லேவ். தல்ஸ்தோய்/கருமி

(எறும்பும் புறாவும்
என்ற புத்தகத்திலி ருந்து)

கருமி ஒருவன் தனது வீட்டில் பெரிய பெட்டி நிறையப் பணம் சேமித்து வைத்திருந்தான். அதைக் குழி தோண்டிப் புதைத்து வைத்து, பார்ப்பதற்காக ஒவ்வொரு நாளும் ரகசியமாக போய் வந்தான். இதைப் பார்க்க நேர்ந்த அவனுடைய வேலைக்காரன் பணப்பெட்டியைத் திருடிச் சென்றான் அது காணாமல் போய்விட்டதை கண்ட கருமி அழ ஆரம்பித்தான். அடுத்த வீட்டுக்காரன் அவனைப் பார்த்து கேட்டான்:
“ஏன் அழுகிறாய்? அந்தப் பணத்தைக் கொண்டு நீ எதுவும் செய்யப் போவது கிடையாது, இல்லையா? அது இருந்த அந்தப் பள்ளத்தைப் போய்ப் பார்.
என்ன வித்தியாசம் இருக்கிறது?”