பானுமதி.ந
சுடரே! கன்னல் பின்னல் கைக் கொண்டவளே!
இடரே படரின் அரிமாயேறி ஆட்கொள்பவளே!
மடமை அகற்றி மதியச் செதுக்கும் அருள் கொண்டவளே!
திருவே! கமலம் கவளம் கைக் கொண்டவளே!
மருவே வாரின் கறுவே கொண்டு கடித்தெறிபவளே!
உளமே அழகும் திருவும் பெறவே வரமேயருள்வாய்.
அறிவே! வெண்மை மென்மையுடல் கொண்டவளே!
கருமை அகற்றிக் கடமை புகட்டி கதியளிப்பவளே!
மறுமை இம்மை இரண்டிலும் அறிவுச் செல்வமளிப்பாய்.
