சௌமியா ரெங்கராஜன்/சொல் எனும் மந்திரம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

நம் நா, உதிக்கும் முதல் சொல்லுக்கு
ஏங்கிய உலகம்!
நம்மைப் பேசாமலிருக்கக்
கடவுகிறது…
நம் நா, ஒருவரைப் பேசியே
வாழவைக்கிறது!
சிலரைப் பேசாமல் வீழ்த்துகிறது…
நம் நா, இனிய சொற்கள் கொண்டு மயக்குகிறது!
கொடும் சொற்களால் கொல்கிறது…
நம் நா, விதைகள் வேரூன்றி விருட்சமாக நீரூற்றுகிறது!
சிலரின் ஈரக்குளையை வேரோடு அறுக்கிறது…
நம் நா, பாசத்தினால் அனைவரையும்
கட்டி அணைக்கிறது!
பாசகயிரால் கழுத்தை நெருக்குகிறது…
நம் நா, மந்திரங்கள் சொல்லித் தருகிறது
மாயக் கூற்றுகளால் மயக்குகிறது…
நம் நா, நிறைகளை நிரம்பக் கூற பழக்கி,
குறைகள் கூற குறைத்துப் பழக்குவோம்ஞ்.
நம் நா, பெட்டகத்தினுள் பாத்திரமாக
அடைக்கப் படவேண்டும்,

அது விலைமதிப்புள்ள பொக்கிஷம்!

தீயவற்றைப் பேசி உறவுகளைத் தொலைக்காதீர் ,
கொடும் சொல் தூவி மதிப்புகளை இழக்காதீர்!