10 செகண்ட் கதைகள்/சுரேஷ் ராஜகோபால்

😄😄😄

தீர்க்க தரிசனம்

‘அமைச்சர்’, ‘முன்னாள் அமைச்சர்’னு ரெண்டு நேம்போர்டு செய்யச் சொல்லிடுங்க…” மாண்புமிகு அமைச்சர் ராசவேலு ரகசியமாகப் பிறப்பித்த முதல் ஆணை இதுதான்!

வீழ்ச்சி

‘வீழ்வேனென்று நினைத் தாயோ?’ டிஷர்ட் அணிந்த இளைஞன், டாஸ்மாக் வாசலில் விழுந்து கிடக்கிறான்!

புகார்

” ‘பசங்களை அடிக்கிறான், திட்றான், கிள்ளுறான்’னு ஸ்கூல்ல இருந்து நம்ம பையனைப் பத்தி ஒரே புகார் மழை. இனிமே அவனை வாத்தியார் வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிடுங்க” என்றாள் கமலாம்மா!

உதவும் உள்ளம்

”ஐயோ காப்பாத்துங்க!” என்ற அலறலோடு ஆற்றில் தத்தளிப்பவனை நோக்கி ஏழெட்டு பேர் ஓடினார்கள் கையில் செல்போனோடு!

மாங்கல்யம் தந்துனானே

கெட்டிமேளம் கொட்டியதும், ‘நிறுத்துங்க’ என்ற குரல் கேட்டு மண்டபமே மண மேடையை நோக்க, ”இருங்க தாலி கட்டுறதை செல்ஃபி எடுத்துக்கிறேன்” என்றான் மாப்பிள்ளை கூலாக!

ஸ்மார்ட் நீதிக் கதை

தாத்தா கதை சொன்னார்… ”ஜாடியில் குறைவாக இருந்த தண்ணியை, ஒவ்வொரு கல்லாக எடுத்துவந்து போட்டு மேலே வரச்செய்து, காகம் தாகம் தீர்த்தது.” பேத்தி கேட்டாள், ”கல்லுக்குப் பதிலா ஸ்ட்ராவை எடுத்து வந்திருந்தா, ஈஸியா குடிச்சிருக்கலாமே தாத்தா?”

பொங்கிட்டோம்ல

மேடையில் தலைவர் முழங்கினார்,”பொறுத்தது போதும்… பொங்கி எழு!” செருப்பு வந்து விழுந்தது.

வாய்மை

தூக்குத்தண்டனை கைதியிடம் கடைசி ஆசை கேட்கப்பட்டது. ‘எனக்கு தண்டனை கிடைச்சிடுச் சுன்னு விட்டுடாம, எப்படி யாவது உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிச்சிடுங்க சார்’ என்றான்!

One Comment on “10 செகண்ட் கதைகள்/சுரேஷ் ராஜகோபால்”

Comments are closed.