நாரைக் கூட்டம்

அழகியசிங்கர்

ஒரு பாறையின் கீழ் நாரைக் கூட்டம் சிறப்பாக வாழ்ந்து வந்தது.
நரிக்குப் பிடிக்கவில்லை. நாரை இடும் முட்டைகளின் மீது அதன் கவனம். நாக்கைச் சப்பிக்கொண்டு எப்போது கவர்ந்து வரலாமென்று யோசித்துக் கொண்டிருந்தது.

ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை. ஒரு கிழ நாரை முட்டைகளை காவல் காத்துக் கொண்டிருந்தது. நரியால் நெருங்க முடியவில்லை. நிறைவேறாத ஆசையாக இருந்தது. ஒரு நாளைக்கு இரு முறை அந்தப் பாறையைச் சுற்றி வந்தது. ஒரு பிரயோசனுமில்லை.

திடீரென்று ஒரு நாள் பாறையில் நடமாட்டம் எதுவுமில்லை. கிழ நாராயிக்கு என்ன ஆயிற்று என்று யோசித்தது நரி.

மெதுவாக பாறையில் ஏறி நாரைகள் முட்டைகளைச் சேர்த்து வைக்கும் இடத்திற்குச் சென்றது.

அங்கு ஒன்றுமில்லை. பெரிய ஏமாற்றம் நரிக்கு. அவசரமாகத் திரும்பியது. அதன் கால் மாட்டிக் கொண்டது பாறை இடுக்கில்.