ஹரணி/முதலிரவு

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை விதவையாகத் தொடங்கும்முதலிரவு இது..கைப்பிடித்து நடந்த முதலிரவில்கைவிடமாட்டேன் என்று சொன்னவன்முப்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தான்மூன்று குழந்தைகள் பிறந்தமுதலிரவுகளிலும் அருகிலேயேஇருந்தான்தன் அப்பாவையும் அம்மாவையும்பறிகொடுத்த முதலிரவிலும்பிள்ளைகளைச் சாப்பிடவைத்துஉறங்கவைத்துச் சென்றான்..யாரிடமும் பகையில்லைபேரன்பு ஒன்றே காட்டினான்பொறாமைப்படவே வாழ்ந்தோம்பிள்ளைகள் வளர்ந்து நிற்கிறார்கள்வாழத் துடிக்கிறார்கள்அவனின் அடையாளத்துடன்இனி …

>>

இராஜாமணி/இலக்கற்ற பயணம்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை முடிவில்லா நீண்ட பயணத்தைத்தொடங்கிய போதுபலரும் கூடப் பயணித்தார்கள். ஏற்றமும்,இறக்கமும்சவால்களுமானபயணத்தில் கூட வந்த பலர்சிலரானார்கள்.இலக்குகளை அடைந்தபின்புதிய இலக்குகளை நோக்கியபயணம் தொடர்ந்தது. நீண்ட தூரம் பயணித்தபின்இலக்குகளென்று எதுவுமில்லைஎன்றுணர்ந்த பொழுது,தொடங்கிய இடத்திற்குத்திரும்ப முடியாப் பயணமானது. கூடப் பயணித்தவர் யாரும் …

>>

நெல்லை க.சோமசுந்தரி/சுட்ட நெருப்பு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் மகிழ்ச்சியாய் நட்டு வைத்தமஞ்சணத்தி மரம்வேலியிட்டு வெகுதூரத்தில்பூத்து நிற்கும் பூவில் தெரிகிறது?மரணித்த அப்பா உயிர்ப்பாய்…நேசித்த தோட்டத்தின் அடையாளம்! காலச் சூழலில் விற்றுக் கடந்தகிராமத்து வாசம்!சிறுபிராயத்து ஞாபகமாய்மனதில் எட்டிப் பார்க்கிறது! ஒவ்வொரு மாற்றத்திலும்கனமாய் வெளிப்படும் …

>>

லாவண்யா சத்யநாதன்/என்ன செய்யலாம்?

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் ஒரு பொறியாய் மின்னல் கீற்றாய்ஊற்றுநீராய் மனதில் கவிதைபிறக்கவேண்டும்.அப்படி எதுவும் தோன்றாதபோது.மருத்துவ மனையில்லாத கிராமத்தில்அனைத்து ஜாதிப் பெண்களுக்கும்அக்கிரகாரத்து அச்சுகுட்டிப் பாட்டிபிரசவம் பார்த்ததை எழுதிஆவணப்படுத்தலாம்.போதாது போனபிள்ளைகளின் உடைகளைஅனாதை இல்லங்களுக்குத்தந்து வரலாம்.குடியிருப்புச் சிறுவர்களுடன்ப்ளாஸ்டிக் பந்துகிரிக்கெட் விளையாடி …

>>

ஆ. மோகனச்சந்திரன்/திருத்தேநீர்கண்டம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் பனி விழும் விடியல்களிலும்மழைக்குப் பின் வெளிறியமுன்மாலை பொழுதுகளிலும்நள்ளிரவு நெடுஞ்சாலைநிறுத்தங்களிலும்அரைக் கோப்பைதேநீர் கொண்டுஇருத்தலின் அத்தனைஇடர்களையும் ஒரு மிடற்றில்கரைத்துவிடும் எனக்குஅலுவலக மேசையில்மேலாளருக்கு மட்டும்பரிமாறப்பட்ட தேநீரின்கசப்பு தொண்டையில்விக்கி நிற்கிறது!

>>

கேள்விக்காரன்/எவருக்கேனும் தூவும் சாரல்…

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் அந்தபன்னீர்ப் பூக்கள் மரம்ஒரு பெரிய நிழற்குடையாய்கவிந்துதரை எல்லாம்பூ விரி மெத்தை அந்த பெரும் ஏரிநீர்ப் பிடிப்பில்லட்ச லட்சமாக நீந்தும்மீன்கள் அந்த நீலவிரிவான் பரப்பெங்கும்முத்து முத்தாய்நட்சத்திர பதிப்புகள் அந்தக் கவிஞன்நோட்டு எங்கும்வெண் மண்கவிதை …

>>

ஸ்ருதி ரமணி/காட்சிகள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் அவிழ்த்து விடப்பட்டகிழண்டு போன குதிரைகள்ஓட்டிவிடப்பட்டஒன்றுக்கும் உதவா மாடுகள்மதில்களில் மறைந்து பதுங்கிபால் திருடக் காத்திருக்கும்கள்ளப் பூனைஇரவுப் பேருந்தில் அகப்பட்டுசாலையில் பதிந்த சித்திரமாய்கோரக் காட்சியாய்கண்ணில் பட்டுவிடும் ஒரு நாய்கோயில் –வாயிலிலும் வெளிகளிலும்தவிர்க்க இயலாமல்தவறாமல் காணக் …

>>

புஷ்பா விஸ்வநாதன்/இவளும் ஒரு பத்தினிதான்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் கணவனின் கட்டளையால்கற்பைப் பறைசாற்றக்கனல் கக்கும் தீக்குளித்தசீதை ஒரு பத்தினி கணவர் ஐவரானாலும்;ஒருவனுக்கு ஒருத்தியாய்உத்தமியாய் வாழ்ந்ததிரௌபதி ஒரு பத்தினி கணவனைப்பழி சொன்னஅரசனைக் கண்டித்துஊரையே எரித்தகண்ணகி ஒரு பத்தினி கணவன் கைவிட்டபின்கண்டவனுக்கும் கடமையாய்முந்தானை விரித்துஉச்சம் …

>>

இ.செல்வராஜ்/கரட்டாண்டி

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் உலகின் மிகப் பெரியலாகிரி வஸ்துஉள்ளங்கை வெள்ளித்திரைவிரலின் தொடு முனையில்இணையமே கணையமாய் சுரக்கஇனிப்பின் கீறல்களில் காலம் கழிகிறதுமனிதக் குலத்தை முடக்கிப் போட்டடவர்களின் வலைத்தள குள்ளநரிகள்எங்குப் பார்த்தாலும்கரட்டாண்டிகளின் தலை தூக்கல்கள்தூக்கித் தூக்கிப் பார்க்கும்இடைச் செருகல்களில்விளம்பரம் …

>>

அதிரன்/பராக்கிரமம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் எல்லோரும் பார்த்துவிட்டார்களாம்.அவளும் பார்க்க வேண்டுமாம்அடம் பிடித்தாள் மகள்… கூட்டிக்கொண்டு போனான்ஒரு அந்தி பொழுதில்அந்த நூறு அடி உயர மன்னன்சிலையை காண… நெருங்க நெருங்ககைகளை இருகப்பற்றி கொண்டவள்கேட்கிறாள்நிஜமாகவே மன்னன் இவ்வளவுஉயரமா ? என்று …

>>

க. பூமணி /இரவின் நிலவு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் ஒற்றை மர பின்னணியில்ஒளிந்து கொள்ளும் நிலவே!அரை வட்ட வடிவில்என்னைத் திட்டம் போட்டுஎன் மனதை திருடும் உயிரே!பேருந்து பயணத்தில்ஒவ்வொரு மரத்தின் இடையேஎன்னைப் பார்த்து ரசிக்கும் மதியே!வாடிய என் முகமும்உனை பார்த்து மாறுது புன்னகையாய்!என்னுள் …

>>

ஆர் வத்ஸலா/ஏமாறல்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் மாதம் ஒரு நாள்“அம்மா, ஒரு மாரி ‘கேரா’ இருக்கு”எனக் கூறி விடுப்பு எடுப்பாள்வீட்டுப் பணி புரிபவள்விதவைகளுக்கான உதவி பணம் வாங்கஅவள் “39 க்யூ 39” வரிசையில்நிற்கும் நாள் அதுஎனத் தெரியும் எனக்குஅதே …

>>

சசிகலா விஸ்வநாதன்/நினைவுகள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் காற்றின்றி வெளிமகிழம்பூ ஒன்றுமெத்தென்று முத்தமிட்டதுபாதத்தை. நீல நிற வானம்வெள்ளிக் கதிர்களினூடேசாரல் துளி சில்லென்றுபுறங்கையில். அந்தி மாலை மயக்கத்தில்சாதி மல்லி நறுமணத்தின்போதை; நாசியில். கருநீல வானில்ஒளிர்ந்த தாரகைகளிப்புடன் சரட் டென இறங்கியது;நெஞ்சில். கண்மூடி …

>>

ப.மதியழகன்/கும்பமேளா

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் இந்த வாழ்க்கை என்னிடமிருந்துஅனைத்தையும் பறித்துக் கொள்கிறதுநான் கற்ற சொற்களைநான் படித்த புத்தகங்களைஎன்னிடம் அன்பு காட்டியவர்களைஎன்னுடைய தாய், தந்தையைஎன்னுடைய மனைவியைஎன்னுடைய குழந்தைகளைஎன்னுடைய குருமார்களைஎன்னுடைய அந்தரங்கங்களைஎன்னுடைய நினைவுகளைஎனக்கு ஒளி தரும் சூரியனைக்கண்சிமிட்டும் நட்சத்திரங்களைவெளிர்நீல வானத்தைகிளிஞ்சில்களை …

>>

எல் ரகோத்தமன்/கிழவியின் சிரிப்பு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் அந்த ஓவியத்தைபார்த்துக் கொண்டிருந்தேன்!வண்ணங்கள் ஈர்த்தன!ஆனால் எதுவும் புரியவில்லை!உற்று பார்த்தேன்ஒரு கிழவியின் பொக்கைவாய் சிரிப்புதெரிந்தது!எங்கள் ஊரில் இதே போல்ஒரு பொக்கைவாய் கிழவி இருந்தாள்!அவள் ஒரு நாள் திடீரெனஊர் குளத்தில் விழுந்துதற்கொலை செய்து கொண்டாள்!அந்த …

>>

கீர்த்தி/விட்டுச் சென்றவை

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் நான் தின்றதுபோகஇன்னமும் கொஞ்சம்பழங்கள் இருக்கின்றனஅம்மரத்தின் தாழ் கிளையில்.அவற்றை உண்பதற்கானசிறுபசியும்கூட மீதமிருக்கிறதுபறித்தெடுத்துச் செல்லகையில் இருக்கவே செய்கிறது கூடையும்.பழங்களை விட்டுவிட்டேநடக்கிறேன் இப்போது.நான் வந்தபோதுகனிந்து கிடந்த பழங்கள்என்னைப்போல் யாரேனும்சிறு பசியோடு விட்டுச் சென்றதாகவும்இருக்கலாம்தானேஅடுத்து வரவிருந்த எனக்காக.

>>

ஷாஅ/சம வெளியில் கெட்ட கனவு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் எல்லாச் சரிகளுக்கும்குறைபாடுகளுடன் ஒரு ஜென்ம பந்தம்இருக்கத்தான் செய்கிறதுபயனில் இருக்கும்தலைப்பாகையை தோள் துண்டைவிரிப்பைநாற்காலியைச் செருப்பைஉன் என் சாப்பாட்டுத் தட்டுக்களைநீ இட்ட மெல்லிய கோட்டின்எந்தப் பக்கம் வைப்பது வெட்டி விசனம் இல்லை விகாரம் இல்லைகோட்டின் …

>>

சுந்தரராஜன்/பொங்கலும் பீட்சாவும்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் என் அம்மாவின் கைமணம் யாருக்கும் வராது.அவள் தரும் பொங்கலுக்கு. உலகத்தையே தரலாம்.சுவை அரும்புகளுக்குத் தீனி போட்டவள் அவள். அம்மாவுக்கு நாலு தங்கைகள் ஒரு தம்பி . காசியில் மைசூரில் பாலக்காட்டில், நெல்லூரில்.காசி …

>>

செ.புனிதஜோதி/நிலையாமை

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் சுருங்கிப் போனஉறவை கண்டுவருத்தப்படுகிறதுஅன்பியல்… முதுகிலேறி நிற்கும்தனக்கான அடையாளங்களைநோக்கி ஓடஎல்லோரும் சிறகை வளர்க்கும்பறவைகளானோம்என்று சொல்கிறதுவாழ்வியல்… நதியின் ஓட்டத்தில்விழுந்த சருகாயிருந்தால்அடையாளமற்று போவதுஉறுதி என்கிறதுஅனுபவம்.. சொற்களை அடுக்கிஆயிரம் சொன்னாலும்எதுவுமே நிலையில்லை என்னும்உண்மையை மெதுவாய் உணர வைக்கிறதுதத்துவம் …

>>

சௌமியா ரெங்கராஜன்/சொல் எனும் மந்திரம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் நம் நா, உதிக்கும் முதல் சொல்லுக்குஏங்கிய உலகம்!நம்மைப் பேசாமலிருக்கக்கடவுகிறது…நம் நா, ஒருவரைப் பேசியேவாழவைக்கிறது!சிலரைப் பேசாமல் வீழ்த்துகிறது…நம் நா, இனிய சொற்கள் கொண்டு மயக்குகிறது!கொடும் சொற்களால் கொல்கிறது…நம் நா, விதைகள் வேரூன்றி விருட்சமாக …

>>

இந்திரநீலன் சுரேஷ்/பூஜைக்கு வராத மலர்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் முட்களுக்கு நடுவே பூத்த புது ரோஜாவைமுந்தி பறிக்கப் போட்டியிட்ட காலம் ஒன்று.பகலில் உறங்கி இரவில் மலரும் அல்லியாகமடை மாற்றிய பின் காவல் இல்லை,வேலியில்லை ; காதலிக்க ஆளும் இல்லை.மனம் காண, மணம் …

>>

கே.ஸ்டாலின்/தவறவிட்ட கணம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் பரிசை வாங்கிக்கொண்டுமேடையிலிருந்து இறங்கியவள்புகைப்படம் எடுக்கத் தவறியதாய்மீண்டும் அழைக்கப்பட்டாள்.விருந்தினர் இன்னொரு முறைசெயற்கை பெருமிதத்தை எளிதாய்முகத்தில் அணிந்துகொள்ளஅவள் உதட்டுச் சுருக்கத்தில்எங்கோ மறைந்திருக்கும்வெட்கப் புன்னகையை மீண்டும்வரவழைக்க முயன்றுதோற்கிறார் புகைப்படக்காரர்.

>>

சிறகா/உயிர்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் புரளும் அலையில்சுழன்று சுழன்று தன்னைசுத்திகரித்துக் கொள்கிறதாஇந்த மனம் தெறிக்கும் நீர்த் திவலைகளாகநிலையற்ற வாழ்வின்தேவையற்றவற்றைஉதிர்த்து விடுகிறதாதெறித்துத்தெறித்து இறையிடம்தன்னை முழுமையாகச்சமர்ப்பிக்கக்காற்றில் கரைகிறதுகாற்றில் கரைகிறதுகாற்றில்கரைகிறது ஆத்மா

>>

தாணப்பன் கதிர்/தீராப் பசி..

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் முடைந்த கீற்றில்உயிர்த்த தெய்வம்காட்சியாக நிற்கிறது.சல்லடையிட்ட புள்ளிகள்தீர்த்திடவில்லைமுடைந்தோரின் பசியினை.வேடிக்கை பார்க்கும்கூட்டத்திற்கொன்றும்குறைவில்லை.பத்தில் ஒருவர்வாங்கியிருந்தாலும்பசியாவது ஆறியிருக்கும்.பித்தம் தெளியா மனங்கள்பார்வைக் கடத்தலில்உச்சுக் கொட்டிப் போனது.சித்தம் இதுவேயெனஇன்னும் முடைந்துகொண்டிருக்கிறாள்.தீர்ந்திடவில்லைஇன்னும் பசி.

>>

இரா.சீனிவாசன்/இடைவெளி

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் உன் வீட்டு வெளிக்கதவும்என் வீட்டு வெளிக்கதவும்அருகாமையிலிருந்தாலும்அவைகளே எல்லைக்கோடுகளாய் அமைகின்றனபார்வையை பரிமாறிக்கொண்டாலும்நேசத்தை பரிமாறிகொள்ளமுயல்வதில்லை.உன்னைச் சார்ந்த நிர்பந்தங்களும்என்னைச் சார்ந்த அழுத்தங்களும்எல்லைக்கோடுகளாய் நின்றுயாசிக்கவும் யோசிக்கவும்வைக்கிறது.

>>

மேரி சுரேஷ்/இன்னுமொரு வாழ்வு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் இன்னும்எங்கேயோஎன் வாழ்வுமீண்டுமாய்மற்றுமொரு பெயரில்வேறொருத்தியால்வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறதுநான் விரும்புவது போல. இருக்கிற இடம் தெரியாமல்நடந்து கொள்கிறாள்நிம்மதியாக. ஏனென்றால்அவள்புத்திசாலி.

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/உயிர்த்தலின் சத்தம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் விச்ராந்தியாய் நின்று கொண்டிருந்தேன்செய்வதற்கு ஒன்றுமில்லைபக்கத்தில் ‘ க்க்ரக்க்… க்ரக்க்…’ சத்தம்திரும்பிப் பார்த்தேன்ஒரு தவளை…. சத்தமிட்டபடியே தாவிக்குதித்தது.உற்றுப் பார்த்தேன்அதுவும் தலைதூக்கி என்னை பார்த்ததுபிறகு அதன் போக்கில்‘க்க்ரக்க்… க்க்ரக்க்…’ சத்தமுடன் நகர்ந்தது.நாலைந்து தாவல்களுக்கு ஒருமுறை …

>>

ரகு மயில்வாகனன்/அழகு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் நெகிழிப்பை கிழிந்து வீதியில் உருளுகிறது கொய்யாதாத்தாவின் விரல் பிடித்து வீதி உலா வந்த சிறுமிஉருளும் கொய்யாவைப் பார்த்து உற்சாகமாகிறாள்சிறுமியின் சிரிப்பைக் கண்ட சிறுவன்னி மரத்தடி பூக்காரம்மாபொக்கைவாய் சிரிப்போடு இரத்த சிவப்பு ரோஜா …

>>

விஞ்ஞானி/கொள்ளிவாய் பிசாசு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் வலியோடு வெடித்த அப்பாவின்கோபம்கெஞ்சிப் பரிதவித்த அம்மாவின்வருத்தம்கொள்ளிவாய் என்றழைத்தநண்பர்களின் ஆதங்கம்புகைவண்டி இவன் என்றமடந்தையரின் கிண்டல்செல்லமாய் சண்டையிட்டமனைவியின் அக்கறைஉடலுக்குத் தீதெனச் சொல்லும்என்னுடைய அறிவுஈதெதற்கும் அசராத நான்ஒரு நாள்நெஞ்சுக் கூட்டுக்குள் புகுந்துதேள் ஒன்று கொட்டபுகைப்பதை விட்டு …

>>

20. வே. சரஸ்வதி உமேஷ்/ சிக்கனம்

தண்ணீர் குழாயில் நீர் கசிந்து கொண்டிருந்ததுநாளை சரி செய்வோம் ஒத்தி வைத்த மனதிற்கு,குழாயடியில் ஒரு வாளியை வைக்கத் தோணவில்லை..மூன்று நாட்களாய், கட்ட வேண்டிய மின் கட்டணம்,கனவிலும், நினைவிலும் காசு கேட்டு மிரட்டுகிறது..கட்டண உயர்வைக் கடுமையாய் சாடியபடியே சென்றேன்..ஓயாமல் சுழலும் மின்விசிறியும், ஒளிரும் …

>>

19. ஏ எப் எம் றியாட்/சுயமாக இருக்க விடுங்கள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் நான் காற்றிலும் கவிதையிலும் வாழ்கிறவன்கரடு முரடுகளில் தேடித் தோற்காதீர்கள். நான் உண்மைக்கும் உழைப்புக்கும்ஊதியம் வாங்குகிறவன் என்னை உதாசீனத்தாலும்ஊழலாலும் களவெடுக்காதீர்கள். நான் பொறுமையாலும் பொக்கிஷத்தாலும் விதைக்கப்பட்டவன்என்னைப் போலிகளாலும் பொய்களாலும்அறுவடை செய்யாதீர்கள். மனிதாபிமானத்துக்கும் மலர்களுக்கும் …

>>

18 தங்கேஸ்/கடைத்தேற்றும் வெறுமை

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் வானம் கம்மென்றிருந்ததுதெரு அசையவில்லைவாசலுக்கு முன்புறக் கதவுகள்அடைத்துக் கிடந்தனகூடடையும் பறவைகளும்தங்கள் பயணத்தைமுடித்துக் கொண்டன போலும்ஏழாவது முறையாகப் பார்த்தும்வானில் ஒரு நட்சத்திரம்தென்படவில்லை அவனுக்குஉயிரற்ற பொழுதைச் சபித்தபடிகல்லாகக் கிடக்கிறது மனதுநினைவுகள் தொடும் தூரம் வரைவெறுமை தான் …

>>

17. நாகேந்திர பாரதி/பருவ மாற்றம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் எல்லாமே பக்கத்தில்இருந்ததாய் ஞாபகம் நிலமும் நீரும்நெருப்பும் காற்றும் வண்ணமும் வாசமும்எண்ணமும் செயலும் எல்லாம் புதிதாய்எல்லாம் இன்பமாய் மண்ணை விட்டுவிண்ணை நோக்கி கழுத்தும் நீண்டதுகாலமும் மாறியது

>>

16. ஜெ.பாஸ்கரன்/மழை விட்டது…

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் வெளியே மழைச் சத்தம்உள்ளுக்குள் அமைதியான புயல்.சத்தம் ஓய்ந்தது, வந்தான் வெளியே…. நீரற்ற மேகங்களின் விரிசலில்எட்டிப்பார்க்கும் காலைக் கதிரவன். காக்கையின் கழுத்துச் சிலிர்ப்பில்தெறிக்குது ஒரு சிறுமழைச் சாரல். ஈரத்தரையில் வழுக்கிச் செல்லும் நத்தைமுதுகில் …

>>

14. பானுமதி ந/ படகுகள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் தானே பயணியாய்ச் செல்லும் படகுகள்.எளிய வடிவத்தில் சிறுவன் கைவினைகத்திக் கூர்மையாய் நீர்க் கிழிக்கும் சிலத்துக்கூடைத் தலையை நிமிர்த்திச் சிரித்துஇளமையின் மதர்ப்பில் ஓடும் அவற்றைஏந்திச் செல்லும் ஓடையும் காற்றும்கைகலத்து எக்களித்துக் குறுகும் வடிவாய்சிறு …

>>

13. ராஜ. கிருஷ்ணன்/ சந்ததி

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் குறைகள் நீங்கிச்சந்ததி வாய்க்கக்குறி கேட்க,குலசாமிக்குஆடு வெட்டிப்பொங்கல் வைக்கஉத்தரவாயிற்று.வெட்டப்பட்டது ஆடு.இல்லாமல் போனது,சந்ததி….வெட்டப்பட்ட ஆட்டுக்கு

>>

12. ஆ ச கந்தன்/காதலராய் மட்டுமே இருப்பீர்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் அன்பில் தோன்றுவது காதல்ஆசையில் தோன்றுவது காமம் நெகிழ்ச்சியில் இன்பம் காதல்பொங்கிடும் வெப்பம் காமம் கண்ணீரில் ஆனந்தம் காதல்தன்னலக் கொடூரம் காமம் பார்த்துக் களிக்கும் காதல்தழுவத் துடிக்கும் காமம் முத்தம் கேட்கும் காதல்மொத்தமும் …

>>

11. கருமலைப் பழம் நீ/அதுமட்டும் தான்…

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் என்னடா தம்பி கைக்கட்டிஇப்படி நிற்கிறாயே…உனக்குஎன்னதான் வேலை தருவது?யோசித்தவாறே கேட்கிறேன்எழுத படிக்கத் தெரியுமா உனக்கு?இல்லை என்று தலையாட்டுகிறான்வீட்டுவேலை தோட்ட வேலை?அதுவும் தெரியாதா? சரி சரிவேறு என்னதான் தெரியும்?அங்கே கத்தும் மாடுகளைக் கண்டுபொங்கிவரும் ஆனந்தத்தால்…அவன்முகமலர்ந்து …

>>

10.இரா.காசிநாதன்/ அதே பெஞ்ச்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் பல நாள்….தூங்கும்என் தாத்தாவைக்கீழே தள்ளி விட்டுவிட்டுபெஞ்ச் மல்லாந்து கிடக்கும் இன்றுபெஞ்சை குப்புறக்கவிழ்த்து போட்டுவிட்டுதாத்தா போகிறார்…. நன்மதிப்புடன்

>>

ஆர் கே இராமநாதன்/உம்மாச்சி!

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் பணிகிறார்கள்பழிக்கிறார்கள்பயப்படுகிறார்கள்.உடைத்தெறிகிறார்கள்.தொழுகிறார்கள்தூக்கியெறிகிறார்கள்கொண்டாடுகிறார்கள்.கழுவிலேற்றுகிறார்கள்.காணிக்கை குவிக்கிறார்கள்கஜானா களவாடுகிறார்கள்.கதைகள் பரப்புகிறார்கள்கட்டுக்கதையென விமர்சிக்கிறார்கள்.காப்பியம் வடிக்கிறார்கள்கழிசடை என்கிறார்கள்.எங்கும் இருக்கிறதென்கிறார்கள்இல்லவே இல்லையென்கிறார்கள்.சாமியே இல்லையென்கிறார்கள்.என் சாமி/ஆசாமிகளே இறையென்கிறார்கள்.தப்பு செஞ்சாஉம்மாச்சி வந்து கண்ணைக் குத்துமாம்.தப்புகள் நடப்பதில்லையா?உம்மாச்சிக்கே கண்ணில்லையா?

>>

8. எஸ்ஸார்சி/கவியுளம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் கடலூரில் இலக்கியப்பெருமன்றக்கவிதைமாலைப்பெரு விழாஞானக்கூத்தன் தலைமைபெருமன்றச் சிவப்பு மேடையில் ஞானக்கூத்தன்எப்படிச்சாத்தியம் எல்லோர்க்கும் ஆச்சரியம்கவிதைகள் படித்தனர்கடலூர்க் கவிஞர்கள்.கவி ஜி.ஜெ வாசித்தார்’ நண்டு’ கவிதைஉழவர்க்குத்தோழனாம் நண்டு அதுவேசிறப்பென்றார் ஞானக்கூத்தன்இவர்க்கு நண்டு பிடித்ததெப்படி?பேசிக்கொண்டனர் கவியரங்கக் கவிஞர்கள்கவிஞர் ’கவிதை …

>>

7. துரை.தனபாலன்/ தலைமுறை பேதம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் காதலும் வீரமும் மட்டுமே இலக்கியம்;அது அந்தக் காலம் – இன்றோ,காலைக் காப்பியில் தொடங்கி,இரவு உணவு வரையும்,காத்து நிற்கின்றன ஆயிரம் பிரச்சினைகள்;அவற்றிற்குத் தீர்வு காணஆட்களில்லை இங்கு…காவிய காதலுக்கும், காப்பிய வீரத்திற்கும்நடைமுறை வடிவமைக்க – …

>>

6. பி.ஆர்.கிரிஜா /எண்ண அலைகள் !

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் புத்தகங்களைபுரட்டிப் பார்த்தேன்.எழுதியதெல்லாம்எடுத்துப் பார்த்தேன்.மூளை முழுதும்கசக்கிப் பார்த்தேன்.எண்ணி எண்ணிநிலை குலைந்தேன்.கவிதை ஒன்றும் பிறக்கவில்லை.பறவை ஒன்று பறந்து வந்துபடபடவென்று சிறகடிக்கசாளரம் வழியேஎட்டிப் பார்த்தேன்.கவிதை பிறந்தது

>>

5. அன்பாதவன்/ஏதிலியாய் அலையும் மியாவ் குட்டி

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் தாய்ப்பூனையால் நிராகரிக்கப்பட்ட குட்டியொன்றுஒதுங்குகிறது தெருவின் வீட்டு வாசல்களோரம்கதவுகளேதும் திறக்கப்படாமல் துளிப்பால் தரவும் எவருமில்லை.ஒட்டியவயிறோடு தனித்தலையுமதனைநடுங்கச்செய்கிறது கூதல் பனிக்காற்றுபழையக் கோணியோ பலனில்லா அட்டைப்பெட்டியோ போதும்கடந்துவிடலாமிக்குளிரை.ஜீவன் இரட்சிக்க ஏதோ உணவு…ம்ஹூம் வாய்ப்பேயில்லைதொலைக்காட்சி சப்தத்துள் மானுடர் …

>>

3. லட்சுமி பாலா/முணுமுணுக்கும் பக்கங்கள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் அந்தக் கங்குள் இரவில் எழுதி முடித்த கவி புத்தகம்கந்தக மண்ணிலிருந்து வந்த செந்தணலாய் பக்கங்கள்பசிக்கடியில் எழுதிய கவிதைஆதலால் தான் திருப்பும் போது சத்தமிடுகிறதோபாமரனின் சிலுவை வாழ்க்கையைப்பேசுவதால் முணுமுணுத்ததோகண்ணாடியில் அடைபட்டமூன்று பந்தயக்காரர்களின் ஓட்டத்தில்,மரண …

>>

2. கி.சரஸ்வதி/ஜன்னலற்றவள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் நகரத்தில் இருக்கும் மூத்த மகனின்வீட்டுக்குக் குடிபெயர நேரிட்டது அம்மாவுக்குஅதுகாறும் இருந்த இருண்ட அடுக்களைஇவளுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்த நாளைச்சிறிது கண்ணீரோடுதான்அவள் ஏற்றுக்கொண்டாள்புத்தம்புதுக் கண்ணாடி அடுப்புபீங்கான் கிண்ணங்கள்பளபளக்கும் பாத்திரங்கள்நவீனச் சமையலறைஎன்று ஏகபோக …

>>