
“ஏன் டல்லா இருக்கே? நான் சொன்னபடி
விநாயகரை தரிசித்து வேண்டிக்கிட்டியே .
உனக்கு நல்லதே நடக்கும். இனி கவலையை
விடு.”
“எனக்கு நான் பரீட்சை சரியாக எழுதலையோ
அப்படின்னு கவலையா இருக்கு”
தன்நண்பன் சத்யாவின் புலம்பலை திரும்பத்
திரும்பக்கேட்டு அலுத்துப்போனவனாய்
அருண்” த்ச். நீ ரொம்ப குழம்பிப்போயிருக்கே
பேசாமல் இருடா” என்று கோபத்துடன் சொன்
னான்.
சத்யாவின் சந்தேகம் உண்மையாகிப்போன
தும்”பார்த்தியா என்னைப்போலதுரதிஷ்டம்
பிடிச்சவனை விநாயகரல்ல வேறு எந்தக்
கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
மார்க் ரொம்பக்குறைவாவந்திருக்கு. இன்னும் ஒரு
மார்க் குறைவாக வாங்கியிருந்தால்கூட பெயிலாகி
இருப்பேன்” சத்யா கண்ணீருடன்
சொன்னதும் வருத்தமடைந்த அருண்” நான்
ஒண்ணு கேட்கிறேன். நீ மறைக்காமல் பதில்
சொல். நீ ஒருநாளில் எத்தனை நேரம் படிப்பே?”
“முக்கால் மணிநேரம்தான் கிடைக்கும்.”
“மத்தநேரத்தில் என்ன பண்ணுவே?”
“இதென்ன கேள்வி? தொலைபேசி, தெலைக்
காட்சி சீரியல்களனு நம்மை ஈர்க்கிற விஷயங்கள்
எத்தனை இருக்கே. விநாயகர்
என்னை இப்படி கைவிட்டுவிடுவார்னு நான்
நினைக்கவே இல்லை”
“ஷட் அப் அவரைக்குத்தம் சொல்லுகிறதகுதி
உனக்கு இல்லை.”
“என்ன சொல்லறே?”
“பரீட்சைக்கு சரியாக படிக்காமல் எழுதினால்
எப்படி நல்லமார்க் வரும்.?கடவுளை வேண்டிக்
கிட்டால் மட்டும் போதாது. முயற்சியில் வெற்றி கிடைக்க
நீயும் நன்றாக உழைக்கணும். நீ கேள்விப்பட்டிருபியே.
God helps only those who help themselves மத்தபடி
கடவுள் வந்து உனக்காக பரீட்சை எழுதமுடியுமா?”
சத்யா பதில் சொல்லமுடியாமல் வாயடைத்துப்போய் நின்றான்.
.
