மலையில் ஒரு விருந்து

  • லீ போ

மொழி பொ : க.மோகனரங்கன்

எமது ஆன்மாவை
அவற்றினுடைய நாட்பட்ட
பழைய துயரங்களினின்றும்
கழுவிப் பிழியவென
நூறு ஜாடி மதுவை
நாங்கள் காலி செய்தோம்.
அது அற்புதமானதொரு இரவு…
நிலவு பிரகாசமாக ஒளிரும்போது
படுக்கைக்கு செல்ல எங்களுக்கு மனமில்லை,
ஆயினும் கடைசியில் குடிமயக்கம் எம்மை ஆட்கொண்டது ;
மலையில் வெட்டவெளியில்
நாங்கள் சாய்ந்தோம்,
பூமி தலையணையாக,
விரிந்த வானகமோ
எமக்கு போர்வையாயிற்று.

One Comment on “மலையில் ஒரு விருந்து”

Comments are closed.