14. பானுமதி ந/ படகுகள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

தானே பயணியாய்ச் செல்லும் படகுகள்.
எளிய வடிவத்தில் சிறுவன் கைவினை
கத்திக் கூர்மையாய் நீர்க் கிழிக்கும் சிலத்துக்
கூடைத் தலையை நிமிர்த்திச் சிரித்து
இளமையின் மதர்ப்பில் ஓடும் அவற்றை
ஏந்திச் செல்லும் ஓடையும் காற்றும்
கைகலத்து எக்களித்துக் குறுகும் வடிவாய்
சிறு பாறை உளியால் தட்டிக் கவிழ்த்து
மெய்யுணர்த்தி மேலெழும் போதிலே
அடுத்த பவனியின் ஆலிங்கனம் பார்த்து
சின்ன சின்ன மொக்குகள் தமக்குள்
ஆனந்திப்பது எதற்கோ? இனம் கண்டதென்றோ?