பண்ணைவீடு/ஹரணி

ஐந்து மணி நேரம் ஆனது முடிக்க.
வீட்டிற்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து காத்திருக்க ஆரம்பித்தான்.
அடுத்த அரைமணியில் அவர் வந்தார்.
வந்தவர் வீட்டையும் அவனையும் பார்த்தார்.
முகம் மலர சொன்னார்.
அற்புதமா இருக்கு இந்த பண்ணை வீடு. இந்தா நீ கேட்ட பணம்.
வாங்கிப் பையில் வைத்துக் கொண்டு சைக்கிளை எடுத்தான்.
மீண்டும் ஒருமுறை பையில் வைத்த பணத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு அப்பாடா இந்த மாத வீட்டு வாடகை பிரச்சனை தீர்ந்தது என்ற நிம்மதியோடு சைக்கிளில் ஏறி மிதிக்க ஆரம்பித்தான் பண்ணை வீட்டை வரைந்த அந்த ஓவியன்.