செப்டம்பர் பதினொன்று

நாகேந்திர  பாரதி

ஒரு நிமிடக் கதை -1

திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மறுபக்கம் . . பயத்தோடு இறங்கும் அவனை சறுக்கும் பாறை வழுக்கி விடுகிறது . ஓடி வரும் அவனை  எதிர்கொண்டவன் கட்டிப்பிடிக்க உருண்டு வருகிறார்கள் . கீழே ஒரு கனத்த பாறை . அதன் மறுபக்கம் அடிவாரத்தில்  தெப்பக்குளம் .
 

ஒரு நிமிடக் கதை -2

நியூயார்க் நகரின் உலக வணிக மையத்தின் சுரங்கப் பாதை ரெயில் நிலையம் . இயங்கும் படிக்கட்டில் ஏறி வெளிவந்த அவனுக்கு வழக்கம் போல் புன்னகை வணக்கம் சொல்லிய விக்டோரியா ரகசிய வாசனைக் கடைப்  பெண் . அடுத்த சில மாதங்கள் கழித்து திரும்பிய அவனது  வங்கிக்கு சற்று தள்ளி ஒட்டப்பட்டிருந்த காணாமல் போனவர்கள் படங்கள்  . அதிலும் அதே வணக்கப் புன்னகையோடு சிரித்துக்கொண்டிருந்தாள் அவள் .