந்த நோயாளிகள் இங்கு வந்து வேண்டிக் கொண்டு, அருகில் இருக்கும் குளத்தில் இருந்து தினசரி 50 …

>>

உமா ஸ்வாமிநாதன்/உயிர்கொடுத்த உளி

காலை நேரத்து அமைதியை உடைத்துக்கொண்டிருந்தது சிற்பி மாணிக்கத்தின் உளிச் சத்தம்.ஊரின் எல்லையிலிருந்த ஒரு பழைய கருங்கல்லை செதுக்கத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ​அந்தக்கல் மிகவும் கடினமானது. பலமுறை மாணிக்கத்தின் உளிகள் உடைந்துபோயின; அவனது கைகளில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. …

>>

கே.சரண்யா/சிரிக்கும் பிள்ளையார்

“இங்க பாருங்கம்மா.உங்க பொருளை பத்திரமாக வச்சுகிறது உங்க பொறுப்பு. பொது இடங்களில் அதுவும் போட்டிகள் நடக்கிற இடத்தில் கவனமாக இருக்க வேண்டாமா? என்று அலட்சியமாக சொன்ன பிரின்ஸிபால் முன் அழுதுக்கொண்டு நின்று இருந்தாள் பர்ஸை தொலைத்த ரமா. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள …

>>

வி.பிரபாவதி/விநாயகர் சதுர்த்தி

வரலக்ஷ்மி நோன்பு கொழுக்கட்டை எல்லாம் ரொம்ப பஞ்சுபோல வந்தது. மங்களம் மாமி ” அம்பா ஒன்னோட அனுக்ரகம்தான். மாவு நன்னா வந்துருக்கு. உன்னோட கருணை தாண்டீம்மா” என்று சொல்லிக்கொண்டே நைவேத்தியங்கள் செய்து பூஜையும் செய்து முடித்தாள். பிறகு எல்லா சாமிக்கும் பூ …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/சிவந்த குங்குமத்தின் கதை

காலம் மறந்த கோவில் ஒன்றில் கல்லாய் அமர்ந்திருந்தான் விநாயகன்.யாரும் வராத, பூசை இல்லாத கருவறை அது.சுவரெல்லாம் செதில் செதிலாய் உதிர்ந்து கிடந்தது.ஒரு நாள் ஒரு சிறுமி வந்தாள், கையில் கொஞ்சம் குங்குமத்துடன்.“யாரும் உனக்குப் பொட்டு வைக்கலையா?” என்று கேட்டாள்.தன் பிஞ்சு விரலால் …

>>

முனைவர் என். பத்ரி/முச்சந்தி பிள்ளையார்

சுந்தர் ஒரு பொறியியல் பட்டதாரி. 30 வயது ஆகிறது. நேர்காணல் பலவற்றிற்கு அழைக்கிறார்கள். ஆனால் குழு விவாதத்தில் இவன் வெற்றி பெறுவதில்லை. அதுதான் வேலை பெறுவதில் கடைசி நிலை. பேச்சு ஆங்கிலத்தில் அவனுக்கு கொஞ்சம் பற்றாக்குறை.இவனுடைய வீடு முச்சந்தில் இருக்கிறது .வீட்டு …

>>

எஸ்.எல். நாணு-மாயா வித்தகர்

மேஜிக் நிபுணர் அஸ்வத்தாமனை எங்கள் சேனலுக்காக பேட்டி எடுக்க வந்திருக்கிறேன்.”உங்க மேஜிக்கோட முக்கிய ஐட்டமே பெட்டிக்குள்ள இருக்கிற பெண்ணோட முகம், உடம்பு, இடுப்புன்னு எல்லாம் தனித்தனியாப் பிரிச்சுக் காட்டறீங்க.. மறுபடியும் ஒண்ணா சேர்க்கறீங்க.. இதனாலதானே உங்களுக்கு “மாயா வித்தகர்” பட்டம்”“நான் பண்றதெல்லாம் …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/தேடிய கண்கள்

அரச மரத்தடியில் அமைதியாக ஜடா முடியுடன் பெரியவர் அமர்ந்திருந்தார். அவரைக் கடந்து சென்றவர்கள் கேட்ட கேள்விகளுக்குபதில் தராமல் எதிரில் உள்ள பள்ளியைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.“சாமி தியானத்தில் இருக்காக.” மாலை ஆட்டோவில் ஏறப் போன பள்ளி மாணவி “அண்ணே.! இருங்க.”அந்தச் சிறுமி …

>>

எம் .எல் .பிரபா/மாறியது ஏனோ?

நமச்சிவாயம் கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தார். எதிரில் இருந்த நாலு கால் மண்டபத்தை சுற்றி ஒரே கூட்டம். நமச்சிவாயம் அங்கு சென்று பார்த்தார். மண்டபத்தின் நடுவில் ஒரு சாமியார் கையை மேலே தூக்கிக்கொண்டு கழுத்தை சாய்ந்தவாறு கையில் சுருட்டுடன், …

>>

சந்தியா ஷங்கர்-பாசம்

கோடை வெயில் கொளுத்திய மதிய நேரம். கிராமத்தின் தெருவோரத்தில் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடந்தாள் மீனா. குழந்தை கண்ணன் பசியால் அழுதுகொண்டிருந்தான். சமீபத்தில் அவளது கணவன் இறந்ததும் அவளுக்கு பிழைக்க வழியின்றி பக்கத்து கிராமத்தில் கட்டிட வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். எப்பொழுதும் …

>>

ஜி ஏ பிரபா-யசோதரைகள்

“அவர்தான் சித்தர்”-மீனாதூரத்தில் சின்னக் குன்றின் மீது ஒற்றைக் காலில் நின்று, ஒரு கையை மேலே உயர்த்தித் தவத்தில் ஆழ்ந்திருந்த சாமியாரை உற்றுப் பார்த்துவிட்டுத் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள் புனிதா.“ நீ போய்ட்டு வா மீனு. பிள்ளைங்க வந்துருவாங்க. நானும் வேலைக்குப் …

>>

சசிகலா விஸ்வநாதன்/பொன்னீல மணி

பரதேசி போல் தோற்றமளித்த அவர் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். பரட்டைத் தலை; பரபரக்கும் கண்கள். கையில் இருந்த ஊது குழலால் ஊதி புற்றுகளுக்குள் வாசம் செய்யும் பாம்புகளைப் பிடித்துக் கொண்டிருந்தார்.“அப்பனே! என்ன செய்கிறாய்? ‌” என்று குரல் வந்ததும் அந்த பரதேசி …

>>

பானுமதி வெங்கடேஸ்வரன்/ஓவியப் பார்வை

தன்னுடைய ஓவியங்களை ஸ்டார் ஹோட்டல் அதிபர் ஸ்ரீஜித் முன் கடை பரப்பினான் சிவா. “இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு, பட் ஐ வாண்ட் சம்திங் அப்ஸ்ட்ராக்ட்!” என்றார் அவர். “அப்ஸ்ட்ராக்ட் என்றால்..?” “புரியணும்,புரியக் கூடாது, தெரியணும், தெரியக் கூடாது, ஓவியத்தின் மூலம் உணர்த்த …

>>

அர்ஜுனன்/கடைசி இழுப்பு

பரந்தாமனைக் கண்டால் அவரது மகன் கோபிக்கு துளியும் பிடிக்காது. எந்த வேலைக்கும் போகாமல், சாமியார் போல வேடம் தரித்துக்கொண்டு, வீட்டிலும், கோவில் வளாகத்திலும் மாறிமாறி பொழுதைக் கழிப்பவரை எந்த இளைஞனுக்குத் தான் பிடிக்கும்? அத்தோடு வீட்டில் இருக்கும் நேரங்களில், சுருட்டு பழக்கம் …

>>

ஜெ.பாஸ்கரன்/அந்தர்தியானம்!

3500 மீட்டர் உயரத்தில் ஈஸ்வர் நடுங்கும் குளிரில் கேதாரீஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு, கோயிலிலிருந்து வெளியே வந்தான். குளிர்கால உடைகள் எதுவும், எலும்புவரை ஊடுருவும் குளிரைத் தடுக்க முடியவில்லை. பற்கள் தாமாகத் தந்தியடித்தன. கைகால்கள் அனிச்சையாக உதறின. பூட்ஸுக்குள் ஆயிரம் தேள்கள் கொட்டும் …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/சாமியாரின் செல்ஃபி

கோயில் வாசலில் உட்கார்ந்திருந்த சாமியாரின் ஒரு கை எப்போதும் வானத்தை நோக்கியே இருந்தது. அந்த வழியாகச் சென்ற சுரேஷ் கேட்டான். “சாமி… கையை ஏன் இப்படி தூக்கி வச்சிருக்கீங்க?”“தவம் செய்கிறேன்!”“எத்தனை வருஷமா?”“பதினைந்து வருஷமா .”சுரேஷ் ஆச்சரியப்பட்டான்.“அடடா! கையை கீழே இறக்கவே இல்லையா?”“இல்லை!”“சாப்பிடும்போது?”“இல்லை!”“தூங்கும்போது?”“இல்லை!”” …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/”சாம்பல் மனிதன்”

அவன் ஒரு ஓவியன் அல்ல, ஓவியமாகவே மாறிப்போனவன்.சிறு வயதில் சாமி படம் வரைவான், இப்போதெல்லாம் வரைவதில்லை.உடல் முழுக்கச் சாம்பல் நிறம், கண்களில் மட்டும் சிவப்பு.கையில் இருப்பது சுருட்டு அல்ல, அவனது எரிந்து போன கனவுகள்.நெற்றியில் உள்ள குங்குமம், அவன் இன்னும் வாழ்கிறான் …

>>

ஷைலஜா/பரிசு

. “என்ன படம் இது? சகிக்கல.ஒருபக்கமா தலையை சாய்ச்சி, ,ஒருகையை மேலதூக்கி..எரிகிற சுருட்டுவேற… ஓவிய போட்டிக்கு இப்படியா அனுப்பறது?பைசா காசுக்கு துப்பில்லாத ஓவியன் நீதாண்டா” “அப்பா.!.அசோக் எப்பவும் அப்படித்தான் ஏதாவது புதுமையா வரையறேன்னு கிறுக்குவான்.ஆனா சொல்ல முடியாது இந்த கிறுக்கலுக்கும்சின்ன பரிசு …

>>

எம் ஷங்கர்/ சச்சினின் சாபம்

சேப்பாக் ஸ்டேடியம் வழியாக வந்தபோத அங்கே ஒரு சாமியார் வலது கையை தூக்கியவாரு அமர்ந்திருந்ததை பார்த்தேன் சுற்றிலும் கூட்டம் எதிரில் விரித்திருந்த துண்டில் நோட்டுகள். அருகில் ஒருவன் சாமியாரின் மகத்துவத்த சொல்லிக் கொண்டே அந்த பணத்தை எடுத்துக் கொண்டிருந்தான். அருகிலிருப்பவர்கள் பேசுவதைகவனித்தேன். …

>>

ஜே. செல்லம் ஜெரினா/எங்கிருந்தோ வந்தான்!

சுருட்டுப்புகைய கால்மேல் காவ் போட்டு காலாட்டி படுத்து திடீரென்று ஒருகையை வானோக்கி உயர்த்திக் கொண்டு அதுவும் கழுத்து ஒரு தினுசாய் ஏடாகூடமாய் பார்க்கவே பயமாய் யாரிவன்? அகோரியாம் ! சித்தராம்! ஏதேதோ கிசுகிசுப்புகள்.ஒற்றை வார்த்தை பேசுவதில்லை.. சாப்பிடக் கொடுத்தால் சிலசமயம் வாங்குவான் …

>>

உமா ஸ்வாமிநாதன்/வானம் தொட்ட விரல்

​அமாவாசை நள்ளிரவு. மயானத்தின் அமைதியை உலைக்களப் புகையும் சுடுகாட்டுச் சாம்பல் மணமும் சூழ்ந்திருந்தன. ​அங்கே அவன் நின்றிருந்தான். யாரிடமும் பேசமாட்டான். அவன் எதுவும் சாப்பிடுவது இல்லை.உடலெங்கும் திருநீறு பூசிய அகோரி. அவனது வலது கை ஆள்காட்டி விரல் எப்போதுமே வானை நோக்கி …

>>

முனைவர் என் . பத்ரி/நதியோரம் ஒரு சாமி

சங்கரன் மிகுந்த சிவ பக்தி உடையவன். அவனுடைய பெற்றோர்களும் அப்படியே. தினம் தினம் ஈசன் கோவிலுக்கு செல்லும் அவனுக்கு பன்னிரு திருமுறைகளும் மனப்பாடம். பொறியியல் பட்டதாரியான அவனுக்கு சமீபத்தில் வேலை கிடைத்தது. என்றாலும் வேலையில் மன அழுத்தம் கூடியது. என்ன செய்வது …

>>

சுபாஷிணி ரமணன்/கங்கை கரையில்

கங்கைக்கரையில் சந்தானமும், முனுசாமியும், அலைந்து திரிந்து விட்டு அந்த மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். “டேய் முனு, எப்படியாவது எங்க அப்பனைக் கண்டுபிடிக்கணும்டா.” “நம்ம ஊர்ல தான, இத்தினி நாளு இருந்தாரு. அங்கல்லாம் விட்டுட்டு இங்க தேடி வந்திருக்கீங்களே! ” சலித்துக் கொண்டான் …

>>

கௌரி சங்கர்/அகோரி அண்ணாசாமி

அகோரி வந்திருக்காராம் நம்ம ஊருக்கு. எல்லோரும் அவரை பார்த்திருங்க. அவர் முன்னால நின்னு அவரை கும்பிட்டுட்டு மனசுல உங்க விருப்பத்தை நினைச்சுக்கோங்க. கையை உயர்த்தி காட்டுனாருன்னா, உங்க விருப்பம் நிறைவேறிடும்னு நினைச்சுக்கோங்க. மறக்காம சுருட்டு ஒண்ணே ஒன்னு அவர்கிட்டே குடுத்திடுங்க.கத்திக்கொண்டே முண்டாசுப்பட்டி …

>>

வசந்தா கோவிந்தராஜன்/மகனா, மகானா

அவனைப் பார்த்ததும் ரேவதிக்குப் பரபரப்பு. நான்கு வருடங்களாக இவனுக்காகக் காத்திருக்கிறாள். அவன். மகேஷ்வரன். அத்தை மகன். பொறுக்கி என்று ஊரே சபித்த வேளையிலும் இவளால் அவனைத் தன் மனத்திலிருந்து தூக்கி எறிய முடியவில்லை. அந்த நாள் அவள் நினைவுகளில் இன்னும் சிப்பிக்குள் …

>>

அழகியசிங்கர்/சித்தர்

அவன் ஆராய்ச்சி மாணவன். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சித்தி அடைந்த யோகி ராம்சுரத் குமார் பற்றி அவன் புத்தகம் எழுதி இருக்கிறான்.அது இன்னும் பரபரப்பாக விற்றுக் கொண்டிருக்கிறது. யோகியாரைச் சந்தித்த அனுபவத்தை எழுதி இருப்பான்.இப்போது திருவண்ணாமலைக்கு திரும்பவும் வந்திருக்கிறான்.திருவண்ணாமலையில் எல்லா இடங்களையும் …

>>