விஜயலக்ஷ்மி கண்ணன்/நாற்காலி

10 வரியில் ஒரு கதை

இன்று தமிழ் வகுப்பில்
ஆசிரியர் எல்லோரையும் 10 வரிகளில் ஒரு குட்டிக் கதை. எழுத சொன்னார்.
பரிசுகளும் உண்டு என்றவுடன் நாங்கள் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு கதை எழுதி சமர்ப்பித்து
விட்டோம்.
எனக்கு அந்த நாற்காலி தான் ஞாபகத்திற்கு வந்தது.
எத்தனை பேர்கள் வீட்டிற்கு வந்து போனாலும்
அந்த நாற்காலி மட்டும் அங்கேயே இடம் மாறாமல் இருப்பது எனக்கு ரொம்ப ஆச்சர்யம்.
ஒரு காலத்தில் தாதாவும் பாட்டியும் மாறி மாறி அந்த நாற்காலியில் உட்கார்ந்து எல்லா விஷயங்களும் அலசுவார்கள்.
தாத்தா காலமானபின் பாட்டி இடத்தை பிடித்துக்கொண்டாள்.
பாட்டியும் இறந்த பிறகு யாருக்கும் அந்த நாற்காலியில் உட்கார இன்னும் தைரியம் வரலை.
அதே கிழிந்த இருப்பிடம்,
பாலிஷ் மங்கி வெயில் பட்டு வெளுத்து வாடிய நாற்காலி.அதற்கு வாய் இருந்தால் அழும்!