
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
கடற்கரை பார்த்தபின்
கால் கூட நனையாமல்
வர முடியுமா என்ன?
வந்து வந்து பாதம்
தொட்டுத் தொட்டுப்
போகிற அலைகளில்
ஆழ்ந்து நின்றிருந்தேன்.
வேகமாய் வந்த அலைகள்
கால் தொட்டு
போ போவெனச் சொல்ல
போகட்டுமாவெனக்
கேட்டபடியே நின்றிருந்தேன்.
மீண்டும் கடலுக்குள்
போகிற அலைகள்
வா வாவெனச் சொல்ல
வரட்டுமாவெனக் கேட்டேன்.
வந்தும் போனதுமாயிருந்த
அலைகள் சொல்லின
போய் வா !!!.
